(Reading time: 10 - 20 minutes)

"மஹாதேவா!என் மன சஞ்சலம் உங்களுக்கு தெரியாம இருக்காது!பாட்டி கல்யாணப் பேச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டாங்க!ரொம்ப பயமா இருக்கு!என்னால என்னோட நிலைமையை யாரிடமும் சொல்லவும் முடியலை.எனக்கு நீங்க தான் எல்லாம்.மனசுல என்னிக்கோ விதையா விழுந்த காதலை நான் பிரியக் கூடாது!மனசுல நின்றவரே வாழ்க்கையிலும் உடன் வரணும்!சகலத்தையும் ஆண்டவர் நீங்க,என் மனதை ஆண்டவரோட நான் சேர எனக்கு ஒரு சக்தியை கொடுங்க!"-அவளது விழி சிந்திய கண்ணீர் கன்னத்தின் வழி ஆலயத்தில் சிதறியது.

அவளது மன வேண்டுதலை கலைத்துப் பார்த்தது ஒரு பெண்ணின் கொலுசொலி!!நிமிர்ந்துப் பார்த்தவள் திடுக்கிட்டாள்,அது அவள் தான்!மாயா!முதல் சந்திப்பிலே அவள் மேல் விளைந்திருந்த அச்சம் உச்சத்தைத் தொட்டது.முகம் வெளிறிப் போய் நின்றாள் மித்ரா!!

ஆனால்,அவளிடம் ஏதோ ஒரு மாற்றம்!அவள் எழில் முகத்தில் இறுக்கமில்லை!ஆணவமில்லை!மாறாக,அன்பு மட்டுமே வழிந்தோடிக் கொண்டிருந்தது.

மாயாவின் பார்வை தன் மீது விழுந்ததும்,சட்டென தன் கவனத்தை இறைவனின் மீது செலுத்தினாள் மித்ரா.

"மித்ரா!நான் போய் தலைமை குருக்களை பார்த்துட்டு வரேன்!இங்கேயே இரு!"-ரௌத்திரத்தின் உச்சத்திடமிருந்து தன்னை இரட்சிக்க இருந்த ஒரு கரமும் கை நழுவி செல்ல,செய்வதறியாது திகைத்து நின்றாள் மித்ரா.

"எதாவது முக்கியமான விஷேஷமாம்மா?"-பரிச்சயமான அந்தக் குருக்கள் மாயாவிடம் வினவினார்.

"எனக்கு நெருக்கமான ஒருத்தருக்கு கல்யாணம் கைக்கூடுவதற்காக அர்ச்சனை பண்ணுங்க!"

"யாரும்மா?"

"அர்ஜூன்!"-என்று அவன் ராசி,நட்சத்திரங்களை கூறியவள்,சில நொடிகள் மௌனம் காத்து,

"மித்ரா!"என்றாள்.அவளது இதழ் உதிர்த்த நாமத்தை கேட்டவளின் சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.ஆராதனை பொருட்களை வாங்கி சென்றவர்,சில நிமிடங்களில் வெளி வந்தார்.

"நினைத்தது கைக்கூடும்!"-அர்ச்சனை தட்டினை பணிந்து வாங்கியவள்,தன் ஈசனை ஒருமுறை வணங்கி திரும்பினாள்.

மித்ராவை கடந்து செல்ல முனைந்தவள்,சில நொடிகள் மௌனம் காத்து நின்றாள்.ஆராதனை பொருட்களில் ஒய்யாரமாய் வீற்றிருந்த தாமரையை எடுத்தவள்,அதை அவளது.கரத்தில் ஒப்படைத்து நகர்ந்தாள்.

