(Reading time: 25 - 49 minutes)

புதுபிக்கப்பட்டிருந்த அந்த வீட்டை தர்ஷினியுடன் நின்று பார்த்திருந்தவன், தர்ஷினியின் இந்த வார்த்தைக்களுக்கு, கண்களை பதிலாக்கி அவளை பார்த்தான், விருட்டென்று நின்றிருந்தவளின் இடையை சுற்றி தன் வலக்கையால் அவளை முன்னால் இழுக்க, பதறி விலகியவள், “ஷ்.. விஷ்ணு.. பிரின்ஸஸ் முன்னாடி என்ன பன்றீங்க…!” செல்லமாக கடிந்து அவனை விலகினாலும் அவள் இதயம் தாருமாறாய் துடிப்பது அவளுக்கு புரிந்தது. அவனது செய்கையில் ஒரு உரிமை இருந்தது, ஆனால் அத்துமீறல் இல்லை அது அவள் பெண்மைக்குப் புரிந்தது..அவனை விட்டு விலகி நின்றாலும் அவனது கூர்மையான பார்வை அவளை துளைப்பதை ஏனோ தடுக்கவும் முடியாது, ஏற்கவும் முடியாது தவித்தாள் பெண். வீட்டின் முகப்பிலிருந்து, ஒவ்வொரு அறையும் அழகாக கலை இரசனையோடு புதுப்பித்திருந்தான்.

“கீழ, அம்மா ரூம், நானும் விஷ்ணுவும் மேல, … மகாராணி படியேறி வந்தா, அதையும் பார்த்திடலாம்..”

“மேல என்ன புதுசா இருக்கு, அப்புறமா பார்த்துக்கிறேன்.. “ ஏதோ ஒரு இனிமையான பயம் அது மனதை நனைக்க அவள் அவனைப் பார்த்தாள். இவளைப்பார்த்து பெரு மூச்சை வெளியிட்டவன், “கீழயும் மேலயும் நிறைய வித்யாசமிருக்கு வந்தால் புரியும், அப்புறம் உன் இஷ்டம்..”, அவனது முகத்தில் சிரிப்பில்லை, அது பொய்க்கோபம் புரிந்தது, சிரிப்புடன் அவள் படி ஏற எத்தனிக்கும் போது புடவைத்தலைப்பு மிதிபட்டு, தடுமாறி விழப்போனாள், கண நேரம் கூட அவன் தாமதிக்காது அவன் ஒருகையில் விஷ்ணுவையும் ஒரு கையில் அவளையும் பிடித்து நிறுத்தினான். விஷ்ணுவிடம் இப்போது மழழை புன்னகை, டாடி நீங்க கேட்ச் பிடிச்சிட்டீங்க” இன்னுமாய் சிரித்தாள் குலுங்கி குலுங்கி. அவளை தூக்கி தோளோடு சேர்த்தான், கண்கள் இன்னும் இவளின் மீது, ஒரு கரம் அவள் இடக்கையின் மேல் பகுதியைப்பற்றி இருந்தது, “உன்னையும் தூக்கிக்கிட்டுமா?” குறும்புடன் அவன் கேட்க, தன்னிலை உணரப்பெற்றவள் “ஆசை, தோசை, அப்பளவடை.. “ என்றவாரே, அவனிடம் பழிப்பிக்காட்டி படிகளில் தாவி ஏறினாள்.

மேல்மாடியின் படிகளில் ஏறியவள், தன் முன் விரிந்த ஹாலைப்பார்த்து பார்த்தபடி நின்றாள், பளீரென மின்னிய நாங்கு சங்கலிக்குள், தாழ்வாய், ஆனால அகலமாக ஒரு தேக்குப்பலகை, அது ஊஞ்சல். தர்ஷினிக்கு ஊஞ்சல் என்றால் ஒரு மோகம், அதைப் பார்த்ததும் கண்கள் விரிந்தது. கடந்து சென்று விரிந்திருந்த ஒவ்வொரு அறையிலும் ஆடம்பரம் தெரிந்தது, ஆனால் அது இரசிக்கும்படியாய் இருந்தது. விஷ்ணு துள்ளிக் குதித்து ஓடி ஒரு அறையில் இருந்த பொம்மைகளை அள்ளிக்கொண்டு வந்து ஹாலில் போட்டு அமர்ந்தாள், அவளது கவனம் பொம்மையிடம் தாவியதும், இவன் கவனம் அவளிடம், “இப்போதைக்கு இது என்னோட ரூம்”, ஒரு கதவைதிறந்து, அதன் மீது சாய்ந்து அந்த அறைக்கு வழிகாட்டினான், சுற்றி, சுற்றி, கண்களை உருட்டியவள், தயங்கி தயங்கி, அந்த  அறையினுள் நுழைந்தாள், அகலமாக விரிந்து கிடந்த படுக்கை, தரையில் கிடந்தது, இன்னும் மேல்காகிதங்ககள் பிரிக்கப்படாது, அவைகள் புதிதென காட்டியது. கேள்வியாய் அவனை ஏறிட, “கட்டில் போட்ட விஷ்ணு, ஏறவும் இறங்கவும் செய்வா, நாம நல்ல தூங்கிட்டு இருக்கும்போது அவ கட்டில்ல இருந்து இறங்கினான தெரியாதில அதான்” – அவனுடைய விளக்கத்திற்கு புன்னகைத்தவள், அந்த படுக்கையில் அவன் துணையாக அவளையும் சேர்த்தது உள்ளே புயலைக்கிழப்பியது. காதல் தன் வேலையைக்காட்டத் தொடங்கியது.

