(Reading time: 12 - 23 minutes)

"இத்தனை பேரா? எத்தனை நிமிஷ விளம்பரம்?"

"நாங்க அஞ்சு நிமிஷம் எடுத்து கொடுப்போம். அதுலயும் சில எடிட்டிங் பண்ணி மீடியாவுல போடுவாங்க"

"அஞ்சு நிமிஷத்துக்கு இத்தனை பேரா?" என வாய் பிளந்தான் ஜான்.

திடீரென வீட்டினுள் பொருள் ஒன்று கீழே விழுந்து உடைந்த சத்தம் கேட்டு திடுக்கிட்ட ஜான் வீட்டினுள் ஓடினான். வீட்டினுள் எல்லோரும் சூழ்ந்து அமைதியோடு நிற்க அவர்களை விலக்கி என்னவென்று பார்த்த ஜானிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனுக்கு மிகவும் பிடித்தமான புகைப்படமொன்று கீழே விழுந்து சிதறி இருந்தது.

"எல்லோரும் வெளிய போங்க. ஒருத்தர் கூட இங்க இருக்க கூடாது" கோபத்தின் உச்சியில் ஜான் கத்தினான்.

சுற்றி இருந்தவர்கள் அமைதியாக நின்றனர். அங்கு நுழைந்த வசந்த், ஜானை சமாதானப்படுத்த முயற்சித்தான். அவனால் முடியவில்லை. அவன் பலத்தை பயன்படுத்தி வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தான்.

"ஜான் பொறுமையா இரு. உடைஞ்ச படத்துக்கு நான் பணம் வாங்கி கொடுத்திடுறேன்"

"நோ நோ வசந்த். இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது"

"ரிலாக்ஸ் மேன்".

"நீ என்ன சொன்னாலும் நான் சமாதானம் ஆக மாட்டேன் வசந்த்"

இருவரும் பேசிக்கொண்டிருந்த வேளையில் கார் ஒன்று அங்கு வந்து சேர்ந்தது. அதிலிருந்து டைரக்டர் விஷ்வாவும் மாடல் பெண்ணும் இறங்கினர். மாடல் பெண்ணின் அழகில் மயங்கிய ஜான் அவளையே பார்த்தான்.

"யார் அது?"

"அவ தான் விளம்பரத்துல நடிக்க போறா"

"அப்படியா" என வாய் பிளந்த ஜான், தன் காதலரான டைரக்டர் விஷ்வாவிடம் பேசிக்கொண்டு நடந்து வந்த மாடல் பெண்ணிடம் சென்றான்.

"ஹாய் மேம். இதுவரைக்கும் நான் யாருக்கும் விசிறியா இருந்தது இல்லை. முதல் முதலாய் உங்களுக்கு நான் விசிறி"

"ஓ தேங்க் யு". மாடல் பெண்ணிடம் அப்படி ஒரு ஆணவப் புன்னகை.

"உங்களுடைய எல்லா படங்களையும் நான் பார்த்திருக்கேன்"

"நான் படத்திலையே நடிக்கலையே. விளம்பரங்கள்ல மட்டும் தான் நடிச்சிருக்கேன்"

"அது.. அது வந்து..." என ஜான் தடுமாறினான். "நீங்க விளம்பரங்கள்ல மட்டும் தான் நடிச்சிருக்கீங்க. ஆனா நான் உங்க விளம்பரத்தை மூணு மணி நேரம் படம் போலவே பார்ப்பேன்"

"ஆண்ட்ரியா! நேரமாகுது" .டைரக்டர் மாடல் பெண்ணை அழைத்தார்.

"இது யாரு உங்க எடுபிடியா?" என்று ஜான் ஆண்ட்ரியாவிடம் வழிந்தபடி கேட்டான்.

"மிஸ்டர்! யாரு நீ? தேவையில்லாம பேசிட்டு இருக்க"

"சார் சார்" என டைரக்டரின் அருகே வந்த வசந்த், "இவர் தான் வீட்டு முதலாளி" என காதில் மெதுவாக கிசுகிசுத்தான்.

"யாரா வேணா இருக்கட்டும் வசந்த். அவர் ஏன் தேவையில்லாம பேசிட்டு இருக்காரு?"

"நான் பாத்துக்குறேன் சார் நீங்க போங்க"

டைரக்டரும் மாடல் பெண்ணும் வீட்டினுள் சென்றனர்.

"ஜான், நீ ஏன் யார் கிட்டயும் நல்ல பேரையே எடுக்க மாட்டுற?"

"நான் கெட்டவனாகவே இருந்துட்டு போறேன். அந்த ஆளு ஏன் கொதிக்கிற எண்ணெய் போல கொதிச்சிட்டு போறான்"

"அவர் காதலி முன்னாடியே அவரை மட்டம் தட்டுனா கோபம் தானே வரும்"

"காதலியா? யாரது?"

"விளம்பர நடிகை"

"டேய் நிஜமாவா சொல்லுற.நீ ஒண்ணும் விளையாடலையே?"

"எனக்கே சமீபத்துல தாண்டா தெரியும். நான் கூட இப்படியொரு காட்சியை நினைச்சு பாக்கல"

"கண்றாவி கண்றாவி. சொக்கத்தங்கம் போல இருக்கு அந்த பொண்ணு. இந்த சொட்டத் தலையனுக்கு எப்படி கிளிக் ஆச்சு?"

"அது தாண்டா காதல்"

"என்னை கொல்லாதடா. ஜெஸிகா எப்போ வருவா?"

"தெரியலடா. அவளுக்கு முக்கியமான வேலை ஒண்ணு இருக்காம். அதை முடிச்சிட்டு வருவா"

"அவளுக்காக தான் இந்த ஷூட்டிங் கொடுமைக்கெல்லாம் சம்மதிச்சேன்"

"வருவாடா. அவகிட்ட வேற உதவி ஒண்ணு கேட்டிருக்கேன்"

"என்ன உதவி?"

"அப்பாவும் அக்காவும் இன்னும் இரண்டு நாளுல இந்தியா போறாங்க"

"சரி"

"அவங்க வரவரைக்கும் அமேலியாவை ஜெஸிகா வீட்டுல தங்க வைக்கணும்"

ஜான் நக்கலாக சிரித்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.