(Reading time: 22 - 43 minutes)

சிவாவின் முகம் விழுந்துவிட்டது. அவன் அந்த நொடி ஏதும் பேசாது மௌனமானான். காவ்யாவின் குறும்பு கண்கள் ஒருமுறை சுருங்கி விரிந்தது.

“ஐயோ, என்னாச்சு ப்ரோ உங்கக்கிட்ட கூடவா அவ சொல்லல?”

இல்லை என்று தலையசைத்தவன் பொறுமை இழந்து, “அவ எங்க போயிருக்கா காவ்யா? உங்களுக்கு கண்டிப்ப தெரிஞ்சிருக்குமே?” – என்றான்.

அவனுடைய சோர்ந்துபோன முகத்தில் தெரிந்த அப்பட்டமான ஏமாற்றத்தைப் பார்த்து காவ்யாவின் மனம் கனிந்துவிட்டது. இதற்குமேல் அவனை காயவிட்டால் தர்ஷினி வறுத்து எடுத்துவிடுவாள் என நினைத்தவள்.

“ஹலோ ஹலோ, ரொம்ப ஃபீல் பன்னாதீங்க, உங்க ஆளு எங்கையும் போகல பக்கத்தில இருக்கிற, கல்யாண துர்கை கோவிலுக்கு தான் போயிருக்கா..அங்கிள் இன்னும் வரல..!” – காவ்யா

சிவாவின் முகம் மலர்ந்தது. “எப்ப வருவா?” – சிவா

“அவ கோயில சுத்தோ சுத்துனு சுத்தி, நெய் தீபம் ஏத்தீட்டு வருவா” – காவ்யா

“நீங்க போகலயா காவ்யா?” – சிவா

“தர்ஷூக்கு கடவுள்கிட்ட பொடுறதுக்கு ஏகப்பட்ட அப்ளிகேஷன், அதுவும் பட்ரிக்குலரா அந்த கல்யாண துர்கை ரொம்ப பவர்ஃபுல், அதான் மேடம் அங்க போயிருக்காங்க, நீங்களும் வேணா அங்கபோங்க ப்ரோ, இரண்டு பேர் வேண்டுதலும் நிச்சயமா நிறைவேறும்” – காவ்யாவின் குறும்பு வார்த்தைகளில் லேசாக தடுமாறியவன்,

“ஏன் காவ்யா கல்யாண துர்கைட்ட போடுறதுக்கு உங்களுக்கு அப்ளிகேஷன் ஏதுமில்லையா? எங்கிட்ட சம்பந்தம் சார் சொன்னத வச்சு பார்க்கும்போது நல்ல விசயம் இருக்கும்னு நினைச்சேன், ஆனா நீங்க இப்படி சொல்றீங்க, உண்மைய சொல்லுங்க எப்ப கல்யாண சாப்பாடு போடப்போறீங்க?” –சிவா

கல்யாண பேச்சை எடுத்ததும் தன்னையறியாமல் மனதில் தோன்றிய ரிஷியின் முகத்தை வழுக்கட்டாயமாக, ஒதுக்கிவிட்டு, ஒரு நோடி கலைந்த அவள் முகம் மீண்டும் மலர்ந்தது..

“அத விடுங்க ப்ரோ, டாடிக்கு வேர வேலையில்லை.. நீங்க எப்ப கல்யாண துர்கைகிட்ட அப்ளிகேஷன் போடப்போறீங்கன்னு சொல்லுங்க?”

அப்ளிகேஷன் போட்டாலும் போடாட்டிலும் தர்ஷினி எனக்கு தான்” – இதை ஆனந்தமாக இரசித்து கூறினான் சிவா

“வாவ் சூப்பர் ப்ரோ!, இத எப்போ அவகிட்ட சொல்லப் போறீங்க?” – காவ்யா ஆர்வமாய் மின்னும் கண்களுடன் கேட்டாள்.

“நீங்க வேர, அவளுக்கு எல்லாம் தெரியும், ஆனா சரியான அமுக்கமான ஆளு, போனதரவ புக் ஷாப்ல மீட் பன்னினப்பவே நான் என்னோட நம்பர் குடுத்தேன் பட் அவ ஒரு கால் கூட இன்னே வரைக்கும் பன்னல, கடைசியா பொறுமையிழந்து நானே வந்துட்டேங்க” சிவாவின் வார்த்தைகளில் துடிப்பும் காதலும் இருந்தது. காவ்யாவிற்கு தான் அதிர்ச்சி.

