(Reading time: 25 - 49 minutes)

“ம்ம்.. ஆமாம் அவங்க யார் மேலேயும் எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. ஆனா ரிஷி..அவன் என்ன நினைக்கிறான் என்ன பன்னபோறானு ஜட்ஜ் பன்னவே முடியல, நீ சொன்னியே அவன மீட் பன்னுனு அத ஏன் அவன் செய்யல..இதெல்லாம் பக்க பிஸ்னஸ் டீல்.. அவன பொருத்தவரையில் இந்த மேரேஜ் கூட ஒரு அக்ரிமென்ட்..”

“காவீ, நீ லூசுமாதிரி யோசிக்காம, அவர்கிட்டா பேசிபாரு..அவரவிட நீ சின்ன பெண் அதனால கூட அவர் எங்கேஜ்மென்ட்டுக்கு அப்புறமா பேசலாம்னு நினைக்கலாம்ல”

“தர்ஷூ,  நீ தான் அப்பாவிதனமா யோசிக்கிற, வீட்டுல நமக்கு தெரியாம ஏதோ நடந்திருக்கு, இல்லனா திடீர்னு இவன் பெண் கேட்டது இவர் ஏன் வருஞ்சு கட்டிட்டு போறாரு..முதல்ல அத ப்ரேக் பன்னனும் அப்புறம் பார்க்கலாம் ரிஷியா நானானு!”

தர்ஷினியால் ஏதும் பேச முடியவில்லை, காவ்யாவையே பார்த்திருந்தாள் பெண், ஏதாவது செய்து இருவரையும் இணைக்க முடியாதா? எனும் திசையில் ஓடியது அவள் எண்ணம்.. அவள் முகத்திற்கு முன்னே விரலை சொடுக்கி அவளை கலைத்து புன்னகைத்தாள் காவ்யா.

“சரி சொல்லு ப்ளான் என்ன? லெட்ஸ் செலிப்ரேட் திஸ் ஈவன்ட்!” கண்கள் சிமிட்டினாள் பெண்.

“நாளைக்கு போலாம் நிச்சயமா!” சொல்லியவள் தர்ஷினி.. மனதில் அலை அலையாய் எண்ணங்கள்.. கிடைத்த அவகாசத்தில் எப்படி ரிஷியை அழைப்பது.. காவ்யாவை சந்திக்க வைப்பதென எண்ண ஓட்டம்.. இதை உணராத முகமாய் புன்னகையுடன் இன்னும் ஏதோ  ஏதோ கதை சொன்னாள் காவ்யா. கேட்பதற்கு தர்ஷினிக்கு கசக்கவா போகிறது?

தொடரும்

Episode # 08

Next episode will be published on 27th July. This series is updated fortnightly on Thursdays at 6pm.

{kunena_discuss:1120}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.