(Reading time: 25 - 49 minutes)

“இல்லடா மச்சீ அது வந்து, இப்ப எல்லாம் பீர கூட தொடுறதில்ல..” – விக்னேஷ்

“ஏண்டா?”

“அது வந்து, ஷீ டோன்ட் லைக் டிர்ங்க்ஸ்..”

“டேய், இப்ப தானடா வீட்ல பேசுறாங்கன்னு சொன்ன, அதுகுள்ள இப்டி பொண்டாட்டி தாசனா ஆயிட்டியே..! சரி போய் தொலை, கல்யாணம் என்னாச்சு?”

“ம்ம், அதை ஏன் கேக்குற, எல்லாம் செட் பன்னி ஒழுங்கா வரும்போது தான், உன் ஆளு உள்ள புகுந்து ஆட்டத்தை கலச்சுட்டாங்களே…ஆக, கல்யாணம் ஸ்வாகா, பெண் பார்க்கும் படலத்தோட தொங்கிண்டு இருக்கு…”

“ஏய், இதல்லாம் ஓல்டு ஃபேஷன், பேசாம பொண்ண தூக்கிடலாம்?” – ரிஷி

“தூக்கலாம் , தூக்கலாம் அதுக்கு முன்னாடி அவ அண்ணன் நம்மள தூக்கிடுவான், அவாண்ண உயிரு..அவனுக்கு..”

“யூமீன், இளா, ச்ச அவன் ரொம்ப சூப்பர்ப் டைப், ஜெண்டில்மென், அவன பார்த்துதான் உனக்கு பயமா?”

“நானே கேட்கனும்னு நினைச்சேன், ஹவ் ஸ் ஹீ?”

“வெரி இன்டலிஜன்ட் ஃபெல்லோ, விக்கி.. ஐ அட்மைர் ஹிம் அட் சம்டைம்ஸ்.. ஹார்டு வொர்கிங்க் ஃபேல்லோ.. இப்போதைக்கு ரீசென்ட் ட்ரன்ட்ஸ்ல ரிசர்ச் வொர்க் ஃபுல்லா இலா தான் ஹேண்டில் பன்றாரு..உனக்கு புரியனும்னா உங்க கீர்த்த்னா மேம்மோட டார்கெட்கு எல்லாம் என்னோட சைட் ஆப்பொனன்ட் இலா தான்.”

“ம்ம், இலா ஒரு ஸ்ட்ராங்க் பெர்ஸ்னாலிட்டி, ரிஷி, அவங்க ஃபேமிலியே அப்டித்தான், அவங்க அம்மாவ மீட் பன்னினா உனக்கே புரியும்.. பட் கீர்த்தனா மேம்க்கு காம்பிட்டெட்டர்னு ஒருத்தன் வரனும்னா அவன் இனிமேல் தான் பொறக்கனும்! – விக்னேஷ்

“அதெல்லாம் பொறந்தாச்சு, சரி உன்னோட ஆள கண்ணுலயே காட்ட மாட்டிக்கிர?”

“டேய் அதெல்லாம் ஒன்னுமில்ல, நான் பார்த்தே நாலுமாசம் ஆச்சு, வேலைய வேற விட்டுடா போல, அவங்க வீட்டுக்கும் போக முடியாம, அவளையும் பார்க்க முடியாம ஒரேஅவஸ்தைடா..”

“உண்மையிலயே தெரியாம தான் கேக்குறேன், அவ உன்ன லவ் பண்றாளா, இல்ல நீயும் என்ன மாதிரி சிங்கிள் சைடு கோல்போட்டுட்டு இருக்கியா?”

