(Reading time: 25 - 49 minutes)

“காவ்யா நான் ஏன் இப்படி,..” தர்ஷினிப் பேசத்தொடங்கும் முன் அவள் முகத்திற்கு நேரே கையை நீட்டி மறித்தாள் காவ்யா.

“போதும் உங்கிட்ட எக்ஸ்ப்ளனேஷனுக்காக நான் வரல, வாட் எவர், நீ ஹச் ஆர்ட பேசுறதுக்கு முன்னாடி எங்கிட்ட ஏன் சொல்லல?”

“நான் சொன்ன நீயும் அந்த நிமிஷமே..”

“ம், அந்த நிமிஷமே ரிசைன் பன்னிருவேன்னு நினைச்சுட்ட இல்ல அதான் எங்கிட்ட சொல்லல..!” – காவ்யா

ஆமாம் என்பதுபோல் தர்ஷினி தலையசைக்க, இப்பொழுது முகம் மலர்ந்தாள் காவ்யா..

“கரெக்ட் மச்சீ, யூ ஆர் ரைட்.. நானும் ரிசைன் பன்னிட்டேன்…!” என்று சத்தமாக கூறி, தர்ஷினியை பிடித்து இழுத்து சுற்றினாள் காவ்யா. தன் நெற்றியில் கையைவத்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்தாள் தர்ஷினி.

“ஏண்டி இப்படி பன்னின..நீ இந்த மாதிரி ஏதும் செய்யக்கூடாதுனுதான் நான் உங்கிட்ட சொல்லல..”

“தெரியும்.. நான் என்னமோ ரொம்ப ஹேப்பிய அந்த ப்ரவஷன்ல இருந்த மாதிரி சொல்ற, நானே பல்ல கடிச்சுட்டு நீ எப்படா இந்த வேலைய குவிட் பன்னுவனு வெயிட் பன்னினேன்..இப்ப டபுள் ஹேப்பீ.. சொல்லு அடுத்து என்னப் பன்னபோற?” – காவ்யா

சிறிது நேரம் மௌனத்திற்கு பிறகு ஒரு பெரும் மூச்சை நிதானமாக வெளியிட்டவள்..”இங்க பாரு காவீ.. நீ எல்லா இடத்திற்கும் எங்கூட வால் பிடிச்சுட்டு வர முடியாது.. புரியுதா?”

“அப்புறம்”

“கொஞ்சமாவது டாடீக்கிட்ட இருந்து பொருப்ப ஷேர் பன்னிக்கோ…என்னோட சப்போர்ட் உனக்கு உண்டு பட் இதுக்கு மேலயும் உன்ன கயிட் பன்ன முடியாது.. வர வர எனக்கு நீ ஸ்பாயில் ஆகுறதுக்கு நான் தான் ரீசனோன்னு தோணுது!” – தர்ஷினி

“சரி… உன் வால இனிம நான் பிடிக்கல.. வாழ்கையில இதுவரைக்கும் வராத பருப்பு பொருப்பு எல்லாம் காவ்யாவிற்கு நீ வேலைய விட்டதும் வந்துரும்னு ஐடியா சொன்ன அறிவாளி யாரு..!” – காவ்யா

“காவீ”

“கேள்விக்கு பதில்”

“இல்ல யாருமில்ல நானே சுயமா யோசிச்சேன்…!”

“நல்லது அடுத்து என்னப் பன்னபோற?”

“பக்கதுல இருக்கிற ஸ்கூல டெகினிக்கல் ஜாப் ஒன்னு இருக்கு.. அதான் அங்க ஜாயின் பன்னலாம்னு!”

“எதுக்கு ஸ்கூல் சூஸ் பன்னினீங்க மேடம்?”

“இல்ல அவங்க, விஷ்ணுவ அந்த ஸ்கூல தான் சேர்க்க போறாங்க, அதான் நானும் அங்கேயே..ஜாயின் பன்னுறேன்”

“சோ, இதெல்லாம் சிவா அண்ணா ஐடியா இல்லயா?”

“ஐயோ ப்ராமிஸ்,” தலைமேல் கையை வைத்தவள். “இதபத்தி அவங்களுக்கு ஏதும் தெரியாது காவீ!”

“ம்ம் குட் நீ செஞ்ச உருப்படியான காரியம் இதுதான், ஐ டூ ஹேப்பி பட் நீ எங்கிட்ட சொல்லிருக்கலாம். ஆனா, எனக்குப்பிடிக்காத ஜாப்ல இருந்து ஃப்ரீடம் கிடைச்சுட்டு!” – காவ்யா

“அங்கிள்ட சொல்லிட்டீயா..!”

“இன்னும் இல்ல பார்க்கலாம் டைம் பார்த்து சொல்லனும்.. பட் தர்ஷூ இந்த ஹேப்பியஸ்ட் மொமன்ட்ட நாம செலிபிரேட் பன்னனும்.. சொல்லு எங்க போலாம்?” - காவ்யா

“ஹலோ அதெல்லாம் இருக்கட்டும், நீ செய்த காரியதுக்கு சம்பந்தம் அங்கிள் கேட்டா நான் என்ன பதில் சொல்றது.. போததற்கு இப்ப ரிஷி வேர. ஏண்டி அவரோட நிச்சயம் ஆகுற சமயம் இப்படி பன்ற, உனக்கு கொஞ்சம் கூட பொருப்பில்லனு அவங்க வீட்ல நினைப்பாங்க.”

“அவன் யாரு உன்னையும் என்னையும் கேள்வி கேக்கிறதுக்கு.. முதல்ல உன் அங்கிளுக்கும் அவனுக்கும் சிங்க்சா போடுறது நிறுத்து..”

“காவீ, நீ அனாவசியமா ரிஷிய ஒதுக்குரியோனு தோணுது.. உங்க எங்கேஜ்மென்ட்டுக்கு முன்னாடி நீ ஏன் அவர ஒரு தரவ மீட் பன்னக்கூடாது.?  ஜஸ்ட் டூ அண்டர்ஸ்டேன்ட்!” – இதை உண்மையில் படு சீரியசாய் கேட்டாள்.

“ச்ச்… எங்கேஜ்மென்ட்டா? அதெல்லாம் ஒன்னும் நடக்கப்போறதில்ல ரிஷிய மீட் பன்றது அட்டர் வேஸ்ட்.. ஹீ இஸ் எ ஃபொட்டோ காப்பி ஆஃப் சம்பந்தம்.. இரண்டு பேரும் என்னபத்தி யோசிக்காம அவங்களே ஏதோ டிசைட் பன்னிகிட்டா நான் அதுக்கு பொருப்பில்ல!”

“காவீ, நீ இத அவங்க வீட்டில இருந்து பார்க்க வர்ற முன்னாடி சொல்லிருக்கனும் இல்லயா?”

“அதுக்கு எனக்கு யாரு ஆப்பர்ச்சூனிட்டி கொடுத்தா தர்ஷூ, நீ எல்லாத்தையும் பார்த்துட்டு தானே இருந்த.,”

“அவங்க ஃபேமிலி ரொம்ப ஸாஃப்ட் காவீ, விஸ்வம் அங்கிள் கொஞ்சம் ஹார்டு பெர்ஸ்னாலிட்டினாலும் ஃபேமிலி வந்துட்டா ஹீ இஸ் எ ஆசம் பெர்சன்.. நீ பார்த்ததானே!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.