(Reading time: 11 - 21 minutes)

08. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

AEOM

“போனா போறா தானா வருவா

மிதப்புல திரிஞ்சேன்

வீரப்பெல்லாம் வீணாப்போச்சு

பொசுக்குன்னு உடைஞ்சேன்

உன் சுகப்பார்வை உரசுது மேல

சிரிக்குற ஓசை சறிக்குது ஆள

ஏய் தீத்தூவி போனா

அவ வேணும் நான் வாழ..”

வன் வெளியில் இழுத்து போட்ட தாலியில் அவளது நண்பர்கள் அனைவரும் அமைதியாக அதிர்ச்சியில் இருந்தனர்.

“இப்ப ஓகே வா..,நான் உனக்காக ஒன்னும் பேசல புரிதா..”என்றுக் கவியை  பார்த்துக் கூறினான்  அஸ்வின்.

ஆமாம் பொண்டாட்டி மேல ரொம்ப பாசம் தான்...என்று  மெதுவாக முனுமுனுத்த கவி, அஸ்வினின் கைப்பிடியிலிருந்து   விஷ்வாவின் காலரை விடிவித்தவள்,

“நான் தான் எப்பொழுதும் தப்பு பண்ணுவேன் தான அதுபோல தான் இப்பவும் நான் தான் தப்பு பண்ணேன் ஓகே வா..”என்று கூறி விஷ்வாவினிடம் திரும்பியவள்,”நீ போ விஷ்வா ஒன்னும் பிரச்சனை இல்லை...”என்றுக் கூறினாள்.

அவள் அவ்வாறு தன் பெயரை விளித்ததிலே அவள் தன் மீது மிகவும் கோபமாக உள்ளால் என்றுப் புரிந்துக்  கொண்டான் விஷ்வா.

விஷ்வா  பதில் கூறுவதற்கு முன்பு, அவர்களுக்கு இடையே வந்த அஸ்வின்,”ஆமாடி எனக்கு என் பொண்டாட்டி மேல  அதிக அன்பு தான்டி..,நானே உன்ன அடிக்க கூடாதுன்னு நினைச்சேன்..,,இதுல அவன் அடிசுட்டானு சொன்ன எனக்கு கோபம் வருமா வராத..”என்றான் அஸ்வின்.

“உங்க மாமா பொண்ணுன்னு உங்களுக்கு பாசம் மத்தப்படி  இந்த பொண்டாட்டி பாசம்னு சொல்லி என்னை ஏமாத்த பார்க்காத அஸ்வின்..”என்றாள் கவி.

“எதுக்குடி எப்ப பார்த்தாலும் உன்னோட அப்பாவ இப்படி அவர திட்டிகிட்டே இருக்க அவர் உன்மேல எவ்வளவு பாசமா இருக்காருன்னு தெரியுமா..,ஆன அவர் பேர் பாதி உன்னோட பேர்ல வருதுன்னு அந்த பெயர கூட அடுத்தவங்கள கூப்பிட விட மாட்டங்குற...”என்று அவளை பார்த்துக்  கேட்டான் அஸ்வின்.

“ஆமாம் அவர் என்மேல வச்சிருந்த பாசம் பத்தி எனக்கு நல்லாவே தெரியுமே..,உனக்கு என்ன தெரியும் நான் எத்தனை நாள் அப்பா பாசத்துக்கு ஏங்கி இருக்கேன்னு ..,இந்த உலகத்துல இருக்குற அழகான கவிதைகளில் அப்பா-பொண்ணு உறவும் ஒண்ணு,அப்பா பாசமே என்னானு தெரியாம நான் வளர்ந்ததற்கும்,அவர்தான் காரணம்..,அவர அப்படியே ஏத்துக்க சொல்லுறியா..,

நீ என்ன சொல்லுவனு தெரியும் அஸ்வின்..,அவருக்கு நான் எங்க அம்மா  கருவில் உருவானதே தெரியாது....,எங்க அம்மாதான் அவரோட இந்த நிலைமைக்கு காரணம்னு சொல்ல சொல்லு அவரை..”என்றாள் கவி.

“அவர் உங்க அம்மா மேல ரொம்ப அன்பா இருந்ததால தான் அவங்கள இன்னமும் யார்   முன்னாடியும் எதுவும் சொல்லமா இருக்காருன்னு புரிஞ்சிக்கோ..”என்றான் அஸ்வின்.

“ஆமாம் எங்க அம்மா மேல ரொம்ப அன்பு இருந்ததால தான் அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு..,ஒரு பொண்ணுக்கு அப்பாவா வந்து இருக்காரு..,இப்ப என்ன தேடுறாரு..,அவருக்குதான் ஒரு பொண்ணு இருக்குல அப்புறம் எதுக்கு என்ன இப்படி டார்சர் பண்றாரு..” என்றாள் கவி

அவளது கேள்விக்கு அஸ்வினிடம் பதில் இல்லை.ஒரு வேலை பதில் இருந்தும் அவன் அதை கூறவில்லையோ யாருக்கு தெரியும்  அது.

“அவனுக்கு இன்னொரு மக  இருக்கலாம் கவி,ஆனா எனக்கு நீதான்டா பேத்தி..”என்றார் ஜனார்த்தனன்.

“ஏனோ உன்ன பாத்தா உள்ள

சுருக்குனு வருது

ஆனா கிட்ட நீயா வந்தா

மனுசுங்க விழுது

எதுக்கிந்த கோபம் நடிச்சது போதும்

மறைச்சு நீ பார்த்தும்  வெளுக்குது

சாயம்

ஏய்..நேத்தே நான் தோத்தேன் அட

இதுதான் உன் வேகம்..”

“என்ன மனிச்சிடுங்க தாத்தா..,நான் உங்க குடும்பத்துக்கு வேண்டாம்..,எனக்குள்ள இன்னும் ஆறாத காயங்கள் பல  இருக்கு..,அதுபோல கேள்விகளும்  இருக்கு அதுக்கான  பதில்களும் உங்க கிட்ட  இருக்கலாம்..,ஆனா அதை ஏத்துக்குற அளவு நான் இன்னும் பக்குவ படலை.., அதனால எதுவும் வேணாம் தாத்தா..,அப்படியே உங்க பேரனுக்கும் வேற பொண்ண பார்த்து  கல்யாணம் பண்ணி வச்சிடுங்க.அவர் ஒன்னும் விடுபட முடியாத அளவு என்கிட்ட மாட்டிக்கல..”என்று முடித்தால் கவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.