(Reading time: 5 - 9 minutes)

09. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

AEOM

ரவின் அமைதியில் மனதின் அமைதியின்றி தவிப்பவர்கள் பலர். அமைதிதான் இங்கு அனைவருக்கும் கிடைப்பதற்கு அரிய பொக்கிஷமாய்  உள்ளது.

அப்படிதான் அமைதியில்லாமல் அந்த இரவில் தவித்து கொண்டிருந்தனர் கவியின்  நண்பர்கள்.தங்களது தோழியின் வாழ்க்கையில் இன்னும் தாங்கள் அறியாத பக்கங்கள்  பல  உள்ளன,அதுவும் அவளுக்கு வலியை ஏற்படுத்திய பக்கங்கள் என்பதே அவர்களுக்கு ஒரு வித வலியை ஏற்படுத்தியது.

“என்னால நம்பவே முடியலடா..,கவிக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு..,அதுவும் அஸ்வின் தான் அவளோட கணவனு..”என்று அங்கு அதுவரை நிலவிவந்த அமைதியை கலைத்தான் அமர்.

“உன்னால மட்டும் இல்ல..,இங்க இருக்குற எல்லாருக்கும் தான் நம்ப முடியல..”என்றாள் மித்ரா.

“நாங்க  அவ கூட இல்லாத இந்த நாலு வருஷத்துல அவளோட வாழ்க்கையே மாறி போயிடுச்சு..,என்னால நம்பவே முடியல..”என்றாள் அனன்யா.

“முடிஞ்சிபோன விஷயத்த விடுங்க இனிமே நடக்க போவத பத்தி நாம பேசலாம்..”என்றான் சுதாகர்.

“எனக்கு தெரிஞ்சு அவள அஸ்வின் கூட  நாம எப்படியாவது சேர்த்து வைக்கனும்..,அவளுக்கு அன்பான குடும்பம் இருக்கு..,அவங்க கூட இவ அழகா வாழனும்..”என்றாள் அனன்யா.

“அவங்க அன்பானவங்களா இருந்தா கவி எதுக்கு அவங்கள விட்டு வரனும்..” என்று கூறினான் அமர்.

“அப்படி இல்ல அமர் சில சந்தர்பங்கள நமக்கு தேவையான நமது உறவுகளே நமக்கு எதிரா இருக்குற மாதிரி தோணும்..,வாழ்க்கையில எப்போதுமே எல்லா உறவுகளும் நம்ம கூட வருவது இல்ல..,எந்த உறவுகுள்ளேயும் பிரவு இல்லமா இருந்தது இல்ல...”என்றான் சுதாகர்.

“அப்ப கவியோட இந்த பிரிவும் நிரந்தரம் இல்லைன்னு சொல்றியா..”என்றுக் கேட்டாள் மித்ரா.

‘அவன் சொல்றது கரெக்ட் தான் மிது..,நாம எல்லாரும் வாழ்கையில எப்படியும் இன்னும் ஐந்து வருஷத்துல செட்டில் ஆகிடுவோம்.என்னதான் நாம கவிய நல்லா பார்த்துக் கிட்டாலும் ஒரு வாழ்க்கை துணை பார்த்துக்குற மாதிரி வராது..”என்றான் அர்னவ்.

“அப்படினா..,கவிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிடலாமா..”என்றாள் மித்ரா.

“அது இந்த ஜென்மத்துல நடக்காது..,அவளே ஒத்துக்கிட்டாலும் அஸ்வின் அத நடக்க விட மாட்டறு..”என்றான் அர்னவ்.

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுற அர்னவ்..என்றான் சுதாகர்.

“சுதா..,அஸ்வின் வெளிய போனப்ப கவியோட கண்கள பார்த்திய அதுல ஒரு தவிப்பு தெரிஞ்சது..,அவ கண்ண விட்டு  அவர் போக கூடாதுன்னு அவ நினச்சா..,அதுபோல அவ சண்டை போடறப்ப கூட அவளோட உரிமையா தான் பேசுனா..,வெறுப்ப அவ காட்டுல..,

அவ மனசுல இப்ப இருக்குறது ஒரே ஒரு குழப்பம் தான்..”என்று க்கு வைத்து முடித்தான் அர்னவ்.

“அது என்னனு நினைக்குற அர்னவ்..” என்றான் அமர்.

“அவளோட பிரச்சனையே அவளோட அப்பாதான்..,அவளோட மனசுல எல்லாரும் தன்னை அவரால தான் எதுக்குறாங்கனு நினைக்குற..,அது தான் அவளோட  பிரச்சனையே..”என்று தனது அனுமானத்தை கூறினான் அர்னவ்.

