(Reading time: 12 - 23 minutes)

உடல் நரம்புகளை சில்லிட வைத்துக் கொண்டிருந்த அந்த பனியை வேடிக்கை பார்த்து வந்துக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் அவளது பழைய நாட்களை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

அவர்கள் இப்பொழுது அன்னூர் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.அதுதான் அஸ்வினது சொந்த ஊர்.

அதுக்குள்ள நம்ப ஹீரோயின் எப்.பி சொல்லிடுரங்கலாம்.

எல்லாரும் கண்ண மூடாமா மூணு வருசத்துக்கு முன்னாடி போங்க....

வி தனது கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்த காலம் அது...பொறியியல் மூன்றாம் ஆண்டு தேர்வுகளை முடித்து விட்டு கோடை விடு முறைக்காக  தனது சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு செல்ல இருந்தாள் கவி. அந்த வருடத்தில் தனது வாழ்க்கையே மாறுவது தெரியாமல் அந்த விடுமுறைக்கு  ஆசையாக வந்தால் கவிமலர்.

அவளை அழைக்க விஷ்வா சென்றிருந்தான்.அவள் வருவதுக் கூட தெரியாமல் தனது காரில் சாய்ந்துக்கொண்டு தனது விடுதிக்கு வெளியில் நிற்கும் விஷ்வாவை பார்த்தவள்.அவனது சிந்தனையைக் கலைக்காமல் அவனது அருகில் சென்று அவனது காதில் கத்தினாள்.

அந்த திடிர் தாக்குதலில் ஒரு நிமிடம் பயந்தவன்.அடுத்த நிமிடம் அவளது காதைப் பிடித்து திருகினான்.

“ஏய்...வாலு.,நீ இன்னும் திருந்தவே இல்ல..,அதே சேட்டை..”என்று சொன்னான்  விஷ்வா.

“டேய் விடுடா...காதை வலிக்குது எருமை..”என்று அவனது கையை தட்டிவிட்டாள் கவி.

“டேய்..,ஒழுங்கா போய் என்னோட லக்கேஜ்ஜ  எடுத்துடு வாடா..”என்றுக் கூறிக் கொண்டு காரை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவள்  அப்படியே உறைந்து விட்டாள். ஏனெனில் உள்ளே இருந்தவன் ஆகாஷ்.அவனை கண்டால் அவளுள் இன்னமும் சிறு வயதின் தாக்கமும் இருந்தது.அவனை பார்த்தாள் அவளுள் ஒரு வித பயம் இருந்தது.

அப்பொழுது ஆகாஷ் படிப்பை எல்லாம் முடித்துவிட்டு அவர்களது தொழிலை திறம்பட நடத்திக் கொண்டிருந்தான். ஆகாஷ் அவனது தந்தை நடராஜன் அவனிடம் பேசாததிலிருந்து அவனும் கவியின் விஷயத்தில் தலையிடுவதில்லை

அவளது பெட்டியை எடுத்து வைத்துவிட்டு வந்த விஷ்வா அவளது அமைதியை ஏற்கனவே எதிர் பார்த்தவன் போல் அவளது அருகில் வந்து அமர்ந்தான்.

அவன் தனது அருகில் அமர்ந்தவுடன்.. விஷ்வாவின் காதில்,”டேய் உன்னோட அண்ணன் வரானு சொல்லவே இல்ல...”என்று அவன் காதை கடித்தாள்.

“எனக்கே தெரியாது..,நான் காலையில கிளம்புறப்ப தான் அவனும் வரதா சொன்னான்..”என்றான் விஷ்வா.

அதை பார்த்த ஆகாஷிற்கு அவள் மீது கோபம் வருவதற்கு பதில் சிரிப்பே வந்தது.

ஆம்..,இந்த ஆகாஷ் புதியவன் இத்தனை வருட வாழ்க்கை அவனுக்கு பலவற்றை சொல்லி தந்திருந்தது.

ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் கல்வி அவனை பண்படுத்தும்..,தரிச நிலமாய் இருக்கும் அவனது எண்ணங்களையும்,அவனது மனதினையும் அது சீர்படுத்தி பசுமைமாற காடாக மாற்றுகிறது...

அந்த கல்வியும்,உலக அனுபவமும்  ஆகாஷை மட்டும்  பண்படுத்தாமல் விட்டா வைத்திற்க்கும்...

அவன் அதில் கொஞ்சம் மாறியிருந்தான்..,கவியை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவளை தனது குடும்பத்தில்  ஒருத்தியாக ஏற்கும் மனபக்குவம் அவனுக்கு இருந்தது .அதனால் விஷ்வாவும் கவியும் பேசிக்கொண்டு வருவதை அவன் கவனித்துக் கொண்டுதான் வந்தான்.

அவனுடன் வளவளவென வாயடித்துக் கொண்டே வந்தாள்.அவளது இயல்பு அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இருந்தாலும் அவனால் இயல்பாக அவளுடன் பேசமுடியவில்லை.எதுவோ ஒன்று தடுத்துவிட்டது.....

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அவர்களது வீட்டை வந்தடைந்தார்கள்.

அவளை வரவேற்க வாசலிலே நாராயணனும்,நடராஜனும் காத்திருந்தனர்.

காரை விட்டு இறங்கியுடனே தனது தாத்தாவை நோக்கி ஓடிய கவி அவரை கட்டிபிடித்துக் கொஞ்சி அவரது கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்தாள்.

அவரும் தனது பேத்தியின் முகவாயை தடவிக் கொடுத்து அவளை கட்டிக்

கொண்டார்.

“எப்படி தாத்தா இருக்கீங்க..”என்றுக் கேட்டாள்`

எனக்கு என்னடா..,நான் சூப்பரா இருக்கேன்டா..,நீ எப்படி இருக்கடா...”என்றுக் கேட்டார் நாராயணன்.

“நல்லா இருக்கேன் தாத்தா..”என்றுக் கூறியவள் தனது அருகில் இருந்த மாமாவைப் பார்த்தவள்

“எப்படி இருக்கீங்க மாமா..”என்று கேட்டாள்.

அவளது தலையை தடவிக் கொடுத்தவர் “நான் நல்லா இருக்கேன் பாப்பா, நீ எப்டி இருக்க..”என்றுக் கேட்டார் நடராஜன்.

“நல்லா இருக்கேன் மாமா..,அத்தை எங்க..”என்றக் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.