(Reading time: 11 - 22 minutes)

10. உயிர் ஆதாரமே..!! - ப்ரியா

Uyirin aatharame

முன் கதை சுருக்கம்:

வைஷ்ணவ் யோசித்து கொண்டிருக்கிறான். தனிமை தேவை என்று எண்ணி மஹாபலிபுரம் சென்று ஒரு ஹோட்டலில் தங்குகிறான். தன்னிடம் இருக்கும் டைரி மற்றும் சில வரை படங்களை பற்றியும் அதை தந்தவள் பற்றியும் சிந்திக்க தனிமை தேவை படுகிறது. அங்குள்ள கடற்கரையில் அமர்ந்து அவன் அதை படிக்க நினைக்கும் பொது மித்ரன் அங்கு வருகிறான் அந்த டைரியை அவனிடம் தந்தவளுடைய நண்பன். அவள் நித்திலா.

 சிறு வாக்குவாதத்திற்கு பின் வைஷ்ணவ் கெஞ்சுதலினால் மித்ரன் அமைதி ஆகிறான். அவனை வைஷ்ணவ் தன்னுடன் ரூமிற்கு அழைத்து சென்று சிலவற்றை காண்பிக்கிறான். சிலவற்றை பேசுகிறான் மித்ரனை யாருடனோ போனில் பேச செய்கிறான். இதனால் மித்ரன் மகிழ்ந்து வைஷ்ணவுடன் நட்பு கொள்கிறான். மிகவும் மென்மையான அனைத்தையும் சாதாரணமாக பார்க்கும் குணம் கொண்ட வைஷ்ணவ் தன்னால் நடந்த சில தவறுகளுக்கு வருந்துகிறான்.

மதுரையில் நித்திலா மாற்று நேத்ரா (அவள் தங்கை) பாட்டி கோமதியுடனும் தாத்தா சிவநேசனுடனும் சந்தோசமாக இருக்கிறார்கள். நித்திலா மிகவும் குறும்புக்கார பெண்ணாக வைஷ்ணவிற்கு நேர்மாறாக இருக்கிறாள்னா. நித்திலாவின் மனதுக்குள் ஒரு வருத்தம். அவள் அம்மா சாரதாவிற்கு உடல் நிலை சரி இல்லாமல் போனது. அதற்கு காரணம் அவள் தான் என நினைக்கிறாள். ஆனால் மூல காரணம் வைஷ்ணவ் என அவன் மேல் கோபம் கொள்கிறாள்.

ஆனால் வைஷ்ணவ் தன் தோழி அபியை பெங்களுருவில் இருந்து வரவழைத்து நித்திலாவின் அம்மாவிற்கு குணம் ஆகும் படியும் அவர் அருகிலே இருந்து பார்த்து கொள்ளும் படியும் பார்த்து கொள்கிறான். அபி நித்திலா விஷயத்திலும் அவனுக்கு உதவ நினைக்கிறாள்.

ஆற்றங்கரைக்கு வரைய செல்லும் பொது முன்னாள் நினைவில் மூழ்கி போகிறாள். வைஷ்ணவ் அந்த வரைபடங்களை பார்க்கிறான்.

அதில் அவனும் நித்திலாவும் இருப்பது போல அவள் வரைந்த படங்கள். எப்படி இது நடந்திருக்க முடியும் என்று அதிர்ச்சி கொள்கிறான்.  டைரியை படிக்கிறான். நவீன் என்ற பெயரில் ஆரம்பிக்கிறது டைரி. ஆனால் இருப்பது அவனை பற்றி, படங்களும் அவனை உரித்து வைத்தது போல. அவர்களின் முதல் இரண்டு சந்திப்பை படித்து முடிக்கையில் ஒன்றை உணர்கிறான்.

முதல் சந்திப்பு அதே ஆற்றங்கரையில் நடக்கிறது.. இரண்டாம் சந்திப்பு ஒரு நிச்சயதார்த்தம் நடக்கும் வீட்டில் நடக்கிறது. ஒருவர் மற்றொருவர் பெயர் தெரியாமல் பிரிகிறார்கள். அவளை தேடி வருவதாக சொல்லிவிட்டு போகிறான் வைஷ்ணவ். இவை யாவும் அவனுக்கு இப்போது நியாபகத்தில் இல்லை. அது  தான் இல்லை என்றாலும் நித்திலா தன்னை மிகவும் நேசிக்கிறான் என்று!!

சென்னைக்கு போக தன் அன்னையிடம் அனுமதி கேட்கும் நித்திலாவிற்கு சாரதாவிடம் இருந்து திட்டு கிடைக்கிறது. தாத்தாவின் உதவியுடன் சென்னைக்கு செல்ல தயாராகிறாள் நித்திலா. அதை அபி வைஷ்ணவிற்கு தெரிவிக்க நினைக்கிறாள். அன்னையுடன் போனில் பேசும் வைஷ்ணவ் மஹாபலிபுரத்திலிருந்து சென்னைக்கு கிளம்பி செல்கிறான் வைஷ்ணவ். அவனை அறியாமல் அவள் மீது காதல் கொள்கிறான்.  இனி...


ன்று மதியமே தாத்தா வந்து ரயில் ஏற்றிவிட, யாரிடமும் அதிகம் பேசாமல் கிளம்பி வந்த நித்திலா, தாத்தாவிடம் மட்டும்

"அம்மாவை பார்த்துக்கோங்க ஷிவ்" என்று கூறி விட்டு ரயில் ஏறி கொண்டாள். மனம் கனத்தது!!

தன் அப்பாவிற்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டாள்.

' ரயில் ஏறி விட்டேன் இரவு வந்து விடுவேன் ரயில் நிலையத்திற்கு காரை அனுப்பவும்' என்று ஆங்கிலத்தில் அனுப்பினாள்.

ரவிசங்கர் குறுஞ்செய்தியை பார்த்து விட்டு அவசரமாய் மித்ரனை அழைத்தார்.

சென்னையை நெருங்கி கொண்டிருந்தாள் நித்திலா!! அந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது தான் போகிறாள்!! அது நடந்து ஏழே நாட்கள் தான் ஆகிறதா?! கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வைஷ்ணவின் செல்போன் ஒளிர்ந்து ஒலித்தது. காதில் மாட்டியிருந்த ப்ளுடூத்தை உயிர்ப்பித்து பேசினான்.

"ஹலோ அபி. நானே உனக்கு போன் பண்ணனும்ன்னு நினைச்சேன் நீயே பண்ணிட்ட"

"அதெல்லாம் இருக்கட்டும் உங்கிட்ட அவசரமா ஒன்னு சொல்லணும்"

"என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா?"

"அதெல்லாம் இல்லை.. ஆனா நித்திலா"

"அவளுக்கு என்ன?" வைஷ்ணவ குரலில் சிறு பதற்றம், அவசரமாய் வண்டியை சாலை ஓரம் நிறுத்தினான்.

"ஒண்ணுமில்லை வழக்கம் போல அவளுக்கும் அவன் அம்மாக்கும்  சண்டை, கொஞ்சம் அதிகமாவே திட்டிட்டாங்க, அவ சென்னை போகணும்ன்னு சொன்னதுக்கு"

"..."

"தாத்தா தான் அம்மாவை சமாதானம் பண்ணி ட்ரெயின் ஏத்தி விட்டிருக்கார்.. இன்னும் ரெண்டு மணி நேரத்தில் எல்லாம் அவ சென்னை வந்து சேர்ந்துடுவா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.