(Reading time: 11 - 22 minutes)

"ஓ.. நல்லது நானும் அதுக்குள்ள போய்டுவேன்.. எந்த ட்ரெயின்?!"

"மதுரை- சென்னை எக்ஸ்பிரஸ்"

"ஹ்ம்ம் சரி.. நான் பாத்துக்கறேன்"

"நீ இப்போ போய் அவளை பார்க்காத டா அது சரியா பாடலை எனக்கு"

"ஏன்?"

"அவ உன்மேல கோபமா இருக்க மாதிரி இருக்கு அதான்"

"ம்ம்ம் சரி"

"வெச்சுடவா?"

"ம்ம்ம்ம் பை"

யோசனையுடன் போனை வைத்தவன் மீண்டும் வண்டியை செலுத்தினான். பக்கத்துக்கு இருக்கையில் அந்த டைரி.. ஒரு கையை அதன் மேல் வைத்து வருடிக் கொண்டே வண்டியை செலுத்தி கொண்டிருந்தான்.

ரண்டு மணி நேரத்தின் முடிவில் சென்னை ரயில் நிலையத்தின் முன்பாக வைஷ்ணவின் வண்டி நின்றிருந்தது!!

வெளியே காரை பார்க் செய்து விட்டு ரயில் நிலையத்திற்குள் செல்லவிருந்த மித்ரன் அவன் காரில் அருகினில் வைஷ்ணவின் கார் வந்து நிற்கவும் அதை கடந்து சென்றான்.

"மித்ரன்!!"

"வைஷ்ணவ்???!!!" அவனை பார்த்த அதிர்ச்சி அப்பட்டமாய் அவன் முகத்தில்!!

"நித்திலா வந்துட்டாளா?"

"அவளை கூப்பிட தான் வந்தேன்.. ரவி அங்கிள் அனுப்பினார்.. அவ உன்மேல கோபமா இருக்கிறா வைஷ்ணவ்.. நீ ஏன் இங்க வந்த?"

"அவளை பார்க்கணும்"

"காரியம் கெட்டது போ.. இங்க இருந்து நீ கிளம்பு"

"மாட்டேன் தூரத்தில் இருந்தாவது அவளை பார்த்துட்டு போய்டறேனே"

"வைஷ்ண.."

"ப்ளீஸ்"

"சரி அவ கண்ணில் பட்டுடாத ப்ளீஸ் டா"

"ஹ்ம்ம்" அமைதியாய் தலை அசைத்தவன் காரில் அமர்ந்து கொண்டான். டைரியை மடியில் வைத்து கொண்டான். லாவெண்டர் மனம் காரெங்கும் படர்ந்து அவனை அமைதி படுத்தும் பணியில் ஈடுபட்டது!!

'ட்ரெயின் வர லேட்டாகும்' மித்ரனிடம் இருந்து குறுஞ்செய்தி வர, அதை பார்த்து விட்டு டைரியை விரித்தான்.

இரண்டாம் சந்திப்பிற்கு பிறகு நடந்ததை அறிய ஆர்வம் எழுந்தது..

 பக்கங்கள் அவனுடன் பேசின.. கதை சொல்ல துவங்கின !!!

மூன்றாம் சந்திப்பு!!

இரண்டாம் சந்திப்பின் பிறகு சென்னை வந்திருந்தாள்  நித்திலா. ஒரு திறமையான நடக்கும்ஆடை வடிவமைப்பாளரிடம் அசிஸ்டண்டாக சேர்ந்தாள் நித்திலா. வேலைப்பளு நாளுக்கு நாள் அதிகமாக அவனின் நினைவுகள் பின்னுக்கு சென்று மழுங்கி கிடந்தது.

ஆனாலும் அவ்வப்போது எழும் நினைவுகள் அவளை மூழ்கடித்து விடும்!!

டில்லியில் நடுக்கும் ஒரு பேஷன் ஷோவிற்கு இவர்களுக்கும் அழைப்பு வந்திருந்தது. மிக பெரிய வாய்ப்பு. அவளையும் இன்னொரு பென்ணயும் மட்டும் அசிஸ்டண்டாக அழைத்து கொண்டு அவர்கள் பாஸ் டில்லி சென்றார்.ஒரு வாரம் இரவு பகலாக வேலைக்கு பின் ௩ நாள் ஓய்வு கிடைத்தது! இவள் வேலை செய்த விதம் இவள் ஆர்வம் இரண்டுமே அவளின் பாஸ்ஸிற்கு பிடித்து போக அங்கிருந்த குழுக்களாக சேர்ந்து அருகில் ட்ரெக்கிங் போக அவளையும் உடன் அழைத்தார். இயற்கை விரும்பியது அவள் குதூகலத்துடன் கிளம்பினாள்.

அந்த சூழல் அங்கிருந்த வித்யாசமான உணவுகள் அந்த மனிதர்கள் எல்லாமே பிடித்தது அவளுக்கு... கையுடன் தான் வரைவதற்கு தேவையானவற்றை எடுத்து வந்திருந்தாள். 

பின் காலையில் மலையேற தொடங்கியவர்கள் அங்கங்கே சிறிது ஓய்வெடுத்து அந்தி சாயும் வேளை மலையுச்சியை அடைந்தனர். இரவு அங்கு கேம்ப் போட்டு தங்கி விட்டு காலையில் திரும்புவதாக ஏற்பாடு. அவர்களை போலவே நிறைய  குழுக்கள் இருந்தனர்.

இரவு தூக்கத்தில் அவனின் கனவு வர, சட்டென விழித்தவள் ராத்திரி முழுவதும் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள். காலையில் சூரியன் எழும் போது எழுந்து சென்று பார்த்து கொண்டிருந்தவள் மனதில் அந்த பெயர் உதித்தது..!!

'நவிரன்'

மலை என்று பொருள்.. மலை போன்றவன்.. மலை போன்ற உயர்ந்தவன்.. மலை போன்று வலிமையானவன்..

ஆம் நவிரன் தான் அவனுக்கு சரியான பெயராக இருக்க முடியும்!! அவன் பெயரை சொல்லாமல் போனதால் அவளே பெயர் சூட்டி கொண்டாள்.. மீண்டும் மீண்டும் சொல்லி பார்த்தாள். அவளை சுற்றி பரந்து கிடந்த பனி அவளுக்குள்ளும் பரவுவது போல் ஒரு உணர்ச்சி.. மகிழ்ச்சி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.