(Reading time: 10 - 20 minutes)

"ம்..ம..மாயா மேடம்.."-அவள் கூற முற்படுகையில் அவேசமாக உள் நுழைந்தாள் மாயா.அவளது விழிகள் அக்னி பந்துகளாய் உருவெடுத்து அவனை எரிக்க முற்பட்டன.அவனோ எச்சலனமும் இல்லாமல் தனது மடிக்கணினியை மூடி தன் இருக்கையைவிட்டு எழுந்து வந்தான்.அவள் முகத்தில் இருந்த ரௌத்திரத்தை தாண்டி விளைந்திருந்த ஏதோ ஒன்று அவனை வெகுவாக ஈர்த்தது.தனது வரவேற்பாளினியை வெளியே செல்லுமாறு புன்னகையுடன் சைகை செய்தான் ருத்ரா.அவளோ அச்சத்துடன் விழித்தப்படி தலையை ஆட்டிவிட்டு வெளியேறினாள்.மேசை மீது தன் மனம் கவர்ந்தவளை பார்த்தப்படி அமர்ந்தான் ருத்ரா.

"வாங்க மேடம்!என்ன விஷயம்?"

"பார்ட்டில என்ன நடந்தது?"

"ம்??எந்த பார்ட்டி?"

"கெட் டூ கெதர் பார்ட்டியில என்ன நடந்தது?"அவன் புரியாததை போல் விழித்தான்.

"ஸ்டீவிடம் என்ன சொன்ன?"

"ஓ...!பற்ற வைத்துட்டானா?"

"கேட்ட கேள்விக்கு பதில்!"

"என்ன சொன்னேன்!நான் அவளை டிராப் பண்ணிடுறேன்னு சொன்னேன்!"

"வேற என்ன சொன்ன?"அவன் ஆழமாக மாயாவை ஊடுறுவினான்.

"நீ என்னோட பியான்சின்னு சொன்னேன்!"-சளைக்காமல் பதில் அளித்தான் அவன்.

"எந்தத் தைரியத்துல அப்படி சொன்ன?யார் உனக்கு இவ்வளவு தைரியத்தை கொடுத்தது?"

"தைரியம் என் இரத்தத்துல ஊறினது!சொல்லிக் கொடுக்கணும்னு அவசியமில்லை!"

"............."

"இவ்வளவு சொன்னவன் உண்மையை சொன்னானா?"

"............"

"நீ குடிக்கிற ஜூஸ்ல மயக்க மருந்தை கலந்தது!உன்னை அடைய முயற்சி பண்ணது!"

"ருத்ரா!"-ஆவேசமாக கத்தினாள் மாயா.பொறுமையோடு எழுந்து அவளருகே வந்தவன்,அவளது இதழில் தனது ஆள்காட்டி விரலை வைத்தான்.ஏனோ அதைத் தடுக்க முயலாமல் சிலையாகி நின்றாள் மாயா.

"உஷ்...!ரொம்ப கத்தாதே!தொண்டை வலிக்கும்ல!"-அவளது செவியருகே கிசுகிசுத்தான் ருத்ரா.அவனது செய்கையின் தாத்பரியம் அவள் உணரவில்லை.எனினும்,அந்தக் கட்டிலிருந்து வெளி வர அவளால் இயலவில்லை.

"நல்லவனா இருந்தா காரணம் சொல்லி விளக்கி இருக்கலாம்!எனக்கு அப்போ வேற வழி தெரியலை."

"என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்!"

"ஆ...பார்த்தேன்..பார்த்தேன்!கொஞ்சம் கூட சுயநினைவுல இல்லாம ரொம்ப அருமையா பாதுகாத்த!"

"யார் நீ?நீ ஏன் என் மேலே அக்கறை காட்டுற?"

"ம்...யாரா இருக்க ஆசைப்படுற?உன் ஜென்ம விரோதின்னு வைத்துக்கொள்!"

"................"

"உன்னை என்ன செய்யணும்னாலும்,உனக்கு சந்தோஷத்தை கொடுக்கணும்னாலும் அதை நான் தான் கொடுக்கணும்!வேதனையை கொடுக்கணும்னாலும் நான் தான் கொடுக்கணும்!"

"அது உன்னால முடியாது!"

"ருத்ராவால முடியாதுன்னு எதுவும் கிடையாது!"

"தெரிந்தோ,தெரியாமலோ என்னை காப்பாற்றி இருக்க!அதுக்காக நன்றி!"-அவனது பேச்சு,அவன் பார்வை,நடவடிக்கை இவை யாவும் சரியாக ஏற்க இயலவில்லை அவளால்!அதற்கு மேல்,அவன் செய்த உபகாரம் புரிந்தவள் தேவையற்ற வாதத்தில் திளைக்க விரும்பவில்லை.அந்த இடத்தை தியாகிக்க முயன்றவள் அவனால் தடுக்கப்பட்டாள்.

"ஒரு நிமிடம்!"

"..............."

"நான் அவனிடம் ஒண்ணும் பொய் சொல்லலை!"-சட்டென அவன் கூறிவிட புரியாமல் விழித்தாள் மாயா.

"ஐ லவ் யூ!"-சிறிதும் பதற்றமில்லாமல்,வார்த்தை பிழறாமல்,அச்சமில்லாமல் தன் காதலை கூறினான் ருத்ரா.

"இது என்ன அந்தக் காயத்ரியோட புது வியூகமா?"

"இல்லை...இது என்னுடைய வியூகம்!உன் பிடிவாதத்தை உடைக்க உருவாக்கப்பட்டது!"

"நல்ல முயற்சி!மாயாவிடம் பலிக்காது!"-மீண்டும் அவளை நெருங்கினான் ருத்ரா.

"காதல் எப்பேர்ப்பட்ட வைராக்கியத்தையும் அசைத்துப் பார்க்கிற சக்தி படைத்தது!நீ வருவ!ஒருநாள் என்னிடம் வருவ!என் சட்டையை பிடித்து இந்தப் பிடிவாதம்,கோபம் எதுவும் இல்லாம என்கிட்ட உன் காதலை சொல்லுவ!"-அவளது முகம் இறுக ஆரம்பிக்க,எதையும் சிந்திக்காமல் அங்கிருந்து வெளியேறினாள் மாயா.

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.