நடப்பவை யாதும் மனதில் பதியாதவளின் நிலை சிலையாகிப் போனது.என்ன நடந்தது இங்கே?இந்தப் பந்தம் மாயாவிற்கு எவ்வாறு தெரியும்?அவள் காதலுக்கு மதிப்பளிக்கின்றாளா?இறுக அவள் மனப்பாறையில் ஈரம் சுரக்கிறதா?இதை எந்தக் கோணத்தில் பார்ப்பது?அர்ஜூனுக்கும்,ருத்ராவிற்கு இடையில் இருக்கும் பூசலின் மத்தியில்,ஒருவேளை எங்கள் பந்தத்தை அவர் புரிந்தாலும்,மாயாவின் தலையிடுதல் உள்ளக் காரணத்தால் இதை அவர் ஏற்பாரா??பெரும் சிந்தனைக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டாள் அக்கன்னிகை.

'காயத்ரியை ரகுராமிடமிருந்து காப்பாற்றவும்,பாதுகாக்கவும் உன்னால் மட்டும் தான் முடியும் மாயா!'-மகேந்திரனின் மொழிகள் மீண்டும் மீண்டும் செவிகளில் ஒலித்தப்படி இருந்தது.

"எதன் அடிப்படையில் அவர் இந்த நம்பிக்கையை வைத்தார்?இதனால் அவளுக்கு ஏதேனும் நேர்ந்தால்?காயத்ரியின் அனைத்து ஆஸ்தியும் செல்ல போகும் நபர் மாயா தான்,நிச்சயம் அவளுக்கு ரகுராமினால் தீங்கு நிகழலாம்.எவ்வளவு தான் தன்னைத் தானே அவள் பாதுகாத்தாலும்....."-அவனது எண்ணங்கள் யாவும் திசை மாறின.

"இவ்வளவு பொறுப்பை அவள் ஏன் ஏற்க வேண்டும்?அவள் தாயின் பாதுகாப்பை உறுதி செய்ய ரகுராமிடமிருந்து அவர் விலகினால் போதுமே!வாழ்வனைத்தும் ஒரு பெண்ணிற்கு போராட்டமா?அவளும்,திறமையாக அனைத்தையும் எதிர்க்கிறாள்!அவள் பணிந்து நான் கண்டதில்லை.வைராக்கியம் நிறைந்தவள்,அதை உடைக்கும் உபாயம் யாருக்கும் புலப்படாதது!இனி ஏன் அவள் தனித்து நிற்க வேண்டும்?ஆனால்,எனைக் கண்டாலே வெறுப்பை உமிழ்கிறாள்!எவ்வாறு என் மனதை ஏற்பாள்?என் எண்ணம் கைக்கூடாமல் போனால்?"-பல எண்ணங்கள் அவனை பாடாய் படுத்தின.

"சார்!"-ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனை கலைத்தது குருவின் குரல்!

"என்ன?"-சற்றே கோபமாக வினவினான் ருத்ரா.முக்கிய எண்ணங்களை கலைத்தான் அல்லவா!

"ஸாரி சார்!புது டென்டர் கொட்டேஷனை அனுப்பட்டான்னு கேட்க வந்தேன்!"

"நான் அனுப்பிக்கிறேன்!"

"இல்லை சார் நானே..."

"வாழ்க்கையில நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம்,நம்ம நிழலே சில சமயம் நமக்கு துரோகம் செய்யும்!அதனால...ப்ளீஸ்!"

"ஸாரி சார்!"-என்று மௌனமாக வெளியேறினான் அவன்.

"மாயா...மாயா...மாயா!பைத்தியக்காரன் மாதிரி புலம்ப வைத்துவிட்டாயே!உன்னுடைய முகம் உண்மையான முகமில்லை.அதனால அதை மாற்ற எனக்கு ரொம்ப காலம் பிடிக்காது!உன் மனசை நான் எப்படி மாயா எனக்கு சொந்தமாக்குவேன்?"-மாயாவின் முகத்தை தனது மடிக்கணினியில் பார்த்து மௌனமாய் உரையாற்றியவனுக்கு இதழோரம் மெல்ல நகை மலர்ந்தது.

"சார்!"- வரவேற்பாளினியின் பதற்றமான குரல் கேட்டு திடுக்கிட்டான் ருத்ரா.

"வாட்?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.