(Reading time: 6 - 12 minutes)

"சீக்கிரம் வா"

"ம்ம்ம்"

அவள் போன் ஒலிப்பது கேட்டது 'ஹலோ சொல்லு' அவள் பேசிக்கொண்டே வெளியில் சென்றிருக்க வேண்டும்.

மீண்டும் ஷவருக்கு அடியில் சென்று நின்றாள். இப்போது மறுமூலையில் நின்று அது அவளை பார்த்துக் கொண்டிருந்தது. அவள் மனம் கெஞ்சியது.

கண்களில் கெஞ்சலுடன் அதை பார்த்தாள். அது அவளை அணைத்து கொள்ள முயல்வது போல கைகளை விரித்து கண்களால் அழைத்தது. அதன் கண்களில் பசி ஏக்கம் தாகம்!!

அவளுக்கு அழ வேண்டும் போல தோன்றியது..!! கத்தி கதறி அழவேண்டும் போல தோன்றியது.. பயம் உடலெங்கும் பரவ அழ முயற்சித்தாள்.. அதன் முகத்தில் வெற்றி களிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் படர்வதை உணர்ந்தாள்..

அழ முடியவில்லை..!! அழுகை வரவில்லை..!! சில நாட்களாகவே நடப்பது தான்!!

'போய்டு ப்ளீஸ்' கெஞ்சினாள்.

இடம் வலமாய் தலையசைத்தது!!

'சத்யா யோசி சத்யா' மெல்ல அவளை தூண்டியது!!

அவள் மூளைக்குள் பலகுரல்கள். பயம் பொய் மீண்டும் கோபம் வந்தது. அலமாரி அருகே சென்றாள். இப்போது சலனமற்ற முகம். எந்த யோசனையும் இல்லை..

கதவின் தாழ்ப்பாளை மட்டும் திறந்துவிட்டு விட்டு வந்து அலமாரியை திறந்தாள்.. சோப்பு டப்பாவில் அருகே இருந்த அதை வெளியே எடுத்தாள்..

மடக்கி விரிக்கும் வகையில் இருந்த சிறு கத்தி.. திரும்பி அதை பார்த்தாள் மெல்ல இவளை நெருங்கி அவளுக்குள் நுழைந்தது.. அலமாரியை மூடி விட்டு கண்ணாடியில் பிம்பம் பார்த்து கொண்டே கத்தியை விரித்தாள்..

குரல்கள் மனதிற்குள்..

'சத்யா மேல தான் தப்பு'

' என் பெரிய பொண்ணு சத்யாவை விட சின்னவ மேல தான் உயிர்'

'இவ தான் அவனை விட்டு வந்திருப்பா'

'நானா போக சொல்றேன் நீ தான் போகணும் னு முடிவு பண்ணின'

'ஐஸ்கிரீம் வேணுமா?'

'தொண்டையில் சிக்கினாலும் பரவலா முழுங்கு'

'இவ ஆத்தா மாதிரி தான் புத்தி வரும்'

'சத்யா மேல தப்பு'

'சத்யா ரொம்ப எமோஷனல் டைப்'

'டிராமா பண்ணாத.. எதுக்கு இப்போ வந்த ?'

'வேற யாராயவுது கல்யாணம் பண்ணிக்கோ'

'என்னை தனியா விடு'

ஒரு முறை கண்களை இறுக்கமாய் மூடி திறந்தாள் சத்யா. அது அவள் வழியாக கண்ணாடியை பார்த்தது!!! இப்போது பயமில்லை!!

கண்ணாடியிலிருந்து கண்ணை அகற்றாமல் இறுக்கமாய் வலதுகையில் கத்தியை பற்றிக்கொண்டாள்.. மெல்ல இடது கையை கத்தியால் கீறினாள்..

'ஆஆஆஆஆஹ்' வலித்தது மெதுவாக கத்தினாள்.. ரத்தம் பீச்சியடித்தது.. கத்தியை கீழே போட்டாள்..

கையை பார்த்தாள்.. ரத்தம் இவள் இரவு உடையில் பட்டு வழிந்து வெளிர் மஞ்சள் நிற டைல்ஸில் விழுந்து தண்ணீருடன் கலந்து சென்றது.. வலி தெரிந்தது...

மடிந்து வாளியின் அருகில் அமர்ந்தாள்.. வலி அதிகமாக வாளியை பற்றிக்கொண்டாள்.. ஷவர் தண்ணீர் மேலே விழுந்து கொண்டிருந்தது..

அது அவளை விட்டு மெல்ல வெளியேறி அவள் அருகில் அமர்ந்து பார்த்தது..

வாளியின் விளிம்பில் தலை சாய்த்து அமர்ந்தாள்.. ரத்தம் வெளியேறி கொண்டே இருந்தது..

சுயநினைவை இழந்து கொஞ்சம் கொஞ்சமாய் அவள் தலை வாளிக்குள் அமிழ்ந்தது.. மூச்சு திணறி அவள் நகர முற்பட்டாள்.. ஆனால் முடியவில்லை... நீர் குமிழிகள் அவள் மூக்கருகே வெளிப்பட்டு வெடிக்க.. அது அந்த நீர்குமிழிகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது... சற்று நேரத்தில் குமிழிகள் எழும்பவில்லை...

அது அவளை பார்த்து அழுதது.. அது... அவள் உணர்வுகள்..!! அவளின் மன எண்ணங்கள்..!! அவை தான் அது..!! மாயை போன்றது..!!

சத்யா அதனுடன் நின்றுகொண்டிருந்தாள்..!! இப்போது சத்தமாய் அழுதாள்..அவள் சடலம் தரையில் இருந்தது தலை வாளிக்குள் கவிழ்ந்திருந்தது....!!

தொடர்வேன்..

Next episode will be published as soon as the writer shares her next episode.

{kunena_discuss:1133}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.