(Reading time: 28 - 56 minutes)

கொஞ்சம் பொறு மரகதம்..நான் பணி நிமித்தமா போகவேண்டிருக்கு..இந்த நேரத்துல போனா

சரியா வருமா தெரியல..அதுனால மொதல்ல என் வேலையெல்லாம் முடியட்டும்.நேரம் கிடச்சா

நான் மட்டும் நீ சொன்ன கோயில் எங்க இருக்கு..என்ன ஏற்பாடு பண்ணணும்கிரத தெரிஞ்சிண்டு

வரேன்.அப்புறம் எல்லாருமா போகலாம் என்றார் சத்யமூர்த்தி.

அதுவும் சரிதான் எனப் படவே மரகதம் ஒன்றும் சொல்லவில்லை.

சத்யமூர்த்தி கும்பகோணம் கிளம்ப வேண்டிய நாள்.அவர் காருக்குள் ஏறி அமரும் வரை அம்மன் கோயிலுக்கு மறக்காமல் சென்று வரும்படி சொல்லிகொண்டேயிருந்தார் மரகதம்.காரணம் இல்லாமல் காரியம் இல்லை...நடக்கவேண்டியது நடந்தே தீரும்.விதியை மாற்றி எழுத யாரால்

முடியும்?

கார் கும்பகோணத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்க சத்யமூர்த்தியின் மனம் முப்பத்தைந்து

வருடங்களுக்கு முந்தைய காலத்திற்குப் பின்னோக்கிச் சென்றது.

மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு கிராமமொன்றில் அரசு மருத்துவ மனையில் ஒரு வருடம் மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்ற அரசு விதிப்படி அல்லிக்குளம் கிராமத்திற்கு பணி

நியமனம் செய்யப்பட்டான் சத்யமூர்த்தி.ஒரு வருடம்தான் என்பதால் தனியாகவே வீடெடுத்துத்

தங்கும் எண்ணத்துடன் அல்லிக்குளத்திற்கு வந்து சேர்ந்தான் சத்யமூர்த்தி.

அல்லிக்குளம்..வாகனங்கள் உமிழும் நச்சுக் காற்றால் மாசுபடாத ஊர்.நாகரீகம் என்ற கோரக் கரங்களிடம்  அகப்பட்டு தன் கற்பை இழக்காத சுத்தமான ஊர்.இயற்கை அவ்வூரை குத்தகைக்கு

எடுத்துக் குடியிருக்கிறதோ என்று எண்ணும்படி எங்கு திரும்பினாலும் பச்சைப்பசேலென கண்ணுக்குக் குளிர்ச்சியாயும் இதயத்திற்கு இதமாயும் அழகையும் வளத்தையும் வாரி வாரி

வழங்கியிருந்தது.வாழும் மக்களும் அப்படித்தான் வெள்ளந்தியான மனத்தோடு.மொத்தத்தில்

அல்லிக்குளம் பூலோக சொர்க்கம்.

M.B.B.S. முடித்துவிட்டு அல்லிக்குளத்திற்கு மருத்துவராகப் பணியாற்றவந்தபோது சத்யமூர்த்திக்கு

இருபத்துமூன்று இருபத்துனாங்கு வயதிருக்கும்.சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ்ந்தவர்

களுக்கு அல்லிக்குளம் போன்ற மிகச் சிறிய கிராமம் போரடிக்கும் பிடிக்காமல் போகும்.அப்படித்தான்

இருந்தது ஆரம்பத்தில் சத்யமூர்த்திக்கும்.அதெல்லாம் வள்ளியம்மாவைப் பார்க்கும் வரைதான்.

வள்ளியம்மா...பதினேழு வயது பருவ மங்கை.சாதரணமாக கிராமத்துப் பெண்களின் உடல் வாகும்

நகரத்துப் பெண்களின் உடல் வாகும் வேறுபடும்.கிராமத்துப் பெண்களின் உடலைத் தொட்டு சுண்டிவிட்டால் வெண்கலத்தைச் சுண்டினால் நங் கென்று ஒரு சப்த்தம் கேட்குமே அதுபோல கிண்

ணென்று இருக்கும்.நாகரிகம் தொடாத செயற்கைப் பூச்சு இல்லாத உடல் ஒப்பனைகள்...குனிந்து

நிமிர்ந்து வீட்டு வேலைகள் செய்வதால் ஒரு இளம் வயது பெண்ணின் அங்கங்களெப்படி இருக்கவேண்டுமோ அப்படியிருக்கும்.அதுவும் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பான கால

கட்டத்தில் பட்டணத்து நாகரிகம் அதிக அளவு நுழையாத காலம் என்பதாலும் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறை என்பதாலும் பெண்களின் அழகும் ஆரோக்கியமும் நன்றாகவே இருந்தன.

இயற்கையின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அல்லிக்குளத்தின் செல்லப் பெண்ணான வள்ளியம்மாவும்

அப்படித்தான் இருந்தாள்.இளமை அவளை வாரி அணைத்திருந்தது.அழகு அழகு பொங்கி வழியும் அழகு..வாளிப்பான தேகம்..மறைந்த எழுத்தாளர் சாண்டில்யன் தனது கடல் புறா,யவன ராணி போன்ற சரித்திரத் தொடர்களில் கதானாயகிகளின் அழகை வர்ணிக்க என்னன்ன வார்த்தைகளை

பயன்படுத்துவாரோ அத்தனை வார்த்தைகளையும் வள்ளியம்மாவின் அழகை வர்ணிக்கப் பயன்படுத்தலாம்.அதில் எள்ளளவும் தவறே இல்லை.

