(Reading time: 12 - 23 minutes)

"என்னடா?"

"இதுக்கு ஜெஸிகா சம்மதிப்பாளான்னு சந்தேகம் தான்"

வேலை செய்துகொண்டிருந்த இரண்டு பேர் அமேலியா வரைந்த ஓவியத்தை பத்திரமாக எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்றார்கள்.

"அந்த ஓவியத்துல இருக்க பெண் யாரு? ரொம்ப அழகா இருக்கா"

'எத்தனை பேரிடம் தான் சொல்வது' என்ற எண்ணத்தோடு நீண்ட அனல் மூச்சை விட்டெறிந்தான் வசந்த். "அது விளம்பர நடிகையோட படம் தான்"

"ஓவியத்துல வேற மாதிரி இருக்கா, ரொம்ப அழகா. யாரு வரைஞ்சது?"

"அமேலியா"

ஜான் அதிர்ச்சி பார்வையை வசந்தின் மேல் வீசினான். "உண்மையாவா?"

"ஆமா"

"அவளுக்குள்ளே அற்புதமான ஓவியத்திறமை ஒளிஞ்சிருக்கு. உனக்கு வேலை இல்லனாலும் அவ வரைஞ்சு கொடுக்குற ஓவியத்தை வித்தே பொழைச்சிக்கலாம்"

"என்னடா கிண்டலா?"

"இல்லடா, நிஜமா தான் சொல்லுறேன். ஒரு தேர்ந்த ஓவியரால மட்டும் தான் இப்படியொரு அழகான படைப்பை படைக்க முடியும்"

வேலையாட்கள் சிலர் சிறிய டென்ட் அமைத்து அவர்கள் கொண்டு வந்த உணவுகளை பாத்திரங்களில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர். எல்லா விதமான இறைச்சி உணவுகளும், பர்கள், பீட்சா போன்ற பண்டங்களும் அங்கே நிரம்பியிருந்தன.

"என்னடா சாப்பிடுறதுக்கு இவ்வளவு இருக்கு" என்று கூறியபடி உணவு இருக்கும் இடத்தை நோக்கி ஓடினான் ஜான்.

"எல்லாம் நாம சாப்பிடுறதுக்கு தான்"

"இத்தனையும் ஒரு நாள் உணவு தானா?"

"ஆமா"

"இதெல்லாம் சாப்பிடுறதுக்காகவே இவங்க கூட நானும் வேலைக்கு சேர்ந்துக்கலாம் போல இருக்கே"

வசந்த் சிரித்தான்.

"இன்னைக்கு ஷூட்டிங் முடிஞ்சிடுமா?"

"இல்லை, இன்னைக்கு பாக்குறது வெறும் டெமோ"

"அடப்பாவிகளா! வெறும் டெமோவுக்கா இவ்வளவு செலவு செய்யுறீங்க"

"கிரியேட்டிவ் னா சும்மாவா"

தட்டில் சில இறைச்சி துண்டுகளையும் பர்கரையும் போட்டுக் கொண்ட ஜான் ஷூட்டிங் நடக்கும் விதத்தை பார்க்க வீட்டிற்குள் சென்றான். அவனால் நம்பவே முடியவில்லை. ஆச்சர்யத்தில் அவன் கண்கள் அகல விரிந்தன. வீடு முழுக்க விளக்கொளியில் நிரம்பி பவுர்ணமி நிலவிற்குள் நுழைந்து விட்டதை போல அதிசயமான உணர்வை அடைந்தான் ஜான்.

விளம்பர நடிகை ஆண்ட்ரியாவுக்கு பெண்ணொருத்தி மேக்கப் செய்துகொண்டிருந்தாள். டைரக்டர் விஷ்வா புகைப்படம் எடுப்பவரிடம் எதையோ பேசிக்கொண்டிருந்தார். மற்ற வேலையாட்கள் அவரவர் வேலையை செய்துகொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் விளக்கொளியின் மத்தியில் வந்து நின்றாள் ஆண்ட்ரியா. மேக்கப்பால் முன்பை விட அழகாக தோற்றமளித்தாள். போட்டோ சூட் ஆரம்பமானது. அவள் கொடுக்கும் ஒவ்வொரு கண் அசைவுக்கும் முகபாவனைக்கும் போட்டோ எடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

டைரக்டர் விஷ்வா எல்லாம் சரியாக நடக்கிறதா என கண்காணித்துக்கொண்டிருந்தார். அவர் அருகே வந்து நின்றான் ஜான். ஏளனத்தோடு அவனை நோக்கிய டைரக்டர் மீண்டும் தன் கவனத்தை ஆண்ட்ரியாவின் மேல் செலுத்தினார்.

"சாப்பிடுறீங்களா சார். சிக்கன் நல்லாயிருக்கு"

"இடியட்". டைரக்டர் தனக்குள்ளாகவே முணுமுணுத்தார்.

"என்ன சார்?"

"தயவு செஞ்சு ஓரமா போய் நில்லுங்க சார்"

"இது என் வீடு சார்"

"கடவுளே!" என தலையை தேய்த்துக்கொண்ட டைரக்டர், டென்ஷன் தங்க முடியாமல் வசந்தை அழைத்தார். வசந்த் டைரக்டரின் முன்னால் வந்து நின்றான்.

டைரக்டர் வசந்தைப் பார்த்து, "உனக்கு அறிவில்லை? ஷூட்டிங் நடக்கும்போது கண்டவனையெல்லாம் உள்ளே விட்டுட்டு இருக்க?"

"நல்லா கேளுங்க சார். சொட்ட தலையனுக்கு எல்லாம் பிகர் கேக்குது"

டைரக்டர் அதிர்ந்தபடி ஜானை நோக்கினார்.

"எனக்கு எவ்வளவு அடர்த்தியான முடி இருக்கு பாருங்க சார், ஆனா இன்னும் லவ் செட் ஆகலை"

"வசந்த் ப்ளீஸ்" என டைரக்டர் கெஞ்ச ஆரம்பித்தார்.

வசந்த் ஜானை அங்கிருந்து வெளியே அழைத்து சென்றான்.

"ப்ளீஸ்! ஜான் கொஞ்ச நேரத்துக்கு உள்ளே வராத, உன்னை கெஞ்சி கேட்டுகிறேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.