“ஹலோ, இது எப்ப நடந்தது? ஒரே ஒரு நாள் அவள தனியா விட்டா இவ்ளோ மேட்டர்ஸ் நடத்திருக்கு, ஐயோ பாவம் ஒரு அப்பாவி பேரோட லவ்வ சேர்த்துவைக்க ஹெல்ப் பன்னலாம்னு நான் நினைச்சா, நீங்க இரண்டு பேரும் முகூர்த்தம் வரைக்கும் போயீட்டீங்க..!” - காவ்யா

“உங்க ஃப்ரண்டு அவ்ளோலாம் வொர்த் இல்லீங்க நான் எங்கயாவது கடத்தீட்டுபோயிதான் கல்யாணம் பன்னனும்,  இல்லனா தொட்டதுக்கெல்லாம் அப்பாட்ட கேக்கனும்னு சொல்லுவா” – சிவா

“என்னது… தொடுறதுக்கெல்லாமா?  சரியில்லையே,  இது என்னமோ மல்லுகட்டு விவகாரமா மனசுக்குபடுது, சீக்கிரமா மாணிக் அங்கிள்ட ஒரு பிட்ட போட்றவேண்டியதுதான்.. – காவ்யா

“ஐயோ, நீங்க வேர, கொஞ்ச நாள் ப்ரீயா விடுங்க..இப்பவே அங்கிள்ட போன நிச்சயம் மல்லுகட்டு விவகாரமாகி பஞ்சாயித்துல முடுஞ்சுறும்” –சிவா.

இருவரும் புன்னகைத்தனர். அவர்களின் நகைப்பின் ஊடே,  காவ்யா கைகாட்டிய திசையில் தர்ஷினி தன் ஸ்கூட்டரில் வந்தாள். அவள் கட்டியிருந்த சிவப்பு சில்க் காட்டன் புடவை காற்றில் அலைபாயாதாவாறு முந்தானையை இழுத்து முன் இடுப்பில் சொறுகியிருந்தாள். லேசான சந்தனக்கீற்றும் குங்கும கீற்றும் நெற்றியில் மின்ன அவள் வந்து இறங்கும்போது, காவ்யாவின் கண்களும் சிவாவின் கண்களும் ஒருசேர மின்னியது. தர்ஷினி உடுத்தியிருந்த புடவை அவள் சிவாவின் மனைவியிற்காக வாங்கியது, இப்போது அது இடம் பெயர்ந்து அவள் மேனியையே தழுவி நின்றது. கொஞ்சமேனும் பொறாமையற்ற மகிழ்ச்சி காவ்யாவிற்கு தோன்றியது, தர்ஷினியின் காதல் மலர்ந்ததை அவள் முகமே காட்டியது. தன் வண்டியை நிறுத்திவிட்டு அருகே வந்தவள், காவ்யாவிற்கு புன்னகையை அளித்துவிட்டு சிவாவிடம் தன் பிரசாததட்டை நீட்டினாள், ஒற்றை விரலால் திருநீரை தொட்டவன் பார்வை முழுவதும் தர்ஷினியின் மீதே.

“நீங்க் எப்ப வந்தீங்க? ரொம்ப நேரமா வெயிட் பன்றீங்களா?” – தர்ஷினி

“ம்ம் இல்ல கொஞ்ச நேரம் தான், பட் காவ்யா கம்பெனி கொடுத்தாங்க..” – என்றவாரே அவன் காவ்யாவை ஏறிட, “சரி சரி, என் ஆள் வந்தாச்சு நீ கிளம்புன்னு சொல்றீங்க..” – காவ்யா

“ஹப்பா கரைக்ட்டா புருஞ்சுகிட்டீங்க” – சிவா

“ப்ரோ, டோன்ட் வொரி, அங்கிள் வர நிறைய டைம் இருக்கு, இரண்டு பேரும் அப்படியே நடந்து போனீங்கன்னா பீச்சதாண்டி நிறைய இடம் இருக்கு…அங்க போயி…” – காவ்யா

“ஏய் .. காவீ நீ உதை வாங்கப்போற” – தர்ஷினி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.