(Reading time: 22 - 43 minutes)

“ஹலோ நிறைய இடம் இருக்கு உட்கார்ந்து ஃப்ரீயா பேசுங்கன்னு சொல்ல வந்தேன், அம்மா தாயே நீ ஒரு ஒழுக்க சிகாமணினு எனக்கும் தெரியும், அவருக்கும் தெரியும், வாண்டி கீயக் குடு, நான் வீட்டுக்கு கிளம்புறேன் இந்நேரத்துக்கு  ஹிட்லர் கத்த ஆரம்பிச்சுருப்பார், என்றவாரே அவள் கிளம்பும்போது,

“காவ்யா, ஒரு நிமிஷம், வர்ற வெள்ளிக்கிழமை இந்த வீட்டுக்கு பால் காய்ச்சிரோம் சோ ஆஃபீஸ் கட் அடிச்சுட்டு கண்டிப்ப வந்திருங்க”  என்று கூறி அவன் கைகாட்டிய வீடு தர்ஷினியின் வீட்டுக்கு அடுத்தவீடு. உண்மையில் காவ்யாவும் தர்ஷினியும் அதிர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். காவ்யா சுதாகரித்துக்கொண்டு, “அண்ணா, உண்மையிலேயே இந்த வீட்ட வாங்கிட்டீங்களா?” – என்றாள் ஆர்வம் கொந்தளிக்க, அவன் வெகு இயல்பாக தோள்களை குலுக்கி, தர்ஷினியைப் பார்த்தவாரே,  “ஆமாம்”  என்றான்

“அப்புறம் காவ்யா, நீங்க என்ன அண்ணான்னே கூப்பிடுங்க..ஐ லைக் தேட்” – கண்கள் சிமிட்டி கூற, காவ்யா மெதுவாக தலையசைத்தாள். ஏனோ, இதுவரை உடன்பிறப்பென தர்ஷினியைத்தவிர அவள் யாரையும் நினைத்ததில்லை. சிவாவின் கபடமற்ற அன்பு அவளுக்குப் பிடித்திருந்தது.

“சரி அண்ணா, நீங்களும் என்ன இனிமே, காவ்யா நீ வா, போன்னுநே கூப்பிடலாம், ஆனாலும் நீங்க ரொம்ப ஃபாஸ்ட், தர்ஷூ வரட்டுமா?” – என்றவாரே தர்ஷினியைப்பார்த்து கண்கள் சிமிட்டி நகர்ந்தாள். தர்ஷினிக்கு மென்மையான நடுக்கம் உள்ளூர, “உண்மையிலேயே அந்த வீட்ட வாங்கிட்டீங்களா?” – என்றாள்

“ம்..கீழ மேல இரண்டு வீட்டையும்” – தர்ஷினியின் கண்களை ஊடுறுவியது சிவாவின் பார்வை. அவளுக்கோ ஆச்சரியமும் அவனது அருகாமை தந்த மென்மையான மயக்கமும் ஒரு சேர, கேள்விகள் பல அவள் உள்ளத்தில் எழ,

“இங்க ரொம்ப நேரம் நிக்க முடியாது, கிளம்பட்டுமா?” – என்றாள்

“போகாதடீ”, என்பதுபோல் அவன் கண்கள் கெஞ்ச, தயங்கி நின்ற அவள் கையைப்பற்றி அவன் காரின் அருகே அழைத்து சென்றான்.  காரின் கதவை திறந்துவிட்டு அவன் அவளைப்பார்க்க, கேள்வியாய் இதெல்லாம் என்ன? என்பதுபோல் இருந்தது தர்ஷினியின் பார்வை. “ப்ளீஸ் ஏறு, கொஞ்ச நேரம் தான், ஒரு சின்ன ட்ரைவ்” ஏக்கமான அவன் முகத்தைப்பார்த்து கரைந்தவள், ஏதும் பேசாது காருக்குள் ஏறினாள், மகிழ்ச்சியாக அவன் காரை கிளப்பும்போது வானம் மெதுவாக தூரத்தொடங்கியிருந்தது.

