(Reading time: 12 - 23 minutes)

10. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்

ஆகாயம் சேராமல் தனியே வாழ்வது

ஏனோ ஏனோ ஏனோ...

ஓ காதலே உன் பேர் மௌனமா

நெஞ்சோடு பொய் சொல்லி நிமிடம்

வளர்ப்பது சரியா..சரியா.. சரியா

தொலைவில் தொடுவான் கரையை

தொடும் தொடும்

அருகில் நெருங்க விலகி

விடும் விடும்

கோவை நகர ஜங்ஷனை நெருங்கிக் கொண்டிருந்தது நீலகிரி எக்ஸ்பிரஸ்.....கோவை என்றாலே அதன் கிளைமேட் பிடிக்காதவங்க யாரும் இருக்க மாட்டாங்க..,அந்த கிளைமேட் தான் என்னையும் அங்க கூப்பிட்டுச்சு அதனால நாம இப்ப அங்கதான் நம்ப அடுத்த ஸ்பார்டா பிக்ஸ் பண்ணி இருக்கேன்..,நாம எல்லாரும் இந்த கோடை வெயில இங்க கொஞ்சம் இளைப்பார்வோம்...

அந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் கோவையை நெருங்கிக் கொண்டிருக்க தன்னை மறந்து தூங்குபவளை பார்த்த அஸ்வின் ஒரு பெருமூச்சு விட்டான்.

மணி காலை 4:30 யை நெருங்கிக் கொண்டிருந்தது.கோயம்புத்தூர் ஜங்ஷனை அது நெருங்கிக் கொண்டிருந்தது.இன்னும் சில நிமிடங்களில் அது கோயம்புத்தூர் ஜங்ஷனை அடைந்துவிடும்.

 தனக்கு எதிரே நன்கு உறங்கி கொண்டிருந்தவளைப் பார்தவனது கண்கள் அவளிடமே இருந்தது.கத்தரிப்பு  மற்றும் வெள்ளை நிற சல்வாரில் அழகு ஓவியமாய், பயணக் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தாள் கவி.

இந்த இரண்டு வாரங்களில் நடந்தவை அனைத்தும் அவனது நினைவுகளில் வந்து சென்றது.

ன்று தனது மொபைல் ஒலியில் கலைந்தவன்..,அதனை வேக வேகமாக அணைத்துவிட்டு தனது அருகில் படுத்திருந்தவளை  பார்த்தான் அஸ்வின்.ஆனால் அவளோ கொஞ்சம் கூட தனது உறக்கம் களையாமல்  நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.

தனது மொபைலை எடுத்துக்கொண்டு அவளது நெற்றியில் படிந்திருந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டவன் அவளது நெற்றியில் தனது இதழை மெதுவாக ஒற்றி எடுத்தான்.அவளது அறையை மெதுவாக  மூடிவிட்டு வெளியே அவன் வருவதுக்கும்,கவியின் நண்பர்கள் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

அவனை  பார்த்து அவர்கள் கத்தவில்லை,அனன்யாவின் அருகில் வந்த அஸ்வின்,

“அனு..,கவிக்கு பால்ல தூக்க மாத்திரைய கலந்துக் கொடுத்தியா..”என்றுக் கேட்டான் அஸ்வின்.

“அப்படியெல்லாம் இல்ல அண்ணா..,அவளுக்கு நல்ல டயர்ட் அதான் நல்லா தூங்கறா...” என்றாள் அனன்யா.

“அனு..,நீங்க எல்லாரும் அவளோட ப்ரண்ட்னா,நான் அவளோட ஹஸ்பண்ட்....,உங்கள விட அவளை எனக்கு நல்லா  தெரியும்..,சின்ன சவுண்ட் வந்தாலும் அவ தூக்கத்திலே இருந்து எழுந்துடுவா....அது ஆழ்ந்த தூக்கமா இருந்தாலும் சரி....”என்றுக் கூறினான் அஸ்வின்.

“அது வந்து அஸ்வின் அண்ணா..,கவி ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தாளா அதனாலதான்..”என்று இழுத்தாள் மித்ரா.

அதற்கு அனைவரையும் ஒரு முறை முறைத்து விட்டு “அவளை நல்லா பார்த்துக்கோங்க...”என்றுக் கூறி விட்டு செல்ல எத்தனிக்க..

“நாங்க இன்னைக்கி நைட் உங்க வீட்டுல ஸ்டே பண்ணிக்கலாமா...”என்றுக் கேட்டான் அர்னவ்.

“இதலாம் நீங்க என்கிட்ட கேக்க வேணாம்..,அது உங்க வீடு மாதிரி..,நானும் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..”என்றுக் கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

அவன் சென்ற பிறகு மித்ராவையும் அனன்யாவையும் நன்கு தூங்க சொல்லிவிட்டு அமர்,அர்னவ்,சுதாகர் மூவரும் அஸ்வினின் வீட்டிற்கு சென்றனர்.

அடுத்தநாள் காலையில் எழுந்த கவி..,ஒரு புத்துணர்ச்சியை உணர்ந்தாள்.மணியை பார்த்தவள் திடிக்கிட்டு எழுந்தால் மணி 10:00யை நெருங்கிக் கொண்டிருந்தது. தனது அருகிலே தூங்கிக் கொண்டிருந்த தனது தோழிகள் இருவரையும் பார்த்தவள்..,எழுந்து  தன்னை தூய்மைப்படித்துக் கொண்டு அவர்களுக்கும் சேர்த்து தேநீர் தயாரிக்க சென்றாள்.

டீயை தயாரித்து விட்டு அவர்களை அவள் எழுப்பிவிடவும்..,காலிங்பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

அஸ்வினாக தான் இருக்கும் என்று நினைத்து..,கதவை திறந்தாள்.அங்கு அவனுக்கு பதில் அவளது தோழர்களே இருந்தனர்.அஸ்வினை எதிர்பார்த்து கதவை திறந்த அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு எழுந்தது..,அது என்ன உணர்வு என்று அவளுக்கே தெரியவில்லை...

அதனை அவளது நண்பர்களும் குறித்துக்கொண்டனர்.அஸ்வின் அவர்களிடம் கூறியது உண்மையே என்று அவர்களுக்கு தோன்றியது.

நேற்று அவனது வீட்டிற்கு சென்றபோது அவன் கூறியது..”நான் நாளைக்கு ஊருக்கு போறேன்..,நான் இங்க அவ முன்னாடி இருந்தா அவ இன்னம் குழம்புவா..,அதனால தான்..,ஆனா அவ என்ன ரொம்ப மிஸ் பண்ணுவா..”என்றுக் கூறினான் அஸ்வின்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.