(Reading time: 12 - 23 minutes)

அதை அவளது நண்பர்கள் இப்பொழுது நேரிலே பார்த்து தெரிந்துக் கொண்டனர்.

அர்னவ் கவியிடமும் தனது பயணத்தைப் பற்றிக் கூறினான்.

“அர்னவ்..,கலக்குற போடா..,குடும்ப பொறுப்பெல்லாம் ஏத்துக்க போற..”என்று கூறி அவனை கிண்டல் செய்தாள் கவி.

அவள் தான் இயல்பாய் இருப்பது போல இருந்தாலும் அவள் கண்களில் ஒரு குழப்பமும் ஒரு ஏக்கமும்  தெரிந்தது.

வ்வாறே ஒரு வார காலம்  சென்றது.கவி தனது முடிவுப் பற்றி யோசிதுக் கொண்டிருந்தாள்.

அவளால் ஒரு தெளிவான  முடிவை எடுக்க முடியவில்லை.

அஸ்வினும் அவளை  தொந்தரவு செய்யவில்லை.

அர்னவும் ஊருக்கு சென்று விட்டான்.

அஸ்வின்  அவளை நேருக்கு நேர் சந்தித்து பத்து நாட்கள் ஆகியிருந்த நிலையில்..,கவி அஸ்வினுக்கு கால் செய்தாள்.

அஸ்வின் அதை எதிர்பார்த்து தான் இருந்தான் ஆனால் அவன் இன்னும் முன்னாடியே எதிர்பார்த்தான்.

“ஹலோ...”என்றாள் கவி.

“சொல்லு..”என்றான் அஸ்வின்.

“நா..ன் ஒரு முடிவு பண்ணியிருக்கேன்...”என்றாள் கவி.

அவளது முடிவு அவனுக்கு தெரியும் அதனை அவள் வாயால் கேட்க வேண்டும் என்று நினைத்தான் அஸ்வின்.

“ம்..சொல்லு..ம..கவி”என்றான் அஸ்வின்.

இருவர் மனதில் ஏனோ பட பட

ஒருவர் பார்த்தால் மௌனம் உடைபடும்

நீ பெண்மையே கருவம் ஏனடி

வாய் வரை வந்தாலும் வார்த்தை

மறைப்பது ஏனோ ஏனோ ஏனோ

நீ சுவாசமே உடம்பில் ஊடலா

என் ஜீவன் தீண்டாமல் வெளியே

செல்லாதே

நீ வெற்றிக் கொள்ள உன்னை

தொலைக்காதே

யார் சிரித்தாலும் பாலைவனகள்

மலரும்

“நான் உங்க வீட்டுக்கு வரேன்..(ராட்சசி..,நம்ப வீடுன்னு சொல்லுறாளா...பாரு..என்று அவளை திட்டிக் கொண்டிருந்தான் அஸ்வின்)....ஆனா ஒரு கண்டிஷன்..,நான் அந்த ஆளுகிட்ட பேச மாட்டேன்..(அவள் இதை சொல்லும் பொழுது அந்த புறம் அவனது உடல் விரைத்தது..)..என்ன யாரும் இந்த விஷயத்துல தொந்தரவு செய்யக் கூடாது..”என்றுக் கூறினாள் அவள்.

அந்தபுறம் அமைதியே அவளுக்கு பதிலாக கிடைத்தது.

அவனின் அமைதி அவளை கோபப்பட வைத்தது.தெரியும்டா உன்ன பத்தி உனக்கு பொண்டாட்டிய விட உனக்கு மாமனார தானா பிடிக்கும் என்று அவனை வறுத்துக் கொண்டிருந்தாள்.

அவனிடம் அமைதியே பதிலாக வர எரிச்சல் அடைந்தாலும்,மீண்டும் பேச ஆரம்பித்தால்..,”நான் சொன்னது புரிதா..,எனக்கு அவங்க எல்லாரோட கல்யாணமும் நடக்கணும்..,அதனால்தான் நான் வரேன்..புரிதா..”என்றுக் கூறினாள் அவள்.

இந்த தடவையும் அவன் அமைதியாக இருந்தால் போனை வைத்துவிடலாம் என்று நினைத்தால்..,ஆனால் அவளது எண்ணத்தை பொய்யாக்கி பேசினான் அவன்.

“சரி ரெண்டுநாள் கழிச்சு போலாம்..,உனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சிக்கோ..”என்று கூறினான் அஸ்வின்.

தோ இன்னும் சிறிது நேரத்தில் அவர்களது ஊரை அவர்கள் சென்று அடைந்துவிடுவர்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவளருகில் சென்று அவளை எழுப்பிவிட்டான்.

கண்ணை விழித்தவள் தனது அருகினில் அவனை பார்த்து  இவன் எங்கே இங்கே.. என்று ஒரு நிமிடம் தடுமாறினாலும் ஊருக்கு செல்வது நினைவில் வந்து..”ஸ்டேஷன் வந்துச்சா...அஸ்வின்..”என்றுக் கேட்டாள் கவி.

“வந்துச்சு கவி..,அப்புறம் என்ன பேர் சொல்லி கூப்பிடாத..,உனக்கே தெரியும் பாட்டி எதாவது சொல்லிடுவங்க..,புரிதா..”என்றான் அஸ்வின்.

அந்த கிழவி சும்மா இருந்தாதான் அதிசயம்.என்ன எதாவது சொல்லலான அதுக்கு தூக்கம் வராதே..என்று மனசுக்குள்ள தான் நினைச்சா...

கோவை ஸ்டேஷன்  வந்தவுடன்..,இருவரும் இறங்கி வெளியில் வந்தார்கள்.இவர்களை அழைக்க வந்த கார் தயராக இருந்தது. விடிந்தும் விடியாமலும் இருந்த காலைபொழுது..,மாசி மாத குளிர் உடலின் ஆழம வரை சென்றுக் கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.