(Reading time: 8 - 16 minutes)

எப்படிப்பட்ட இன்னல்களையும் தாங்கும் சக்தியை தரும் அம்பாளின் முன் நின்றாள் சுப்ரியா. உலைக்களம் போல் கொதித்த மனது கோவிலில் அமைதியானது. கடவுளின் திருவடிதான் எல்லாவற்றிற்கும் மருந்து என்று பெரியவர்கள் சொன்னது எத்தனை நிஜம். காலை பூஜைக்கு தயாரான அம்பாளின் முகப்பொலிவு ஆசீர்வதிப்பைப்போல் இருக்க, ரவியின் வரவிற்காக காத்திருந்தாள் சுப்ரியா, என்னதான் அவன் சொல்லிச்சென்றாலும் கல்பனாவை நேரில் பார்க்காத வரையில் எந்தவொரு முடிவையும் அவள் எடுக்கத் தயாராக இல்லை, மேற்கொண்டு நீண்ட நேரம் தாமதிக்க வைக்காமல் தன் மனைவியுடன் காரில் வந்திறங்கினான் ரவி. 

பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, அந்தக் கல்பனா பேசத் துவங்கினாள். ரவி ரொம்ப அன்பானவர் சுப்ரியா, கடவுள் அளித்த பரிசு, அவருக்கு ஒரு குழந்தை பெற்றுத் தர இயலவில்லையே என்று என் மனம் தினந்தினம் என்னைக் கொல்கிறது. ஏற்கனவே நான்கு வருடங்கள் ஆரம்பிக்கப்போவதாய் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்று எல்லார் எதிர்பார்ப்பும் இருக்க என் கருப்பையின் கதவுகள் இறுக மூடப்பட்டு விட்டன என்பதை யாரும் அறிந்தால்...அன்றுதான் நான் உயிரோடு இருக்கும் கடைசி நாளாக இருக்கும் கல்பனா கண்ணீர் சிந்தினாள். 

சுப்ரியா ரவி என்கிட்டே ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலான்னு சொன்னப்ப எனக்குதான் மனசுக்கு ஒப்பலை, யாருக்கோ பிறந்த குழந்தையை என்னதான் சீராட்டி வளர்த்தாலும், உண்மையான அன்போடு ஒரு ஒட்டுதல் இருக்குமான்னு தோணுச்சி, அதனால்தான் நான் இந்த வாடகைத்தாய் முறையினை நான் தேர்ந்தெடுத்தேன்

ஆனா அதிலும் சிக்கல் வேறு யாராவது அடாவடிப்பெண் வந்து இறுதியில் குழந்தையைத் தரமாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டா, இல்லை தவறுதலா அந்த நேரத்தில் யாராவது ரவியுடன்தவறான முறையில் நெருக்கமாயிட்டா ? தவறான ஆட்கள் கையில் சிக்கி பிளாக்மெயில் செய்தா இன்னும் என்னன்னவோ மனதை பிசையுது. 

அதே தப்பை நானும் செய்ய மாட்டேன்னு நீங்க எதை வைச்சு நம்புறீங்க ? 

அப்படி நீங்க நினைச்சிருந்தா ? ரவி இப்போ எனக்குக் கிடைத்திருக்க மாட்டார். ரவிக்கு உங்க மேல இருக்கிற நம்பிக்கையை விடவும் எனக்கு அதிகம் இருக்கு இதில் எனக்கு பரிபூரண சம்மதம் சுப்ரியா உன்கிட்டே இப்போ நாங்க இரண்டு பேரும் வரம் கேட்கிறோம் முடிவு உன் கையில்தான்னு ! அவள் காலில் விழப் போனாள் கல்பனா

அய்யோ என்ன கல்பனா இது ? எனக்கு யோசிக்க கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நான் நாளைக்கு என் முடிவைச் சொல்லட்டுமா ? 

நான் உன்னை கட்டாயப்படுத்தலை சுப்ரியா, ஆனா எனக்கு ஒரு நல்ல முடிவா நாளைக்குச் சொல்வேன்னு காத்திருக்கிறேன் கல்பனாவின் கையை ஆறுதலாய்ப் பற்றியபடியே ரவியிடம் கண்களால் விடைபெற்று கிளம்பினாள் சுப்ரியா. 

ண்ண வண்ண விளக்குளோடு தன்னை அலங்கரித்துக்கொண்ட அழகான ஆடிட்டோரியம்.

நிரஞ்சனா மாயாவோட கேஸை ரீ ஒப்பன் பண்ணியிருக்காங்களாம்,

அப்போதுதான் தன்னுடைய பர்பாமெண்ட்ஸை முடித்துக்கொண்டு பெருமிதமாய் ரசிகர்களுக்கு கையெழுத்துப் போட்டுவிட்டு ஒப்பனை அறையில் கண்ணாடியில் தன் அழகான உருவத்தை லயிப்போடு பார்த்துக்கொண்டு இருந்த நிரஞ்சனா மெல்ல முகம் மாறினாள். 

என்ன விக்டர் சொல்றே ? நம்மளைப் பற்றி ஏதாவது...

நானும் வினிதாகிட்டே கேட்டேன் இதுவரையில் நம்மளைப் பற்றி ஏதும் தகவல் தெரியலையாம். ஆனால் எந்நேரமும் உங்களைத் தொடர வாய்ப்பிருக்கு அதுக்குள்ளே தன்னை வந்து சந்திக்கும்படி கூறியிருக்கிறாள்

நிரஞ்சனா தன் அழகான விரல்களால் நெற்றியை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். அந்த வினிதா நமக்கு பெரிய இடைஞ்சலா இருப்பா போலயிருக்கு விக்டர் இப்படின்னு தெரிந்திருந்தால் மாயாவுக்கு பதிலா இவளை........

இரு இரு எப்போ சந்தேக வட்டத்திற்குள்ளே விழுந்திட்டோமோ அப்பவே நாம எதையும் யோசித்து நிதானமாத்தான் பேசணும் அதனால வெளியிடங்களில் தனிப்பட்ட விஷயங்களைப் பேசவேண்டாம் வீட்டுக்குப் போகலாம்....விக்டர் சொல்லவும் ஆமோதிப்பதைப் போல் தலையசைத்துப் புறப்பட எத்தனித்தாள் நிரஞ்சனா

மாயாவின் இறப்பில் இன்னும் எத்தனை முடிச்சுகள் விழுமோ அவிழுமோ என்ற எதிர்பார்ப்பில் சூரியன் முன் ஜாக்கிரதையாய் மேகத்துக்குள் ஒளிந்து கொண்டான்.

மாயா வருவாள்

Epsiode # 07

Epsiode # 09

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.