(Reading time: 12 - 24 minutes)

ர்மதாவின் இந்த செயல் கோமதிக்கு சந்தோஷத்தை கொடுத்தது… மூத்த மருமகள் மட்டும் என்ன அவ்வளவு ஸ்பெஷல் என்று நினைத்து பொறாமை படாமல், நர்மதா இந்த நகைகளை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டதை எண்ணி பெருமைக் கொண்டார்…

யாரை வெறுப்பேற்றுவதற்காக இவள் இவ்வளவும் செய்தாளோ.. அவன் அவனின் வழக்கமான வேலையான அவளை ரசித்துக் கொண்டிருக்கும் வேலையை செவ்வனே செய்தான்… அவனின் ரசனைப் பார்வையை கண்டுக் கொண்டவள், நகைகளை எடுத்து பேசாமல் பெட்டியில் வைத்தாள்.

அலைபேசியில் அவனுக்கு அழைப்பு வரவே அந்த இடம் விட்டு செல்வா செல்லவும், நகைப் பெட்டியை மூடியவள் அதை கோமதியிடம் கொடுத்தாள்.

“என்னம்மா.. ஏன் இதை என்கிட்ட கொடுக்குற….? இது உன்னோடது, உன்கிட்ட தான் இருக்கனும்..”

“இல்லை அத்தை இது உங்கக்கிட்டயே இருக்கட்டும்… இவ்வளவு நாள் இதை நீங்க பத்திரமா வச்சிருக்கீங்கள்ள… அப்படியே வச்சிருங்க…. நீங்க எதிர்பார்க்கிறா மாதிரி துஷ்யந்த் மாமாக்கு சீக்கிரம் கல்யாணமாகி உங்க மூத்த மருமகள் வரட்டும், அப்போ எங்க ரெண்டுப்பேருக்கும் ஒன்னாவே கொடுங்க, வாங்கிக்கிறேன்… அப்படி ஏதாவது நகை வேணும்னா, நானே உங்கக்கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன்…” என்று அவரிடமே கொடுத்தாள்.

அவள் செயலில் அவர் அகமகிழ்ந்து போனார்…. நர்மதா மாதிரியே துஷ்யந்தின் மனைவியும் தங்கமானவளா வரவேண்டும் என்று கோமதி கடவுளை வேண்டிக் கொண்டார்.

போன் பேசிவிட்டு வந்த செல்வாவும் நர்மதாவின் இந்த செயலை கவனித்தான்… அவளைப் பற்றி அவன் இப்போது தெரிந்துக் கொண்டிருந்தாலும், இவளை முன்பு தவறாக பேசிவிட்டோமே என்று அவன் வருந்தவும் செய்தான்.

கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் கங்கா.. துஷ்யந்த் குன்னூர் சென்று இரண்டு நாளாகிறது… இவளிடம் அங்கு செல்லப்போவதை பற்றி அவன் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை… இவ்வளவு தூரம் வந்த திருமண ஏற்பாட்டை எதற்காக நிறுத்தினான்? இவளிடம் விளக்கம் கூறுவான் என்று எதிர்பார்த்தாள், ஆனால் அவன் அதையும் செய்யவில்லை.. இளங்கோ சொல்லி தான் துஷ்யந்த் குன்னூர் சென்ற விஷயம் இவளுக்கு தெரியும்…

சரி இவளாக அவனை அலைபேசியில் அழைத்தாலும் அதை அவன் ஏற்கவில்லை… எதற்காக இப்படி செய்கிறான்..?? ஒருவேளை இந்த திருமண ஏற்பாட்டை நிறுத்தியதற்காக இவள் கோபப்படுவாள்… திரும்ப நீங்க வேறொரு பெண்ணை திருமணம் செய்ய சம்மதிக்க வேண்டுமென்று இவள் கட்டாயப்படுத்துவாள் என நினைத்து இவளிடம் பேசாமல் இருக்கிறானா?? குழம்பி தவித்தாள்..

இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது இவளிடம் பேசாமல் அவனால் இருக்க முடியாது… ஒருவாரம் சென்றால் இவளை அவனால் பார்க்காமல் இருக்க முடியாது..?? இவள் கோபப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் இவளை பார்க்க வருவான்… ஆனால் இப்போது இவளின் அழைப்பைக் கூட அவன் ஏற்காமல் இருப்பதன் காரணம் என்ன..?? அவனுடைய புறக்கணிப்பு இவளுக்கு வேதனையை தருகிறது… இவள் அவனை புறக்கணித்தப் போது அவனுக்கும் அப்படித்தானே இருந்திருக்கும், அவனின் நிலை நன்றாக புரிகிறது.. எல்லாம் புரிந்தும் என்ன ப்ரயோஜனம், இதற்கு ஒரு நல்ல முடிவை எடுக்க முடியாத நிலையில் தானே அவள் இருக்கிறாள். ஒரு முறையாவது அவன் பேசமாட்டானா?? என்று அலைபேசியையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.