“இந்த மாதிரி நேரம். இந்த மாதிரி நேரம். இதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. உன்னைக் கல்யாணம் பண்ணி தவறு செஞ்சதோட இல்லாம இந்தச் சனியனையும் வயித்தில் சுமந்துட்டேனே. ஏன்டா இது உருவானுச்சுன்னு இருக்கு? இந்த சனியனால்தான் என்னால் என் அம்மாவுக்கு செய்ய வேண்டியதை செய்ய முடியலை. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னா நான் எங்க வீட்டில் இருந்திருப்பேன். வேலைக்குப்போய் சம்பாதிச்சிருப்பேன். என் வீட்டில் உள்ளவங்க உன்கிட்ட கைநீட்ட வேண்டிய நிலைமை வந்திருக்காது. இப்ப எல்லாமே நாசமா போச்சே. நீ என்னென்னவோ சொல்லி என்னை வேலைக்குப் போக விடாம தடுத்துட்டே. இனிமே போகலாம்னாலும் உனக்கு உன் குழந்தைதான் பெரிசா தெரியும். ஐயோ! என் வீட்டில் உள்ளவங்க நிலைமை.”
என்று கதறியவள் தன் வயிற்றிலேயே ஓங்கி அடித்துக்கொண்டாள்.
வீட்டினர் மொத்தமும் சூழ வந்துவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ளாமலே வெளியேறினாள். மனுதர்மனிடம் பேச இது சரியான தருணம் கிடையாது என்று யோசித்தவாறே வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.
மனுதர்மனின் எதிரே நின்றிருந்தாள் வண்ணமலர். அன்று நடந்த பிரச்சினைக்குப் பிறகு இப்போது பேச வேண்டும் என்று அழைத்திருந்தான்.