(Reading time: 28 - 56 minutes)

ள்ளி.. வள்ளிக்கண்ணு..வள்ளியம்மா..இத பாரு இதபாரு..அழாத..நானிருக்கேன்ல..ஒன்ன விட்டுட மாட்டேன்..கவல படாத..நிச்சயமா ஒங்கழுத்துல தாலி கட்டுவேன்..ஒன்ன எம் மனைவி ஆக்கிக்குவேன்..இது..இது.. சத்தியம் வள்ளிகண்ணம்மா..அவளின் முதுகு தடவி ஆறுதல் சொன்னான்.

அப்ப இப்பவே எங்கழுத்துல தாலி கட்டுவீங்களா..கிராமத்தின் அப்பாவித் தனத்தோடு கேட்டாள் வள்ளி

மௌனமாயிருந்தான் சத்யமூர்த்தி..

திரும்ப பயமானாள் வள்ளி...இவன் செய்தது பொய் சத்யமோ..சந்தேகம் எழுந்தது..

ஏங்க..ஒண்ணும் சொல்ல மாட்ரீங்க..

இல்ல வள்ளி..அப்பிடில்லாம் சட்டுன்னு ஒரு காரியத்த செஞ்சுட முடியாது..தாலி கட்ரதெல்லாம்..

சின்ன விஷயம் இல்ல..திருட்டுத்தனமா தாலி கட்டரத நான் விரும்பல.. நம்ம கல்யாணம் பெத்தவங்க ஆசிர்வாதத்தோட நடக்கணும்.இன்னும் இரண்டு நாள்ல இந்த ஊரில் என் பணி

முடுஞ்சிடுது..நான் சென்னைக்குப் போயி என் அப்பா அம்மாவிடம் நம்ம காதலையும் இப்போதய

நிலைமையையும் சொல்லி அவங்கள சம்மதிக்கவைத்து.அவங்க முழு சம்மதத்தோட  உன் கழுத்துல தாலிகட்டுவேன் வள்ளி..என்ன நம்பு..என்றபடி அவளின் நெற்றியில் லேசாக முத்தமிட்டான் சத்யமூர்த்தி.அதுதான் அவனின் கடைசி முத்தம் என்பது பாவம் அவளுக்குத்

தெரியவில்லை.அவனை நம்பினாள் அந்த பேதை.

சென்னை திரும்பி வீட்டுக்குள் காலடி வைத்த சயமூர்த்திக்கு பலமான வரவேற்பு.பெற்றோர்

பாசத்தைக்கொட்டி திக்குமுக்காட வைத்தனர்.இந்த சந்தோஷமான நேரத்தில் வள்ளியைப் பற்றி

சொல்லலாமா என்று நினைத்தான் சத்யமூர்த்தி.அப்போதுதான் அந்த விஷயத்தை வெடிகுண்டாய்

வீசினார் அப்பா.

சத்யா....

என்னப்பா...

ஒனக்கு..தொழிலதிபர் நேசமணி பத்தித் தெரியும்தானே..?

என்னப்பா இப்பிடி கேட்டுட்டீங்க..அவரபத்தித் தெரியாதவுங்க உண்டா என்ன..?எவ்வளவு பெரிய

இண்டஸ்ட்ரியலிஸ்ட்..எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்..அவருக்கென்னப்பா..?

அவரே நம்ம வீடு தேடி வந்தாருன்னா நீ நம்புறயா..?

என்னப்பா சொல்ரீங்க..

ஆமாம் சத்யா அப்பா சொல்ரது நிஜம்தான்..சொன்னபடியே கிச்சனிலிருந்து கைகளைத் துடைத்தபடியே வந்தார் சத்யாவின் தாய்...

அப்பா தொடர்ந்தார்..சத்யா அவ்ருக்கு ஒரு பொண்ணு இருக்காளாம்..டிகிரி ஹோல்டராம்..

அந்த பொண்ணுக்கு ஒன்ன கேட்டுவந்தாரு..ஒன்ன மாப்பிள்ளையாக்கிக்க அவ்ருக்கு ரொம்ப விருப்பம்..கல்யாணம் ஆனதுமே ஒங்க ரெண்டு பேரையும் ஸ்டேட்சுக்கு அனுப்பி அங்கேயே உன்

மருத்துவ மேல் படிப்ப தொடங்கச் சொல்லி ஒனக்கு விருப்பமான மருத்துவப் படிப்பில் ஸ்பெஷலைஸ் பண்ணச் சொல்லப் போராராம்.கிடைக்குமா இதுமாரி வாய்ப்பு..நானும் ஒன்ன கேக்காமலே சம்மதத்த தெரிவிச்சுட்டேன்.நிலைகுலைந்து போனான் சத்யமூர்த்தி.அப்பாவின்

முடிவுக்கும் விருப்பத்திற்கும் மாற்றாய் அவனால் ஏதும் செய்யமுடியாது.

கனவில் நடப்பது போல் கல்யாணம் நடந்து முடிந்தது.மரகதம் சத்யமூர்த்தியின் மனைவி ஆனாள்.

கல்யாணம் முடிந்து ஒரே வாரத்தில் சத்யமூர்த்தி மனைவி மரகதத்தோடு ஸ்டேட்சுக்குப் போயாயிற்று.

திருமணமாகி கொஞ்ச நாள் வரை சத்யமூர்த்தியின் மனம் முழுதும் வியாபித்திருந்த வள்ளி

காலம் செல்லச் செல்ல ஒரு சிறு புள்ளியாய் இதயத்தின் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.

ஏழு ஆண்டுகள் வெளினாட்டிலேயே வாழ்ந்து திரும்பிய சத்யமூர்த்தி இந்தியா திரும்பும்போது 

அவருக்கு ஆணும், பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள்.

