(Reading time: 22 - 43 minutes)

அவனிடமிருந்து விலகி, வீட்டினுள் சென்றவளின் நிலையோ அவனை விட மோசம், தலைமுடிக் கற்றைகளில் தாரை தாரையாக வழிந்த மழை நீரை துவட்டும் எண்ணமின்றி அவள் இரக்கூந்தலுடன் கட்டிலில் விழுந்தாள். வெளியே வீசிய ஈரக்காற்றும் அதனோடு இணைந்து தூரும் மழையும் பெண்ணவளின் நெஞ்சில் காதலை கிளர்ந்தது. சிறிது நேரத்திற்கு முன் சிவாவின் அருகாமை கிளறி விட்டிருந்த உணர்வுகள் கொஞ்சமேனும் கலையாது அவள் கிடந்தாள். அவனை விட்டு அவள் விலகும்போது அவன் கண்களில் தெரிந்த காதலும் காமமும் அவளை ஏதோ செய்ய, அவனை விட்டு விலகிய அந்த நொடிக்காக தன்னைத்தானே நொந்துகொண்டாள். தன்னை அறியாது தானும் அவன் அருகாமைக்கு ஏங்குவதை அவள் நன்று உணர்ந்து கொண்டாள். இன்னும் ஒரு சில நாளில் அவன் தன் வீட்டின் அருகே குடி புகுந்து விடுவான் என்னும் ஒரே ஒரு எண்ணம் மட்டுமே அவள் ஏக்கத்தை தணித்தது.  அவன் அருகே குடி வருவதும் கூட, நல்லதாய்ப்போயிற்று அவனை அடிக்கடி பார்க்க முடியும், விஷ்ணு உடனும், செண்பகத்துடனும் நன்றாக பழக வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அவன் தனக்காக தான் இங்கே குடி வருகிறான் என்பது தன் தந்தைக்கு தெரிய வரும்போது என்னவாகும் என்று நினைத்தபோது அவள் அறியாது உடல் நடுங்கியது. தாயை பார்த்து அறியாத அவளுக்கு, தாயுமானவனாகி அவளை கண்ணுக்கு கண்ணாக வளர்த்த மாணிக்கத்தின் வார்த்தையை அவள் முதன் முறையாக மீறினாள். தன்னுடைய செய்கை தன் தந்தையை வருத்தும் என்ற எண்ணம் மேலிட, அவ்வளவு நேரம் மனதை ஆட்டிய இன்பம் யாவும் வலியாக மாறியது.  யாருடைய சாவகாசம் வேண்டாமென அவர் கண்டிப்பாக உரைத்தாரோ அவனையே தன் இதயத்து நாயகன் ஆக்கினாள் அவள், இனி வரும் இன்பமும் துன்பமும் அவள் அனுபவித்தே ஆக வேண்டும் அது காதலின் நியதி.  கண்கள் மூடிய மயக்கத்தில் அவளிருக்க இரவும் மழையும் ஓங்கத்தொடங்கியது.

கீர்த்தனா, காவ்யாவின் காரை அவளிடம் சேர்க்கும் பொருட்டு கிளம்பியவள், பெரும் மழையில் சிக்கிக்கொண்டாள். ஆரம்பத்தில் மிதமாக வீசிய காற்று நேரம் ஆக ஆக வேகம் கூடியது. பெரும் மழையும் காற்றும் பிய்த்து அடிக்க, தான் கடந்து செல்லும் பாதை தெரியாது தினறினாள். வண்டியை ஓரமாக நிறுத்தினாள். பின்னால் ஏதேனும் வாகனம் வந்தால் தன்னை இடிக்காதிருக்கும் பொருட்டு வண்டியின் லைட்டை ஆன் செய்தாள்.  நேரம் கடந்து இருள தொடங்கியதே தவிர வாகனம் ஏதும் வராதது கண்டு எப்படியாவது அந்த தனிமையான ஒதுக்குப்புறமான பாதையைக் கடந்து முக்கிய சாலைக்குள் சென்றுவிட எண்ணி, மீண்டும் காரைக் கிளப்பினாள். சேற்றிலும் சகதியிலும் சிக்கிய நிலையிலும் ஒருவாரு வண்டியை கிளப்பி இயக்கினாள். ஆனால் அவளால் கட்டுப்படுத்த இயலாத இயற்கை அவளை இழுத்து சென்றது. திடீரென கீறிய மின்னலில் கண்களைப் பொத்தியவள், காரின் கட்டுப்பாட்டை இழக்க, கார் வேகமாக ஒரு மரத்தில் மோதி நின்றது. கார் கதவுகளின் தாழ் சிக்கிக்கொள்ள திறக்க முடியாது தினறினாள். அடித்த பேய் மழைக்கு தன்னைக் கடந்து வாகனம் ஏதும் சென்றால் கூட தெரியாது என்பதை அவள் நங்கு உணர்ந்திருந்தாள்.  அவளுடைய தைரியமான மனதில் கூட சிறிது அச்சம் மேலிட்டது. அலைபேசியிலும் யாரையும் தொடர்பு கொள்ளா இயலாது இறுதியில் சோர்ந்து போனாள், காரிலிருந்து லேசாக கிளம்பிய புகை மூச்சைத் தினற செய்ய, காருக்குள்ளேயே அவள் மயங்கி சரிந்தாள்.