வள்ளியம்மாவின் தந்தை மாரிமுத்து அவ்வூர் முனியாண்டி கோயில் பூசாரி.ஒரு விவசாயத் தொழிலாளியும் கூட.வள்ளியம்மாவைப் பெற்றுப் போட்டுவிட்டு மனைவி போய்ச் சேந்துவிட 

இன்னொருத்தியைக் கொண்டுவந்தால் வ்ள்ளியம்மா சித்தி கொடுமைக்கு ஆளாக நேரிடுமோ

எனப் பயந்து வேறு திருமணம் செய்யாமலேயே இருந்துவிட்டார்.மகளைக் கண்ணுக்குக் கண்ணாக

உயிருக்கு உயிராக பார்த்துப் பார்த்து வளர்த்து வந்தார்.ஒரு நல்ல இடத்தில் பெண்ணைக் கட்டிக்

கொடுக்க வேண்டுமென முனியாண்டியை அவர் வேண்டாத நாளில்லை.சிலசமயம் சிலரின் வேண்

டுதலும் பிரார்த்தனையும் ஆண்டவனின் செவியில் விழாமலும் அவன் திரு உள்ளத்தைத் தொடாமலும் போய்விடுமோ?

ஆயிற்று சத்யமூர்த்தி அல்லிக்குளம் அரசு மருத்துவ மனையில் மருத்துவராய்ப் பொறுப்பேற்று

பதினைந்து நாட்கள் ஆகியிருக்கும்.அதற்குள் அவ்வூரின் ஜனங்களுக்கு அவனைப் பிடித்துப் போய்விட்டது.டாக்டர் தம்பி டாக்டர் தம்பி என உரிமையோடு அழைக்க ஆரம்பித்தார்கள்.மருத்துவ

மனைக்கு நோயாளிகளின் கூட்டம் அதிக அளவில் வர ஆரம்பித்தது.

வெகு அக்கறையாய் தன்னைத் தேடிவந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தான்

சத்யமூர்த்தி.வந்த நோயாளியைக் கவனித்து அனுப்பிவிட்டு பக்கத்திலிருந்த கப்போர்டிலிருந்து

ஏதோ ஒரு பேப்பரை எடுக்க எத்தனித்த போது அறைக்குள் முக்கல் முனகலோடு யாரோ நுழைவது

காதில் கேட்க சட்டெனத் திரும்பிப் பார்த்தான். தன் தந்தை மாரிமுத்துவைத் தாங்கிப் பிடித்தபடி

உள்ளே நுழைந்தாள் வள்ளியம்மா.பளீரென மின்னல் வெட்டியது போலிருந்தது சத்யமூர்த்திக்கு

வள்ளியம்மாவைப் பார்க்க..வைத்த கண் வைத்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் தன்னை மறந்து.

டாக்டர் ஐயா..எங்க அப்பாவுக்கு ரெண்டு நாளா மேலுக்கு சொகமில்ல..ரொம்ப காச்சலா இருக்கு..

ஒண்ணுமே சாப்படமாட்டேங்கிறாரு..கொஞ்சம் பாருங்க டாக்டர் ஐயா..படபடவென சொல்லிமுடித்தாள் வள்ளியம்மா.

பேசுவது பெண்ணா குயிலா...? அழகு மட்டுமல்ல குரலும் எவ்வளவு இனிமை..அசந்து போனான் சத்யமூர்த்தி.

டாக்டர் ஐயா..மீண்டும் வள்ளியம்மா அழைக்க சட்டென இயல்புக்கு வந்த சத்யமூர்த்தி மாரிமுத்து

வை பரிசோதித்து விட்டு சாதாரணக் காய்ச்சல்தான் மருந்து எழுதித்தறேன் சாப்பிடுங்க ரெண்டு நாள்ள சரியாயிடும்...மருந்து சீட்டை வள்ளியம்மாவிடம் கொடுத்து மருந்தை மருந்து கொடுக்கும் இடத்தில் வாங்கிக் கொள்ளும் படி சொல்லி அனுப்பினான்.

அவர்கள் சென்றபிறகும் நீண்ட நேரம் வள்ளியம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தது மனது.அந்த

அழகுப் பதுமையின் பெயரைகூட அறிந்து கொள்ள முடியவில்லையே என்று.நெஞ்சம் தவிக்க

ஆரம்பித்தது.தனக்குள் ஏதோ.நேர்ந்துவிட்டதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அன்று லேடி டாக்டர் லீவு என்பதால் வரவில்லை.சிகிச்சைக்காக வரும் பெண்களையும் இவனே பார்க்கவேண்டியிருந்தது.கூட்டம் அதிகமிருந்தது.ஒவ்வொருவராய்ப் பார்த்து அனுப்பிக்கொண்டி

ருந்த சத்யமூர்த்தியின் மனது பெண்களின் கூட்டத்தில் தன் மனதைக் கவர்ந்துவிட்ட அவளும் வந்திருக்கக் கூடாதா என ஆசைப் பட்டது.

வந்த பேஷன்ட்டை பார்த்து அனுப்பிவிட்டு அடுத்த வரின் வருகைக்காகக் காத்திருந்த சத்யமூர்த்திக்கு தன் தந்தையோடு உள்ளே நுழைந்தவளைப் பார்த்தபோது மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.

டாக்டர் தம்பி எனக்கு ஒடம்பு சரியாயிடுச்சுங்க..எம் மவ வள்ளியம்மாக்கு நேத்துலேந்து விடாத

காய்ச்சலடிக்குது..எதுவும் சாப்ட மாட்டேங்குது..உள்ளே நுழைந்ததுமே புலம்பினார் தந்தை.

ஓ..இந்த அழகுச் சிலையின் பெயர் வள்ளியம்மாவா..?மனதால் பெயரை உச்சரிக்க மனம் இனித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.