மருத்துவத் துறையில் கொடிகட்டிப்பறந்தார் சத்யமூர்த்தி.பி.ராமமூர்த்தி,கல்யாணசுந்தரம் போன்ற

தலை சிறந்த நரம்பியல் மருத்துவர்களுக்கு இணையாகப் பேசப்பட்டார்.புகழும் பணமும் வந்து

குவிந்தன.

காலம் சுழன்றது.மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானார் சத்யமூர்த்தி.குழந்தைகள் வளர்ந்து

பெரியவர்கள் ஆனார்கள்.அதுவரை சீறிப்பாய்ந்து சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு தேக்கம்

சுணக்கம்.பெண்ணுக்குத் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை..எவ்வளவோ 

மருத்துவ பரிசோதனைகள் பார்த்தாயிற்று..எந்தக் குறைபாடும் இல்லை..கோயில் குளமென்று

சுற்றியாயிற்று பலன் இல்லை..பெரிய பிள்ளைக்கு எந்தக் குறையும் இல்லை ஆனால் முப்பத்தைந்து வயதைத் தொடவிருக்கும் நிலையிலும் திருமணம் கூடிவரவில்லை..மூன்றாவது

பிள்ளயோ ....நன்கு படித்திருந்தும  ஒரு மன நோயாளிபோல் எப்போது எப்படி நடந்து கொள்வான்

என்பது புரியாமல்  எந்த சிகிச்சைக்கும் தீராத பிரர்ச்சனையோடு இருந்தான்.

தினமும் புலம்பி அழும் மனைவி..நாளைக்கு ஒரு ஜோஸியரிடம் சென்று எல்லருடைய ஜாதகத்தையும் காட்டி வந்து பாபம் சாபம் என்று சொல்லி வருந்த ஆரம்பித்தபோதுதான் சத்ய

மூர்த்திக்கு அதுவரை இதயத்தின் ஓரத்தில் ஒரு சிறு புள்ளியாய் அமர்ந்திருந்த வள்ளியின் நினைவு

விஸ்வரூபம் எடுத்து நெருஞ்சி முள்ளாய்க் குத்திக் கிழிக்க ஆரம்பித்தது.வள்ளிக்குத் தான் செய்த

துரோகமே தனது தற்போதய நிலைக்குக் காரணம் என நம்பினார் சத்யமூர்த்தி.

ஆடு ஒன்று குறுக்கே செல்ல சட்டென பிரேக் போட்டார் டிரைவர்.குலுக்கிய குலுக்கலில் கடந்த கால நினைவுகளிலிருந்து விடுபட்டு நிகழ்காலத்துக்கு வந்தார் சத்யமூர்த்தி.

கும்பகோணம் மகாமகத்திற்கு பெயர்பெற்ற ஊர். மிக அருமையான வியாபாரத்தலம் எண்ணிலடங்

கா கோயில்கள்..புண்ணிய பூமி.

சத்ய மூர்த்தி எதற்காக வந்தாரோ அந்த காரியங்களெல்லாம் நல்லபடியாகவே நடந்து முடிந்தன.

மற்ற மருத்துவர்களெல்லாம் காரியம் முடிந்தவுடன் ஊர் திரும்ப இவர் மட்டும் மனைவி மரகதம்

சொன்ன கோயிலைத்தேடிக் கிளம்பினார்

கோயிலைத்தேடிக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் கஷ்டமாக இல்லை.கும்பகோணத்திலிருந்து

மன்னார்குடி செல்லும் ஹைவேஸின் அருகிலேயே அமைந்திருந்தது அக்கோயில்.

கோயில் வாசலில் போய் நின்றது சத்யமூர்த்தியின் கார்.அது ஒரு சாதாரண நாள் என்பதாலோ என்னவோ கூட்டமில்லை.வாசல் கேட் திறந்தே இருந்தது. உள்ளே நுழைந்தார் சத்யமூர்த்தி.

மிகச் சிறிய கோயில்தான்..ஆனாலும் சுத்தமாகப் பளீரென்ற வண்ணப் பூச்சோடு இருந்தது.இவர்

அம்மனைப் பார்க்க சன்னிதானம் னோக்கிச் சென்றபோது அம்மனுக்குக் கையிலிருந்த பூவைச்

சாற்றிவிட்டு வெளியே வந்தார் பூசாரி.எண்பது வயதிருக்கும் அவரின் முகம் தாடி மீசைக்குள்.

பூசாரியைப் பார்த்ததும் அவரை எங்கோ பார்த்ததுபோல் இருந்தது சத்யமூர்த்திக்கு.ஆனால் பிடிபடவில்லை.மேலும் யொசிக்காமல் விட்டுவிட்டார் சத்யமூர்த்தி.

இவரைப்பார்த்ததும் அருகில் வந்த பூசாரி..வாங்கையா..வாங்க..ஆத்தாவ.. பாருங்க என்று

சொல்லியபடியே மீண்டும் சன்னிதானம் நுழைந்து கற்பூரம் காண்பிக்க கைகள் குவித்துக் கும்பிட்டு பின் கன்னத்தில் போட்டுக் கொண்டார் சத்யமூர்த்தி.அம்பாளின் முகத்தைப் பார்த்தவர் திடுக்கிட்டுப்

போனார்...அட..இது என்ன..கண்களை மூடித் திறந்து மறுபடி பார்க்க அம்பாள் தன்னைப் பார்த்துச்

சோகமாய் சிரிப்பதுபோல் இருந்தது அவருக்கு.இது மன பிரமை என சமாதானம் செய்துகொண்டார்

சத்யமூர்த்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.