இரவு வெகு நேரம் தன் பணிகளை அலுவலகத்திலிருந்து பார்த்து கழைத்து சோர்ந்து போன இளமாறன், இருள் சூழ்ந்த அந்த இரவில் பிய்த்து அடித்த மழையை வெகுநேரம் இரசித்தான். பல கடின முயற்கிகளுக்கு பிறகு, அவன் திறமைக்கு சவால் விடும் உன்னத வேலை  கிடைத்த மகிழ்ச்சி, அவனை காட்டாறாக இயக்கியது. திடீரென்று அந்த மழையில் நனைந்து திழைக்கும் எண்ணம் மேலிட, தன் இருசக்கிர வாகனத்தை கிளப்பினான். அவன் கிளம்பும்போது, வாசலில் நின்று மழையை வேடிக்கைப்பார்த்த செக்யூரிட்டி, “சார் இப்டியேவா கிளம்பப்போறீங்க மழை வெறிக்கட்டும்” என்றான். இளமாறன் புன்னகைத்துவிட்டு வண்டியைக் கிளப்பினான். உண்மையில் அவன் காட்டாறுதான்.  குறிப்பிட்ட வரைமுறைகளுக்குள் அடங்காது அனைத்தையும் தனக்குள் அடக்கிக்கொள்ளும் காட்டாறு அவன், பார்ப்பதற்கு மென்மையாகவும் நெறுங்குவதற்கு எளிதாகவும் அவன் தோற்றமளித்தாலும்  இயல்பில் அதீத திறமையும், அறிவும் உடையவன். நல்ல பண்பாளன் அனைவருக்கும் தன்னால் ஆன உதவியை செய்ய யொசிக்காதவன். இளமாறன்.

வண்டியை ஓட்டியவாரே, தலையை உயர்த்தி வானத்தைப்பார்த்தான். பேய் மழை என்பது அதுதான், காரிருளில் கண்களை இருட்டி, பிய்த்து தள்ளியது. அவனது உணர்வுகள் அவனை இழுத்து சென்றது.  மழையையும் இருளையும் இரசித்தவனின் கண்களில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி, லேசான புகையுடன் நின்ற கார் கண்களில் பட்டது, அது கீர்த்தனாவின் அதிர்ஷ்டம்.

வண்டியை ஓரம் கட்டிவிட்டு, அவன் காரை நெறுங்கினான். இருளில் ஏதும் தெரியாது போக, அவன் கார் கதவின் கண்ணாடி சாளரத்தை தட்டி சப்தம் எழுப்பினான்.

“யாராவது உள்ள இருக்கீங்களா? ப்ளீஸ் கதவை திறக்க முயற்சி பன்னுங்க..” என்று வெகுநேரம் அவன் கத்தியும் எந்த பிரயோசனமும் இல்லாமல் போக, தன் இரு சக்கரவாகனத்தின் உள்ளிருந்து எடுத்த கனத்த ஸ்பேனர்கொண்டு, கார் கண்ணாடியை உடைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.