(Reading time: 22 - 43 minutes)

தோழியின் ஆழ்ந்த சிந்தனையை கலைக்க எண்ணி தர்ஷினி, “காவீ, முரட்டுத்தனமா கூட ஒரு பெண்ணோட மனச திருட முடியும்னு ரிஷி காட்டீட்டார்ல..” – குறும்பான அவள் கேள்விக்கு அவளை முறைத்த காவ்யா, “முதல்ல அவனுக்கு சப்போர்ட் பன்றத விட்டுட்டு, அங்கிள் லன்ச் ரெடி பன்னிடாரானு பாரு, ரொம்ப வயிறு  பசிக்கு.. “ – என்றாள்

“ம்கும்.. சாப்பாட்டு ராமி.. பார்த்து துலைக்கிறேன்.. ஆனா நீ என்ன சொன்னாலும் சரி ரிஷி ஹீரோதான்.. “ என்றவாரே காவ்யாவின் கண்ணத்தை தட்டிவிட்டு உள்ளே சென்றாள் தர்ஷினி..மறுபடியும் ஊஞ்சலில் ஆடியவாரே நடந்தவைகளை அசைபோட்டாள் காவ்யா. அந்த நொடியே தர்ஷினி சொன்னது நினைவு வர, உண்மையில் அவன் ஏதோ கள்ளத்தனம் செய்ததாக அவளுக்கு தோன்றியது. இதை இப்படியே வளர விடக்கூடதென அவள் மனம் அவளுக்கு எச்சரித்தது.. மலராத அவள் மனம் ரிஷியின் முரட்டுத்தனத்தை அரவே வெறுத்தது.

விஸ்வத்தின் அலுவலக அறையில் கோப்புகளின் ஊடே தன் தலையைப்பதித்திருந்த, கீர்த்தனாவின் சிந்தனையை “கீர்த்தீ..”  என்ற ரிஷியின் குரல் கலைத்தது. முகத்தை உயர்த்தி புன்னகைத்தவள்,

“என்ன அண்ணா…இந்தப்பக்கம்… அப்பா இருக்கிற திசைப்பக்கமே வர மாட்ட அவரப்பார்த்தாலே தெறிச்சு ஒடுவ…ம்ம்..?” என்று விழிகள் உயர்த்தி கேட்ட கீர்த்தனாவின் கேலியை இரசித்தவாரே அவள் அருகில் வந்தவன். டேபிளின் மேல் துள்ளி ஏறி அமர்ந்தான்.

“அப்பா இங்க இல்லனு தெரியும், நான் உன்ன பார்க்க தான் வந்தேன்” , என்றவாரே அவள் தலையை மெதுவாக தட்டினான்.

“ஐயாவின் தேவை என்னவோ? தங்களுக்கு என்னால் ஆகக்கூடிய காரியம் ஏதுமில்லையே?” என்றாள் விளையாட்டாக. ரிஷி தன் கைகளில் வைத்திருந்த சிறிய பார்செலின் பொம்மை பின்னப்பட்ட கார் சாவியை அவள் மேசை மீது வைத்தான். “கீர்த்தீ இது காவ்யாவோட கார் கீ, நீ அவ கார கொண்டுபோய் அவங்கவீட்டில விட்ரு..” – ரிஷி

“ஓ, கதை அப்படிபோகுதா? சார், இன்னும் காவ்யாகிட்ட நேர்ல பேசலன்னு நினைச்சேன்…ஆனா உன்னோட கார்ல ஊர் சுத்துர அளவுக்கு போயிருக்கு நல்ல இம்ப்ரூவ்மென்ட் தான்..” – கீர்த்தி

“கீர்த்தி ரொம்ப கற்பன பன்னாம, சொன்னத செய்.. நீ நினைக்கிற மாதிரி ஒரு இம்ப்ரூவ்மென்ட்டும் இல்ல... என்னோட ப்ரொடக்ஷன் மேனேஜருக்கும் காவ்யாவுக்கும் ஒரு சின்னப் பிரச்சனை.. காவ்யாவோட அவசர புத்தினால அது போலீஸ்ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு, அத சரிகட்ட போய், காவ்யாகிட்ட  கோபப்படுற மாதிரி ஆயிட்டு, இது ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்க் தான் ஆனா காவ்யா இத எப்படி எடுத்துப்பான்னு தெரில..”..

“ஓ அண்ணா, உங்களுக்குள்ள ஊடல்னு சொல்லு, ஊடல் எப்போதுமே காதலதான் முடியும்…!”

“முடியும் முடியும் என்னோட விஷயத்தில மட்டும் காதல் ஊடல போய்நிக்குது..சரி கார அவங்க வீட்டில விட்டுறு.” –ரிஷி

“அண்ணா,  உனக்காக பன்றேன் பட், என்னோட வொர்க முடிச்சுட்டு தான் போக முடியும். “ – கீர்த்தி

“ம்ம்..இப்டி மாங்கு மாங்குனு டாடிக்கிட்ட வேல பார்க்கிறதுக்கு, நீ என்னோட கம்பெனில ஜாயின் பன்னலாம்..” – ரிஷி

“கண்டிப்பா இல்ல, உன்னோட ஆஃபிஸ் வந்தா எனக்குனு ஒரு தனித்துவம் இல்லாம போயிடும்..ஸோ, நான் தனியா வொர்க் பன்னி சாதிக்கனும். என்னோட அம்பிஷன்ல தலையிடாம காவ்யாவ சரிகட்டுறத பத்தி யோசி…” – கீர்த்தி

“சொல்லுவடி..” என்றவாரே தங்கையின் கண்ணத்தை தட்டிவிட்டு நகர்ந்துவிட்டான் ரிஷி. தன் வேலைகளை முடித்துவிட்டு இரவு மெதுவாய் காவ்யாவின் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் கீர்த்தனா.

ர்ஷினியின் தாமரை முகத்தை பார்க்கும் எண்ணம் ஒன்றே, சிவாவை இரவும் பகலும் இழுத்து சென்றது. தன்னுடைய மாற்றம் சில நேரங்களில் அவனுக்கே விசித்திரமாய் இருந்தது. உண்மையில் காதல் இவ்வளவு இனிப்பானதென அவன் அப்போதுதான் உணர்ந்தான். பணி முடித்து காரை கிளப்பிக்கொண்டு வந்தவன், தர்ஷினியின் வீட்டிற்கு அருகே வண்டியை நிறுத்திவிட்டு மெதுவாக  நடந்துவந்தான். அவள் வீட்டின் அடுத்த வீட்டில் நடந்துகொண்டிருந்த கட்டட வேலைகளை மேற்பார்வையிட்டுவிட்டு வெளியே வந்தவனின் கண்கள் பூட்டியிருந்த தர்ஷினியின் வீட்டை மேய்ந்தது. அவனுடைய ஆவலையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும் வண்ணம், தர்ஷினியின் வீட்டில் எந்த சலனமும் இல்லை. அவனுடைய கவனத்தை பின்னாலிருந்து ஈர்த்தது காவ்யாவின் குரல்.

“ஹலோ, சிவா ப்ரோ.. ரொம்ப தேடாதீங்க உங்க ஆளு விட்டிலில்லை” – காவ்யா புன்னகையுடன் சிவாவின் முகத்தை ஏறிட்டாள். சிவாவின் முகத்தில் லேசாக தோன்றி மறைந்த ஏமாற்றத்தை இரசித்தவாரே.

“வெளில போயிருக்காளா?” – சிவா

“இல்ல வெளியூருக்கு போயிருக்கா..” – காவ்யா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.