“இருக்கலாம் அர்னவ்..,அவ சின்ன வயசுலே இருந்து அவரோட பாசத்துக்கு ரொம்ப ஏங்கி போய் இருந்தா..,அது கிடைக்காத போனதால கூட இப்படி அவளுக்கு அவங்க அப்பாவ புடிக்காம போயிருக்கலாம்..”என்று தனது எண்ணத்தை கூறினாள் அனன்யா.

“இருக்கலாம்..”என்றான் அர்னவ்.

“இப்ப நாம என்ன பண்ண போறோம் ..”என்றுக் கேட்டான் அமர்.

“அவ என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு துணையா இருப்போம்...பொறு...அனு..நான் என்ன சொல்லுறனா அப்படி அவக்கூட இருந்தான் அவ தப்பா எதாவது முடிவு எடுத்தாலும் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கணும்..,ஒரு நல்ல நண்பன் எப்போதுமே எந்த நிலைமையிலும் தன்னோட நண்பனுக்கு உதவியா இருந்து அவன நல்வழி படுத்தனும்..,நம்ப கவி செய்யுறது தப்பா ரைட்டானு  தெரியாது..,ஆனா அவ தப்பான வழியுல போக மாட்டா..,நாமளும் அவளை போக விடக் கூடாது.. புரிதா..,அவளை நீங்க எல்லாரும் நல்லா பார்த்துக்கணும்...”என்றான் அர்னவ்.

“எதுக்குடா..,அப்படி சொல்லுற..”என்றுக் கேட்டான் சுதாகர்.

“ஆமாம்..,எதுக்குடா அப்படி சொல்லுற...”என்றுக் கேட்டாள் மித்ரா.

“நான் இந்த குழப்பத்துல சொல்ல மறந்துட்டேன்..,அப்பா நம்மளோட பிசினஸ கொஞ்ச நாள் பாத்துகோனு சொல்லி இருக்காருடா..,அண்ணாக்கும் இப்ப தான குழந்த பிறந்தது..,அவனும் குழந்தையோட டைம் ஸ்பென்ட் பண்ண நினைக்குறான்..,சோ நானும் இப்ப பார்த்துக்கறேனு சொல்லி இருக்கேன்..,சாரிடா..,யார்கிட்டேயும் சொல்ல  முடியல..,கவிய நல்ல பாத்துக்கோங்கடா...”என்றுக் கூறினான் அர்னவ்.

அவனுக்கு தெரியவில்லை அவளை அவன் திரும்பி வரும்பொழுது அவனது தோழியின் நிலைமை இதை விட மோசமாக இருக்கபோவது என்பது..

அதுபற்றி தெரியாத நண்பர்களும்..,அவனுக்கு வாக்கு கொடுத்தனர் அவளை நன்கு பார்த்துக் கொள்கிறோம் என்று...

கால தேவனின் விளையாட்டில் அடுத்த நிமிடம் எவ்வாறு நடக்கும் என்று யாருக்கு தெரியும்..

கவியின் பிரச்சனைகளுடன்..,அர்னவின் பிரிய போகிறோம் என்ற நினைப்பும் அனைவரின் வாயுக்கும் பூட்டு போட அனைவரும் பிளாடை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

தன்னவளின் மூச்சு காற்றின் சூட்டில்  அதுவரை உறங்கிக் கொண்டிருந்தவனின் உறக்கம் அவனது மொபைலின் ஒலியில் கலைந்தது.

அவனது மொபைல் அடித்த சத்தத்தில் எழுந்தவன்..,எங்கு கவி எழுந்துவிட்டாளோ என்று நினைத்து அதனை அவசர அவசரமாக எழுந்தான்.

அப்பறம் என்ன நடந்தது..,அடுத்த எபி சொல்லுறேன்..,அதுவரைக்கும் நம்ப கவி தூங்க..,அஸ்வின் மொபைல ஆப் பண்ண..,அவர்களோட தோழர்க் கூட்டம் அப்படியே நடந்து வர..,நாம அப்படியே பிரீஸ் பண்றோம்.

AEOM

“தங்கம் தனி தங்கம் மாசு இல்ல

தாய் பால் ஒன்னில் மட்டும்

தூசு இல்ல

தாய் வழி சொந்தம் போல

பாசம் இல்ல நேசம் இல்ல...

தாய் கையில் என்ன மந்திரமோ?

கேப்ப களியில ஒரு நெய் ஒழுகும்

காஞ்ச கருவாடு தேன் ஒழுகும்

அவ சமைக்கையில

சொந்தம் நூறு சொந்தம் இருக்குது

பெத்த தாயிபோல ஒண்ணு

நிலைக்குதா..?

சாமி நூறு சாமி இருக்குது

அட தாயி ரெண்டு தாயி

இருக்குதா..”

“அனைத்து தாய் உள்ளங்களுக்கும் ADVANCE HAPPY MOTHER`S DAY

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.