செய்தியறிந்து அவன் ஏற்கனவே சில ஏற்பாடுகளை செய்திருந்தான். இப்போதும் அவர்கள் பக்கத்துப் பெரியவர்களிடம் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டு அதற்கேற்றவாறு செயல்பட ஆரம்பித்தான்.
அவர்களிடம் பணம் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. அவனே தேவையானதை எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.
அவன் வந்த பிறகு காரியங்கள் தடையின்றி நடைபெற ஆரம்பித்தன.
துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கும் குறை வைக்கவில்லை. குளிர்பானங்கள், டீ, காஃபி வினியோகிக்கப்பட்டன.
மயக்கம் தெளிந்து எழுந்த நேசமலர் தாயின் உடலை வெறித்துப்பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவளின் அமைதி மற்றவர்களை பயமுறுத்தியது.
அவள் வாய் விட்டு அழுதிருந்தால் சற்று நேரத்திலாவது துக்கம் குறைந்திருக்கும். பச்சைத் தண்ணீர் கூட அருந்த மறுத்துவிட்டாள்.
“அக்கா!
...
This story is now available on Chillzee KiMo.
...
வளது உறுத்தலை அதிகமாக்கினர்.
சில நேரம் தங்கைகளை வெறித்துப்பார்த்தாள்.
அவள் மனதில் என்ன நினைக்கிறாள்? என்று தெரியாமல் அவளது வீட்டின் பெண்கள் செய்வதறியாமல் நின்றனர்.
ஜெயசுதாவிற்கு பதினாறாம் நாள் காரியம் முடிந்ததும் மனுதர்மன் அவளை வீட்டிற்கு கூப்பிட அவள் கிளம்ப மறுத்தாள்.