(Reading time: 8 - 15 minutes)

14. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

காபியை கவி குடித்து முடித்தவுடன்  பேச ஆரம்பித்தாள் அந்த பெண்.

"என்னோட பேரு நித்தில்லா.., உங்க ஹஸ்பண்டோட அத்தை பெண்...,நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்த என்னோட மாமாவ நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட.."என்று கவியை முறைத்த படி அவள் சொல்ல ,

ஒரு நொடி கவியின் இதயம் நின்று துடித்தது.

இருவரும் விரும்பியிருந்து தான் இடையில் புகுந்துவிட்டோமோ..என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

அவள் குழம்புவதை பார்த்து சிரித்த நித்தில்லா .ஏற்கனவே அவள் இன்று நடந்த பல விஷயங்களால் குழம்பி உள்ளதால் இதற்கு மேலும் அவளை கஷ்டப்படுத்த விரும்பாமல் தான் பொய் கூறியதாக கூறிவிட்டாள்.

"என்னங்க நீங்க நான் சும்மா ஒரு விளையாட்டுக்கு சொன்னா இப்படி பயபடுறீங்க  "என்று கூறிய உடன்தான் கவிக்கு சரியாக மூச்சு விட முடிந்தது.

"உங்க பேர் என்ன.."என்று நித்தில்லா கேட்க அதற்கு கவி பதில் சொல்வதற்கு முன்பே நித்தில்லாவை சதீஷ் அழைக்க அவள் சென்று விட,சிறிது நேரம்  அங்கு அமர்ந்திருந்தவள் அதன் பின் ஹாலில் அமர்ந்துக் கொண்டாள். மாலை நேரமும் வர அதுவரை அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் கவி.

எங்கோ சென்றிருந்த  ஜனார்த்தனன் வீட்டிற்கு திரும்பி வந்தார்.வந்தவரின் கண்களில் பட்டது சோபாவில் அமர்ந்து தலையை பின்னுக்கு சாய்ந்து தூங்கும் கவிதான் அவரது கண்களில் பட்டாள்.அவளை அப்படி பார்த்ததுமே அவருக்குள் ஒரு சொல்லமுடியாத ஒரு வலி வந்தது.

அவளது எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தார் ஜனாரர்தனன் தாத்தா.

அவர் வந்தமர்ந்த ஓசையில் முழித்தவள் தன் எதிரே அவர் அமர்ந்திருக்கவும் தனது இருக்கையில் இருந்து எழுந்திருக்க போக அதை பார்த்த அவர்,”பரவலமா உட்கார்ந்துக்கோ...”என்றுக் கூற “பரவா இல்ல தாத்தா..”என்று எழுந்துக் கொண்டவள் அங்கு ஒரு ஓரமாக நின்றுக் கொண்டாள்.

காலையில் அவளுக்கு ஆலம் சுற்றிய அந்த பெண்மணி  அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.அதை வாங்கி  பருகியவர்,”எங்கம்மா வீட்டுல எல்லாரும்..,எல்லாரையும் இங்க வர  சொல்லு..”என்று அவர் அந்த பெண்மணியிடம் கூற அடுத்த  நிமிடம் அந்த வீட்டில் இருந்த அனைவரும் அவர்கள் இருந்த அந்த ஹாலில் வந்து சேர்ந்தார்கள்.

அனைவரும் அங்கு வந்தவுடன் பேச  ஆரம்பித்தார் ஜனார்த்தனன்.

“இங்க வாம்மா..”என்று அங்கு ஒரு ஓரமாக நின்றிருந்த அவளை அழைத்தார் ஜனார்த்தனன்.

அவர்  அழைத்தவுடன் அங்கு இருந்த அனைவரும் கண்களும் அவளையே தான் பார்த்தது.

அவரது அருகில் சென்றாள் கவி.

“உன் பேர் என்னம்மா.”என்றுக் கேட்டார் ஜனார்த்தனன்.

அவளது நிலையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று அவளுக்கு  தெரியவில்லை.

அவளது பெயர் கூட ,ஏன் அவளுக்கு கூடத்தான் அங்கு இருப்பவர்கள் யார் பெயரும் தெரியாது...இந்த நிலைமையில் அவளுக்கு திருமணம் முடிந்துவிட்டது,இவர்களுடன் தான் இனிமேல் அவள் வாழப்போகிறாள்..

“பாரு பெயரைக் கேட்டா எவ்வளவு அழுத்தமா நிக்கறா..பாரு”என்றுக் கூறினார் அஸ்வினின் பாட்டி.

“பர்வதம் கொஞ்சம் வாய மூடுறியா..,அவளே பயந்துபோய் இருக்க சும்மா இரு.நீ சொல்லுமா உன் பெயரு என்ன..”என்று கேட்க இந்த தடவை தனது காய்ந்து போன உதடுகளைதனது நாவல் ஈரப்படுத்திக் கொண்கூறியவர்டவள் “கவிமலர்..”என்று தனது  பெயரைக் கூறினாள்.

“கவிமலர் ..”என்று அவளது பெயரை உச்சரித்துப் பார்த்தவர்,”இனிமே நான் உன்ன மலர்னுக்  கூப்பிடுறேன்” என்றுக் கூற தனது தலையை மட்டும்  அசைத்தாள் கவி.

அந்த பெயரை அவர் மட்டும் உச்சரிக்கவில்லை அஸ்வினும் தான் உச்சரித்துப் பார்த்தான்.

“மலர் உனக்கு எல்லாரையும் அறிமுக படுத்துறேன்..,”என்றுக் கூறியவர் அறிமுகபடுத்தி வைக்க ஆரம்பித்தார் அவர்.

“இது உன் புருஷனோட அம்மா ஆனந்தி,என்னோட பொண்ணு ,இது அவனோட அப்பா தியாகராஜ்...”என்றுக் கூறி அவர் அறிமுகப் படுத்தி வைக்க அவள் அவர்களை தயங்கி சினேகமாக பார்க்க அவள் பார்த்தது ஆனந்தியின் கோப பார்வையை தான்.தியகராஜ் பாசமாக அவளை பார்ப்பதுபோல் தான் இருந்தது.அவர்களை அறிமுகபடுத்திவிட்டு அடுத்தவர்களையும் அறிமுகப்படுத்த ஆரம்பித்தார் ஜனார்த்தனன்.

“இது அஸ்வினோட மாமா..,உனக்கு பெரியப்பா பேரு ஞானசம்பந்தம்,இது அவனோட மனைவி உன்னோட பெரியம்மா ஜானகி..,காலையில கூட உனக்கு ஆரத்தி எடுத்தாங்கள அவங்க தான், என்றுக் கூறியவர்,“இது சதீஷ் உன்னோட அண்ணா,இது நிதில்லா அவனோட தங்கச்சி..”என்று  அறிமுகப்படுத்தி வைத்தவர்,கடைசியாக அந்த பாட்டியிடம் வந்து,” இவ உன்னோட பாட்டி,பேரு பர்வதம்மா..,எனக்கு மூக்கணாங்கயிறு போடுறதா நினைச்சி இவள எனக்கு கட்டிவச்சிட்டாங்க..”என்று சிரிக்க அதை பார்த்துக் கவிக்கும் சிரிப்புவந்துவிட்டது..அவள் சிரிப்பதை பார்த்த பர்வதம்மாள் கவியை முறைக்க அவள் தனது சிரிப்பை அடக்கிக்கொண்டாள். சதீஷ்,நிதில்லா இருவரும் அதன் பின் பர்வதம்மாளை ஓட்ட ஆரம்பிக்க,அங்கு இருந்த அனைவரும் இறுக்கம் தளர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.