“உன்னோட நிலைமையாச்சும் பரவாயில்ல ஏதோ பெண் பார்க்கும் வரைக்கும் ஸ்மூத்தா போயிருக்கு, இங்க அதுவே பாதிதான், இவ காவ்யா மாதிரி சாஃப்ட் கேரக்ட்டரும் இல்ல.. “

“அடப்பாவி, நீ பார்த்தியா அவ சாஃப்ட்டுனு, அவ ஒரு மினி இராட்ச்சி.. நான் பெண் பார்க்க அன்னைக்கு அங்க போகல, போயிருந்தா என்னோட நிலைமை தெரிஞ்சுருக்கும், ஏதோ, சம்பந்தம் அங்கிள் மேல ஒரு நம்பிக்கை இருக்கு அவ்ளோதான், நீ தான் அவள ஸ்டேஷன்ல பார்த்தியே, மினி பத்திரகாளி, விட்டா செவிட்ட பேத்திருப்பா, நான் முந்தினதால தப்பிச்சேன்…”

“டேய், நீ அன்னைக்கு பன்னினது ரொம்ப தப்பு, எல்லார் முன்னாடியும் சிஸ் கன்னதுல , தப்புடா அது.. “

ரிஷி மௌனமானான். “ஆமா விக்கி ஐ ஃபீல் ஃபார் இட், பட் அன்னிக்கு அவகிட்ட பேசி இலா பத்தி புரிய அவளுக்கு  வச்சிருக்கவே முடியாது..ஷீ இஸ் அடமென்ட்..வெரி அடமென்ட்.. பட் ஐ லைக் தட் கேரக்ட்டர், “ – ரிஷி

“டேய்.. என்ன சொல்லிட்டு நீ தான் சீக்கிரமா பொண்டாட்டி தாசனா ஆகப்போறன்னு தெரியுது..!” – விக்னேஷ்

“இப்பவே, நான் காவ்யாதாசன் தான்.. இனிமே ஆகுறதுக்கு கல்யாணம் மட்டும் தான் பாக்கி..”

“எப்படா கல்யாணம்?”

“அதான் ஆடி ஆவணினு ஏதோ சொல்றாங்களே, வெயிட்டிங்க் ஃபார் இட்..  பட் ஐ மிஸ் ஹெர் பேட்லீ”, ரிஷி இதை இரசித்து சொன்னான், உடனே காவ்யாவை பார்க்க வேண்டும்போலிருந்தது அவனுக்கு. “என்னோடது இருக்கட்டும், உன் மேட்டருக்கு என்ன பன்னப்போற?“

“உங்கிட்ட நானே கேட்கனும்னு நினைச்சேன் அத்தைய பார்த்துக்க ஒரு நர்ஸ் வேணும்னு சொன்னல்ல, ஐ வில் ஆஸ்க் செல்வி ட்டூ டூ தெட்..” – விக்னேஷ்

“டேய், அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. செல்வி சும்ம ஜாலிய வீட்ல இருக்கட்டுமே..ஏண்டா அவங்கள டிஸ்டர்ப் பண்ற” –ரிஷி

“அதுகில்லடா, அவ இலா மாதிரி செம ஃப்ரவஸ்னல் வொர்க்கர், அத்தைய நல்ல பார்த்துப்பா, உன் வீட்டில அவ இருந்தா சேஃபும் கூட, …”

“ஆமா ஆமா உனக்கும் சைட் அடிச்ச மாதிரி ஆச்சு, டேட்டிங்க்க்கு ஒரு சேஃப்டி ஸ்பாட்.. நல்ல யோசிக்கிரடா, டேய் எங்கப்பா உன்ன அவரோட ரைட் ஹேண்ட வச்சிருக்கிறதில தப்பே  இல்ல..”

“டேய், உதை வாங்கப்போர” என ரிஷியின் சட்டையைப் பிடித்து அவனை போர்டு மீட்டிங்க் ரூமை நோக்கி இழுத்துபோனான், அவனது கல்லூரி நண்பன் விக்னேஷ்.

ர்ஷினியைப் பார்த்ததும் தாவி வந்தாள் விஷ்ணு, அவளை அள்ளி தோளோடு அனைத்து நின்றவளின் கண்கள் மெதுவாக நிமிர்ந்து, சிவாவைப் பார்த்தது. “ஹப்பா, இளவரசிய மகாராணி கையில கொடுத்தாச்சு, இனிமேல் உங்க பொருப்பு தான்..” – சிவா

“இளவரசி என்னிக்கோ என் பொருப்புக்கு வந்துட்டாங்க, ஆனா மகாராணி தான் வெயிட்டிங்க், மகாராஜா கையைப்பிடிக்க..” – இதை சொல்லும்போது கண்ணம் சிவந்தது தர்ஷினிக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.