(Reading time: 12 - 23 minutes)

“அவ உனக்காக சமைச்சிகிட்டு இருக்காடா..”என்றுக் கூறினார்.

“ஆமா..புலவி..,பெரியம்மா காலையில சமையலறைக்கு போனவங்க தான்..இன்னும் வரல..,அண்ணா பாரின்லேருந்து வந்தப்பக் கூட இப்படி அவங்க சமைக்கல..”என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்தான் விஷ்வா.

“டேய்..எருமை சும்மா இருடா..,போய் என்னோட லக்கேஜ்ஜ எடுத்துக்கிட்டு வா..”என்றுக் கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே சென்றபின் விஷ்வா,ஆகாஷ் பக்கம் திரும்பிய நடராஜன்

“விஷ்வா..,அவ ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கா..,அவக்கிட்ட......,யாரும் அவ கஷ்ட்டப்படுற  மாதிரி நடந்துக்காதீங்க..”என்று அவனுக்கு சொல்லுவது போலே ஆகாஷிற்கு சொல்லிவிட்டு சென்றார் நடராஜன்.

தனது அப்பாவைப் பார்த்து ஒரு அடிபட்ட பார்வை பார்த்தான் ஆகாஷ்.

அவனைப் பார்க்காமல் உள்ளே சென்றார் நடராஜன்.

தனது அண்ணனின் நிலையை உணர்ந்தவன் அவனின் தோள்களை தடவிவிட்டு  டிக்கி பக்கம் சென்றான்.

ஆகாஷிடம் நடராஜன் பேசி பல வருடங்களை கடந்துவிட்டது.அவன் பட்டாசு வெடித்து கவி எப்பொழுது அடிப்பட்டாலோ அப்பொழுதிலிருந்து அவர் அவனிடம் பேசுவதில்லை.யார் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

கவிமலர் வருகிறாள் என்றவுடனே நாராயணன் அவளுக்கு  பிடித்த பதார்த்தங்களை செய்யுமாறு தனது மூத்த மருமகள் மஞ்சுளாக்கு ஆணையிட்டிருந்தார்.அதனால் மஞ்சுளா கவிக்கு பிடித்ததை செய்துக் கொண்டிருந்தார்.காவ்யா அவரது அருகில் நின்றுக் கொண்டு வம்பு வளத்துக் கொண்டு இருந்தாள்.

உள்ளே சென்ற கவி நேரே சமயலறைக்கு சென்றாள்.காவ்யா இருப்பதைப் பார்த்து பல்லி பல்லி என்று கத்த ஏற்கனவே பல்லி என்றால் பயம்க் கொண்ட காவ்யா ஆ..வென்றுக் கத்த அவளைப் பார்த்து சிரித்த கவி மஞ்சுளாவை பின்னிருந்து அணைத்தாள்.

“அத்தை உங்க சமையல் வாசனை என்னை உங்களிடம் இழுத்து வந்துவிட்டது அத்தை அத்தை...”என்று வசனம் பேசியவளை பின்னிருந்து அடித்தாள் காவ்யா.

“எதுக்குடி..என்னை பயமுறுத்துனா..” என்று அவளை அடித்தாள் காவ்யா.

“நான் எங்க உன்ன பயமுறுத்துனேன்,நான் பல்லி இருக்குனுதானே சொன்னேன்...” என்று கவிக் கூறிக்கொண்டே தனது அத்தை சுட்டுக் கொண்டிருந்த முறுக்கை சுவைக்க தொடங்கினாள்.

“இங்க பாருங்க பெரியம்மா,இவ பொய் சொல்லுறா..”என்று  அவளை முறைத்துக் கொண்டே மஞ்சுளாவின் அருகில் சென்று நின்றாள் காவ்யா.

“நானா பொய் சொல்லுறேன்..,அத்தை நீங்க சொல்லுங்க நானா..”என்று கவியும் ஆரம்பிக்க அங்கே ஒரு போரே நடந்தது.அவர்களுடன் விஷ்வாவும் சேர்ந்துக்கொண்டான்.பின்னர் அங்கே ஒரு போர்க்களமே நடந்ததது.

அதை பார்த்து மஞ்சுளா சிரித்தார்.நாராயணன் அதைப் பார்த்துவிட்டு தனது பேத்தி இன்று இருப்பது போலே  என்றும் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

அண்ணல அவருக்கு தெரியவில்லை இந்த சந்தோஷம் இன்னும் கொஞ்ச நாள்கூட நிலைக்காது என்பது...................

ஓ காதலா உன் பேர் மௌனமா

சொல்லொன்று இல்லாமல்

மொழியும் காதலும் இல்லை

இல்லை இல்லை உலகத்தில்

ஓ காதலா ஓர் வார்த்தை சொல்லடா

முதல் வார்த்தை சொல்வேன்  நான்

தினம் சொல்வேன் எந்தன் காதல்

சொல்வேன்

ஊடலில் அழியாமல் வாழும்

காதல் சொல்வேன்

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.