இன்னும் அவன் முடித்தபடியாய் இல்லை, மீண்டும் தொடர்ந்தான், “அப்புறம் கட்டில் போட்டாலும் சிரமம் தான், நம்ம இஷ்டத்துக்கு உருள முடியாது..வெயிட் தாங்காம கால் ஏதாச்சும் முருஞ்சா, அப்புறம்” அவனதது குறும்பு பார்வை பெண்ணவளைத் தொட்டது.

“என்ன குண்டுனு சொல்றீங்களா..என்னோட வெயிட் தாங்காதா உங்க வீட்டு கட்டில்” அவனுக்கு எதிரே நின்று கண்களைப்பார்த்து கேட்டாள். அதற்காகவே காத்து நின்றவன் போல், சாய்ந்திருந்த கதவிலிருந்து முன்னால் சாய்ந்து..அவள் பின்புறமுள்ள நிலையில் இரு கைகளைப்பதித்தான், கிட்டத்தட்ட அவன் கைசிறையில் அவள். கண்கள் தானாக தாழ்ந்துகொண்டது…மறுபடியும் இதயம் தாறுமாறாய் துடிக்க எங்கே அது வெளியே விழுந்துவிடுமோ என்னும் அளவு பயம் அவளைத் திண்க, அவனோ மூச்சுக்காற்றை மெதுவாக விட்டு, தன் விரலால் கவிழ்ந்திருந்த, முகத்தை நிமிர்த்திப்பார்த்தான், “பார்க்க கொஞ்சம் கும்முன்னு தான் இருக்க, இருந்தாலும் ஒரு தடவ தூக்கிப்பார்த்தா, உன் வெயிட்டுக்கு ஏற்ற மாதிரி கட்டில் வாங்க வசதிபடும்!”

தினறிப்போனாள், சொன்னதை அவன் செய்ய துணிந்தான், அவள் விலகி ஓட நினைக்கும்போது, விருட்டென்று அழுத்திப்பிடித்த அவன் கை, நொடி பொழுதில் அவள் யோசிக்கும் முன் அவளை இழுத்தது, அந்த பிடியின் விசையில் பூவாய் நின்றவள் காற்றைக்கிழித்து அவன் மார்பை முட்டி நின்றாள், இருகரம் அவள் இடையை வழைத்து இன்னும் அவனோடு இருக்கியது. அவனுடைய நெருக்கத்தை கட்டுப்படுத்தி தன் இரு கரங்களையும் மார்பில் ஊன்றி, தலையையும் சாய்த்து கவிழ்ந்து கிடந்தவளின் முகத்தை மெதுவாக நிமிர்த்த, கண்கள் மூடிக்கிடந்தது.

“தர்ஷினி” அவன் மதுரமாக அழைத்தான். விழிகளைத் திறக்கும்போது, இரண்டு சொட்டு கண்ணீர் கன்னத்தில் விழுந்து ஓடியது.

“ஏய், என்னாச்சுடி” அவன் பதற்றமாய் கேட்க, அவளது மௌனம் இன்னுமாய் வதைத்தது அவனை. அவளை இழுத்து ஊஞ்சலில் அமரவைத்தான். மண்டியிட்டு அவளுக்கு நேரே தரையில் அமர்ந்தவன், “நீ என்ன யோசிக்கிறனு தெரியும் தர்ஷூ, உங்கிட்ட அளவுக்கு மீறி உரிமை எடுத்துகிறேன் இல்ல..!” – இப்போது குழந்தையாய் அவன் முகம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.