Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

திகாலை எப்போதும் போல் சுகமாய் விடிந்திருக்க அவளுக்கு தான் உடலும் மனமும் சுகமற்று கிடந்தது.

“சே  இன்னிக்கு தானா அந்த சி இ ஓ ஜாயின் பண்ணனும் என்று மனதோடு சலித்து கொண்டிருந்தவள்

அப்பா நேரமாச்சு சீக்கிரம் கிளம்புங்க கோவிலுக்கு போயிட்டு நான் ஆபிஸ் போகணும்” 

என்று அவள் தந்தையை துரிதப்படுத்த,

"அப்போ நீ ஆபிசுக்கு கிளம்புமா சாயங்காலம் போகலாம்" என்ற தன் தந்தையின் அறிவுரையை கேட்டு, "அப்பா என்னை கடுப்பேத்தாம ஒழுங்கா கிளம்பி வாங்க" என்று கூறிவிட்டு தன் ஸ்கூட்டியை எடுத்தாள் இளம்பிறை.

இளம்பிறை K J டெக்னாலஜிஸ் - என்ற மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீட் பதவியில் இருப்பவள்.

K J டெக்னாலஜிஸ்,மென்பொருள் சேவையை மருத்துவ உலகிற்கு வழங்கும் நிறுவனம்.

இறைவன் சன்னதியில் தன் தந்தையின் பெயருக்கு ஓர் அர்ச்சனை செய்துவிட்டு தன் தந்தையின் பிறந்தநாளுக்கென தானே செய்த  பிரத்யேக இனிப்பினை அங்கு இருப்போருக்கு கொடுத்துவிட்டு தனது இரு சக்ர வாகனம் ஓட்டும் திறமையை முழுமையாக செலுத்தியிருந்த போதும் அலுவலகத்திற்கு 45 மணி நேரம் கால தாமதமானதை அவளால் அன்று தடுக்க இயலவில்லை.

"கடவுளே சி இ ஓ ஜாயின் பண்ணும்போது நான் லேட்டா வந்திருக்க கூடாது தானே? அதெல்லாம் சரி அவரை யாரு இன்னிக்கு ஜாயின் பண்ண சொன்னது?  எல்லாம் என் நேரம்.  இல்ல அவன் நேரம்" என்று முரண்பாட்டான வாக்குவாதத்தை தன்னோடு நிகழ்த்திக்கொண்டு  தன் இருக்கையை நோக்கி விரைய, அங்கே அவள் எதிரே வந்தாள் ப்ராஜெக்ட் மேனேஜர் ரேகா.

நம் ஊர் மக்களுக்கு  அவளின் அழகு  அரேபியன் குதிரையை நினைவூட்டும்.

ரேகாவின் குணாதிசயங்களில் ஒன்று,  கோபமோ, வருத்தமோ, அதிர்ச்சியோ, இன்பமோ, அனைத்து உணர்விற்கும் அவள் வெளிப்படுத்தும் முதல்  வார்த்தை ஓ மை காட்.  அந்தந்த உணர்விற்கு ஏற்றவாறு பிற சொற்கள் "ஓ மை காட்"  உடன் கை கோர்க்கும்.

இளம்பிறையை கண்ட ரேகாவோ "ஓ மை காட், இளா ரியலி ,, ஸச்  எ ஹாண்ட்சம் கய் , சே இன்னிக்கா நீ லேட்டா வரணும்", இளம்பிறையிடம் அவள் எண்ணத்தை கூறி சிலாகிக்க முடியாத கவலை அவளுக்கு.

 "செம்ம ஹாண்ட்சம் ஹீரோ  நீ மிஸ் பண்ணிட்ட, செம்ம சார்மிங் ஆ  ஊ என்று அந்த சி இ ஓ புகழ் பாட இவளுக்கு ஐயோ என்று இருந்தது".

ரேகா அழகை ஆராதிப்பவள். அதுவும் அந்த அழகை  ஆண்களிடத்தில் கண்டுவிட்டாள் அருகில் இருப்போரின் நிலை அந்தோ பரிதாபம் தான். சொல்லி சொல்லி சிலாகித்து கொண்டிருப்பாள்.