“எதுக்காக இப்ப அந்த வீட்ட வாங்கினீங்க?” – தர்ஷினி

“தர்ஷினி, உன்ன பார்த்த மறுநாளே அந்த மாடி வீட்ட வாங்கிட்டேன், கீழ உள்ள வீட்ட வாங்க தான் கொஞ்சம் டிலே ஆயிட்டு, இத விட வேர நல்ல வழி இல்ல தர்ஷினி” – சிவா

“எதுக்கு?”

“எப்போதும் உன்ன பார்த்துகிட்டே இருக்க, விஷ்ணுவ பத்திரமா உன்னோட கையில கொடுக்க, அப்புறம்…” தர்ஷினியின் முகத்தை ஏறிட்டவன் அவள் கண்கள் கலங்குவதை பார்த்து கரைந்து போனான், மெதுவாக காரை ஓரமாக நிறுத்தியவன், கவிழ்ந்திருந்த அவள் முகத்தை விரலால் நிமிர்த்தினான்.

“என்னாச்சுடா?” – அன்போடும் காதலோடும் அவன் கேட்டதும், கண்ணீர் கண்ணத்தைவிட்டு ஓடியது.

“ஏய், இப்ப என்னாச்சு, உன்னோட பக்கத்திலேயே இருக்க வேர வழியே இல்ல, விஷ்ணுவுக்கும், அம்மாக்கும் ஒரு பாதுகாப்பான அதே நேரம் உறுதுணையானவங்க பக்கத்தில இருக்கனும், இரண்டு பேர் வயசும் அப்படி, எனக்கும் உன்ன அடிக்கடி பார்க்க இது தான் வசதி.” மென்மையாக அவள் கண்களைப் பார்த்து கூறினான், அவளின் மௌனம் ஏதோ செய்ய, “தர்ஷினி நீ இப்படி பேசாம அமைதியா இருந்தா, என்னை உனக்குப் பிடிக்கலனு தான் நான் எடுத்துக்க முடியும்..!” – சிவா

ஏனோ, அந்த வார்த்தைகள் மெல்லிய முள்ளாய் உள்ளே தைக்கப் பதறியவள் தன் மென் கரம் கொண்டு அவன் வாயைப் பொத்தினாள். இனி அப்படி பேசக்கூடாதென கலங்கிய விழிகளுடன் தலையை அசைத்தாள். அந்த மென்மையான கரத்தினை தன் கைகளுக்குள் அழுத்தி சிறைப்பிடித்தவன், அவளது மென் கையை நெற்றியில் வைத்து குனிந்துகொண்டான். அந்த ஆழமான அமைதியான உணர்வு இருவருக்கும் இதத்தைத் தர, தூரிக்கொண்டிருந்த வானம் இடியுடன் பெய்யத்தொடங்கியிருந்தது. அவனது தோள்லில் தலையை சாய்த்து அவள் கிடக்க, தடுமாறும் தன் மனதினை அடக்கியவாரே அவள் தலை மீது தன் தலையை லேசாக தன் கண்ணத்தை சாய்த்து அவள் வலது கையை தன் வலக்கைகுள் அழுத்திப் பிடித்திருந்தான். ஏனோ இருவருக்கும் வெகு நாள் பழகிய, துணையைப்போன்று அச்சங்கள் ஏதுமின்றி உணர்வுகள் மட்டும் ஒன்றினைந்தது. நேரம் கடப்பதையும் மெதுவாக தன்னை சுற்றி இருள் சூழ்வதையும் உணர்ந்தவள். அவனிடமிருந்து மென்மையாக விலகி.. ”கிளம்பளாங்க” என்றாள்.

ஏதோ விட்ட குரை தொட்ட குரையாக, அவளை நீங்க விருப்பமில்லாமல் விலகி, காரைக் கிளப்பினான். அவளை வீட்டில் விட்டு நெடுஞ்சாலையில் பேரிரைச்சலுடன் பாயும் மழையை இரசித்தவாரே காரை இயக்கினான். அவன் எண்ணங்கள் தன்னை மீறி ஏதேதோ சிந்தனைகளில் சிக்கிக்கொள்ள, தன் மனதினில் உரைந்த இனியவளின் மலர் முகத்தை கையில் ஏந்தி, அவள் இதழ்களை மென்மையாக் அனைக்க ஏங்கிய உள்ளத்தை, அடக்க தெரியாது அவன் தன்னை இயக்கிக்கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.