(Reading time: 13 - 26 minutes)

அழுகையினூடே அவள் பேசப்பேச அந்தப் பக்கம் எந்த சத்தமும் இல்லை.

“அத்தான்! நான் சொல்றது எல்லாம் நிஜம். நீங்க வேணா இவங்ககிட்ட கேட்டுப்பாருங்க.”

என்றவாறு மஞ்சரியிடம் போனை நீட்டினாள்.

“ஹலோ!” என்று பேச ஆரம்பித்த மஞ்சரி போனின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

“நான் அவளை நம்பறதுக்கு சாட்சி வேண்டாம்மா. அவளது அழுகையே போதும். நான் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன். உடனே கிளம்பி வர்றேன். நீங்க அவளை அழ வேண்டாம்னு சொல்லுங்க. எனக்கும் அங்கேயே வந்து பிசினஸ் ஆரம்பிக்கனும்னு யோசனையிருக்கு.”

அவன் பேசப்பேச ராதாவின் அழுகை அதிகமாகியது. அவன் சமாதானம் செய்தான்.

அவளை அறைக்குள் அழைத்துவந்து படுக்க வைத்தனர். அழுது முடித்த உடன் அவளது முகம் தெளிவாக இருந்தது. மஞ்சரியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

“நா

...
This story is now available on Chillzee KiMo.
...

>“ஐய்! ஆன்ட்டி. நீங்க எப்ப வந்தீங்க?”

குழந்தைகள் அவளை பார்த்துவிட்டு அவளை நோக்கி ஓடிவந்தனர். அதற்குள் அவன் தன் கண்ணில் விளையாட்டிற்காய் கட்டியிருந்த துணியை அவிழ்த்துவிட்டான்.

நேசமலரின் கவனம் தன்னை நோக்கிவரும் குழந்தைகளிடம் இல்லை. அவனிடமே இருந்தது. இதயம் படபடக்க நின்றிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.