இருந்தாலும் முன்பெல்லாம் காதல் பொங்கப் பார்த்த கணவன் இப்போதும் அவளைப் பார்க்கிறான்தான். அதில் ஒரு ஆர்வம் மட்டுமே இருக்கிறது.
யாரோ அந்நியன் மாதிரி அவளை அவன் காண்பது வேதனையைத் தருகிறது.
அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அங்கே நுழைந்தான் மனுதர்மன்.
“சாரிங்க! நான் இங்கே வந்தது உங்களுக்குப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.”
“ஐயோ! அப்படி எல்லாம் இல்லே.”
“கொஞ்ச நாட்கள் தான் இங்கே இருப்பேன். அதற்குள் எல்லாம் சரியாயிரும்னு நினைக்கிறேன்.”
அவள் அமைதியாக இருந்தாள்.
கொடிமலரும் வளர்மதியும் கோயிலுக்கு கிளம்பினர்.
அவர்கள் கிளம்புவதற்கு முன்பு வினோதகன் போன் செய்திருந்தான்.
அவனைப் பார்க்கும் பொருட்டே இருவரும் கோயி
...
This story is now available on Chillzee KiMo.
...
வையுடன் நின்றிருந்த வண்ணமலர் சலனத்தை ஏற்படுத்தினாள்.
எத்தனை கனவோடு இருந்தான்.
அண்ணனிடம் சொல்லி கொடிமலர் திருமணம் முடிந்த கையோடு தங்கள் திருமணத்தையும் முடிக்க வேண்டும் என்று எத்தனை கனவோடு காத்திருந்தான்.
நல்லவேளை அப்படி எதுவும் ஆகு முன்னர் அவளது சுயநலம் தெரிந்துவிட்டது.