(Reading time: 11 - 22 minutes)

ன்று மாலை அவர்கள் மலையை விட்டு இறங்கி கீழே வந்து அடுத்து பக்கத்தில் இருக்கும் ஒரு இடத்திற்கு போக திட்டம் போட, இவளுக்கு தனிமை வேண்டும் போல இருந்தது..

நவிரனை பற்றி யோசிக்க வேண்டி இருந்தது..!!

அவள் பாஸ்ஸிடம் சொல்லிவிட்டு விடை பெற்று ஒரு டாக்ஸியை பிடித்து அவள் இருந்து ஹோட்டலுக்கு விரைந்தாள்.

ஒரு தொழில் சம்பந்தமான கூட்டத்திற்கு வந்திருந்த அவன் அதே ஹோட்டலில் ரூமை காலி செய்து கொண்டு ஒரு டாக்ஸி பிடித்து விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தான்!!!

இரு நாட்களாக அவன் அங்கு தான் இருந்தான்.. ஆனால் அவள் வேலை அதிகம் என்பதால் ரூமிற்கு வராமல் அங்கேயே தங்கி வேலை செய்துகொண்டிருந்தாள்!!

விமான நிலையத்திற்கு செல்லும் பொழுது அவன் செல்போன் சிணுங்க, அதை எடுத்தவன் வண்டியை ஓரமாக நிறுத்துமாறு சொன்னான்.

அவன் வந்த மீட்டிங் தொடர்பான ஒரு டாக்குமெண்டை அவன் நண்பர் தர மறந்திருந்தார். அதை இவனும் மறந்து விட்டான் காரணம் இரு நாட்களாய் மிகவும் வாட்டியெடுக்கும் அவள் நினைவுகள். அதை வாங்காமல் போக முடியாது!! அவரை தன் இருக்கும் இடம் சொல்லி அங்கேயே வருமாறு சொன்னான். அவரும் ஐந்து நிமிடத்தில் வருவதாக சொன்னார்.

இவன் டாக்ஸியை விட்டு இறங்கி அதன் மேல் சாய்ந்து நின்று கொண்டான்!! திடீரென்று ஒரு சத்தம் கேட்க திரும்பி பார்த்தவன் இன்னொரு டாக்ஸி இவன் வந்த டாக்ஸி மேல் சற்று இடித்து நிற்பது தெரிந்தது. இரண்டு டாக்ஸி டிரைவர்களும் சண்டையில் ஈடுபட்டிருக்க எரிச்சலுடன் சற்று தள்ளி நின்று கொண்டான் இவன்.

சண்டை முடியாமல் அவர்கள் கத்திகொண்டே போக, இன்னொரு டாக்ஸியில் இருந்து கீழிறங்கினாள் நித்திலா. அவளை கண்டவன் ஒரு நொடி எதுவும் புரியாமல் நின்று விட, அவள் டிரைவரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவன் அவசரமாய் ஒரு ஏஜென்சிக்கு போன் செய்து தன் டிக்கட்டை கான்செல் செய்துவிட்டு நாளைக்கு விமானத்திற்கு டிக்கெட் புக் செய்யுமாறு கூறி விட்டு போனை வைத்தான். அவள் அருகில் சென்று அவளுக்கு தெரியாமல் அவள் வந்த டாக்ஸியில் ஏறி அமர்ந்து கொண்டான். அவளும் கண்டுகொள்ளவில்லை டிரைவர்களும் கண்டுகொள்ளவில்லை. ஒரு வழியாக சண்டை முடிந்து அவள் டாக்ஸிக்குள் ஏற திரும்பும் போது அவனை பார்த்து அப்டியே நின்று விட்டாள்.

'நவிரன்' உதடுகள் சத்தம் வராமல் உச்சரித்தன. அவள் பொருட்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கியவன், இரண்டு டாக்ஸிக்கும் அவனே பணத்தை கொடுத்தான். சாலையின் ஓரம் சென்று நின்று இரு பக்கமும் சுற்றி பார்த்தான்! ஒரு கபே இருந்தது. அவளை பார்த்து வா என்று தலையசைத்து விட்டு சென்றான்.

ஆட்டுக்குட்டியை போல இவள் பின் தொடர அந்த கபேவிற்குள் சென்று அமர்ந்து கொண்டு அவளை பார்த்தான் அவளும் அமர்ந்தாள். மெல்லிய இசை அந்த கபே முழுவதும் பரவியிருக்க லாவெண்டர் மனம் மிதந்து மிதந்து நடனமாடி கொண்டிருந்தது.

ஒரு முறை மூச்சை ஆழ இழுத்து விட்டவன்,

"உட்கார போறதில்லயா?" என அவளை கேட்டான். அவள் அவனுக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர, இருவர் அமரக்கூடிய அந்த சோபாவில் அவள் அருகில் வந்து அமர்ந்தான் அவன்!! அவள் கொஞ்சம் சுதாரித்து எழும் முன் அவன் பார்வை அவளை தடுத்தது.

"கபே.. இந்த இசை.. இங்க இருக்க ஆரஞ்சு கலர் லைட்.. லாவெண்டர் வாசம்.. பக்கத்துல நீ..!!"

"....."

"இது கனவு இல்லை தானே?"

"......"

"பேச மாட்டியா? நான் சொன்ன மாதிரியே உன்னை தேடி வந்துட்டேன்.. பார்த்தியா விதி வலியது.. உன்னை கொண்டு வந்து சேர்த்துருக்கு!!"

அவள் பேசவில்லை..!! இன்னும் அவளால் நம்ப முடியவில்லை... அவன் செல்போன் ஒலித்தது!! எடுத்து பேசியவன் அந்த டாகுமெண்ட்டை நாளை பெற்று கொள்வதாக கூறிவிட்டு அவளை பார்த்தான்..

"இப்படி நீ பேசாம என் கன்னவே பார்த்துட்டு இருந்த எனக்கு என்ன தோணும் தெரியுமா?"

முதன் முறை இதழ் பிரித்தாள், "எ.. என்ன?"

"ஹ்ம்ஹ்ம் ஒண்ணுமில்லை"

"ஹ்ம்ம்"

"காபி பிடிக்கும்ல?"

"ரொம்ப..." அவளை ஆச்சர்யமாக பார்த்து விட்டு இருவருக்கும் காபி வாங்கி கொண்டு வந்தான்.

"இப்போவது உன் பேரை சொல்லலாமே நீ.. நான் தான் சொன்ன மாதிரியே வந்துட்டேனே?"

வேகமாய் அவனிடம் இருந்து டைரி பறிக்கப்பட்டு அதன் பக்கங்கள் டைரியிலுருந்து கிழிக்க பட்டது. கனவில் இருந்தவன் போல ரசித்து படித்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தான். இவன் கார் கதவை திறந்து இவன் கையில் இருந்து டைரியை பிடுங்கி அதனை பக்கங்களை கிழித்து கசக்கி டைரியையும் பக்கங்களையும் அவன் மேலே மறுபடியும் எறிந்தாள் நித்திலா!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.