"ரேகா நானே  லேட்டா வந்திருக்கேன்,  என்னை விட்டுவிடேன் ப்ளீஸ்" என்று இளம்பிறை கெஞ்ச "போடி உன்கிட்ட போய் இத சொல்ல வந்தேன் பாரு" என்று சொன்னவள் "பட் இளா நான் ஒரு விஷயத்துல பிக்ஸ் ஆயிட்டேன் இந்த ரேகாக்கு ஏத்த ஹீரோ நம்ம சி இ ஓ தான்" என்று போகிற போக்கில் ஒரு வெடியை கொளுத்தி விட்டு போக "ஆ" என்று வாய் பிளந்து பார்த்தவள் நம் வேலையை பார்ப்போம் என்ற படி தன் இருக்கையில் அமர மனதிற்குள் ஒரு குழப்பம், "நாம போய் சி இ ஓ வ பார்த்துட்டு வந்துடுவோமா.? நேத்து அசோக் சார் அவ்வளவு சொன்னாரே யாரும் லேட்டா வந்துடாதீங்கன்னு சே என்று மனதுள் சலசலக்க” அடுத்து அவள் அருகில் வந்தான் தமிழரசன்.

“என்ன ..? இளா  என்னும் சேவக் கோழி  இன்னிக்கு லேட்டா வந்து கொக்கரிக்கிது?  என்று கேட்க

தமிழ் பேசாம போயிடு நான் வேற மூட்ல இருக்கேன்”என்று அவள் சொன்னது தான் தாமதம் “மேடம் ஜி , அலுவலகத்திற்கு யார் முதலில்  வருகிறோம் என்பது   முக்கியம் அல்ல என்று வருகிறோம் என்பது தான் முக்கியம்". என்று செந்தமிழில்  அவன் தத்துவம் பேச, அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது.

பின்ன  தினமும் ஆபிசுக்கு சீக்கிரம் வந்து  பெருக்கி கூட்டும் ஆயம்மாவிற்கு துணை இருக்கும்   இளம்பிறை   "செக்யூரிட்டி அம்மா தாயே கிளம்பு ஆபிசுக்கு தூக்கம் வருது" என்ற மிரட்டல் விட்டால் மட்டுமே தனக்கு வீடு என்று ஒன்று இருப்பதை உணர்வாள்.

அத்தகையவள் இன்று தாமதமாக வந்திருக்கிறாள் என்றால்? அவளை சீண்ட வேண்டும் என்று காத்திருக்கும் சில நல் உள்ளம் கொண்டவர்களில் ஒருவர் தான் இந்த தமிழ், அவளை சீண்டிவிட்ட நிம்மதியில் இருந்த அவனோ

சரி சரி விடு, டேக் தி அப்டேட்ஸ் சி இ ஓ செம்மையா இருக்கார். அறிவு, திறமை இதெல்லாம் பற்றி போக போகத்தான் சொல்ல முடியும் பட்  ஆள் கலக்கல். இனி நம்ம பொண்ணுங்க எல்லாம் அடிக்கடி

சி இ ஓ ரூம்க்கு சைட் அடிக்கவே போவாங்க , ம் எங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான்" என்று அவன் கவலையை சொல்லிவிட்டு போக "இன்னும் எத்தனை பேர் வந்து இம்சை பண்ணுவாங்களோ" என்று இவள் தண்ணீர் பாட்டிலை திறக்க

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையாsaaru 2017-09-24 17:11
Nice and cute epi prema., arambathulaye ipadi sutha vaikanumaaa oru aluku 3 peraaa ha ha
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையாsaju 2017-09-22 21:13
super ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையாDevi 2017-09-20 23:32
super ah mandaiaya pichukka vachiteenga Prema :zzz .. onnum puriyala.. waiting to know more..
namma shakshpeare english -ing sema .. ponga :lol: .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையாTamilthendral 2017-09-20 21:57
Very nice update (y)
Kathie, Vikki & yaar antha moonavathu aal :Q:
Ila ninaikkira hero yaaru :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையாApoorva 2017-09-20 10:42
interesting epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையாJansi 2017-09-19 23:51
இளாவுக்கு இத்தனை விசிறிகளா?

Nice epi Prema
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையாAdharvJo 2017-09-19 19:51
Hahaha who loving whom-ing but moon is moving in kadhir's court :dance: so tension free but who indha janani villi :Q: anyway waiting me for next update..so ninga updating soon..Kumar ji u coming middle n entertaining adi kadi :D :P interesting update ma'am :clap:

:thnkx: for this cool update ma'am (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையாmadhumathi9 2017-09-19 19:32
:clap: big :thnkx: Seekkiram epiyai koduthatharkku. Oru ponnai moonu per mommy. But ponnu yaarai virumba pogiralo? Theriavillai. Nice epi. Waiting to read more. (y) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையாAarthe 2017-09-19 18:44
Nice update ma'am :-)
But suspense vechutingale ipdi :lol:
Looking forward :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top