(Reading time: 28 - 56 minutes)

ப்போது கோயில் வாசலிலிருந்து ஒரு பெண் சப்தம் போட்டபடியே ஓடி வருவது தெரிந்தது.ஓடி

வரும் பெண்ணுக்கு ஒரு பத்துப் பனிரண்டு வயதிருக்கலாம்.

தாத்தா..தாத்தா..பூசாரி தாத்தா..சீக்கிரம் ஓடியாங்களேன்..

என்னாச்சு ராசாத்தி..எதுக்கு இப்பிடி ஓடியாற..

தாத்தா...வள்ளி அத்தக்கி கையும் காலும் வெட்டிவெட்டி இழுக்குது வாயிலேந்து நொரனொரயா தள்ளுது..அத்த கீள விளுந்துட்டாங்க..ஓடியாங்க தாத்தா எனெக்கு பயமா இருக்குது..

அடி..காளியாத்தா..எம் மவளுக்கு என்னாச்சு..வள்ளியம்மா ஒனக்கு என்னாச்சு..எம் மவளே..

கத்தியபடி வீடு நோக்கி ஓட ஆரம்பித்தார் பூசாரி.

வள்ளியம்மா...என்று பூசாரி கத்தியதும் அதிர்ந்துபோனார் சத்யமூர்த்தி.முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு நெஞ்சில் எழுதி வைத்திருந்த பெயர்..மீண்டும் அப்பெயரைக்கேட்டதும்

அவ்ர் மனமும் உடலும் துடித்தன.

வாசல் நோக்கி ஓடிய பூசாரி மீண்டும் உள்ளே ஓடி வந்தார்.ஐயா..ஐயா..நீங்க டாக்டராமே டிரைவரு

சொன்னாரு..ஐயா வாங்கையா..தய்வுசெய்து வாங்கையா..எம் பொண்ணுக்கு என்னாச்சுன்னு வந்து

பாருங்கையா..மாட்டேன்னு சொல்லிடாதீங்கையா..காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினார் பூசாரி.

ம்றுக்கமுடியவில்லை சத்யமூர்த்தியால்.பூசாரி வீட்டுக்குக் கிளம்பும் முன் ஏதோ ஒரு உந்துதலில் மீண்டும் அம்மனின் முகத்தைப் பார்த்த சத்யமூர்த்திக்கு அம்மன் தன் முகத்தைப் பார்த்து சோகமாய்ச் சிரிப்பது போல் இருந்தது.அவருக்கு ஒன்றும் புரியவில்லை.யாருக்குத்தான் புரியும் அவளின் எண்ணமும் செயலும்..?எல்லாவற்றையும் அது நல்லதோ கெட்டதோ நடத்துபவள் அவள்தானே?அவளன்றி எந்த ஓர் அணு அசையும்?

பூசாரியின் வீடு கோயிலின் சுற்றுச் சுவரை ஒட்டியே இருந்தது.வள்ளி..வள்ளியம்மா..வள்ளிகண்ணு

என்று கத்தியபடியே உள்ளே ஓடினார் பூசாரி.

வெகு நிதானமாக நடந்து உள்ளே சென்றார் சத்யமூர்த்தி.எத்தனை பெரிய அதிர்ச்சி தனக்காகக்

காத்திருக்கிறதென்று அறியாமல்.

விழுந்து கிடந்த மகளைக் குனிந்துபார்த்து நெற்றியில் அடித்துக்கொண்டு அழுதார் பூசாரி..வள்ளி..

வள்ளியம்மா என்று கதறினார்.

வாயின் ஓரம் நுரை தள்ளியிருக்க விழுந்துகிடந்த பெண்ணின் அருகில் சென்று குனிந்து பார்த்த

சத்யமூர்த்தியின் சப்தனாடியும் ஒடிங்கிப்போயிற்று.மின்சாரம் பாய்ந்ததுபோல் ஒரு நிமிடம் உடல்

தூக்கிப் போட்டது.வள்ளியம்மா என்ற சப்தம் அடி வயிற்றிலிருந்து நாக்கு நுனிவரை வந்தது.மிகக்

சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார் சத்யமூர்த்தி.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு பதினேழு வயது பருவமங்கையாய்ப் பார்த்த வள்ளியம்மாவா இவள்.தலை முழுதும் நரைத்து,உடல் மெலிந்து சுருங்கிப்போய் கண்கள் குழிந்து ஐயோ ..

வள்ளியம்மா என்னால் தானே உனக்கு இந்த நிலை..நான் பாவி வள்ளியம்மா..ஒன்ன நம்ப வைத்து

ஏமாத்திட்டேன்..ஒன்ன ஏமாத்திட்டு போன சத்யா வந்திருக்கேன் வள்ளியம்மா..இதோ.. இதோ..

உன் முன் கழுத்துல இருக்கிற  இத மச்சத்த என்னோட இந்த ரெண்டு வெரலால எத்தன முற

தொட்டுத் தொட்டுப் பாத்திருப்பேன்..ஒன் கழுத்துல ஒரு மஞ்சக் க்யிற்றக் கட்டி ஒன்ன மனைவி ஆக்கிக்க எதனமுற என்ன கேட்டுருப்ப..ஒவ்வயத்துல குழந்த வளருதுன்னு பயந்து போய் என்ன

தாலி கட்டச் சொல்லி எப்பிடி கெஞ்சின..நான் பாவி வள்ளியம்மா நான் பாவி..எனக்கு மன்னிப்பே கெடையாது வள்ளியம்மா..வாய்விட்டுக் கதறமுடியாமல் நெஞ்சுக்குள் கதறினார் சத்யமூர்த்தி.

ஐயா..ஐயா எம் பொண்ணுக்கு என்னாச்சுன்னு பாருங்க ஐயா..பூசாரியின் கதறல் அவரை நிகழ்

காலத்துக்குக்கொண்டு வந்தது.

வள்ளியம்மாவின் கை தொட்டு நாடித் துடிப்பைப்பார்த்தார் சத்யமூர்த்தி.அந்த வள்ளியின் வாழைத்தண்டு கைகள் எங்கே சுள்ளிதட்டிப் போயிருக்கும் இந்த வள்ளியின் கைகள் எங்கே..நெஞ்சு

வலித்தது சத்யமூர்த்திக்கு.மிஞ்சிமிஞ்சிப் போனால் இன்னும் அரை மணி நேரம் வள்ளியின் உயிர் அடங்கிப்போகும் புரிந்து போயிற்று சத்யமூர்த்திக்கு.

தானாய்ப் புலம்பிக்கொண்டிருந்தார் பூசாரி...வள்ளிக்கண்ணு..என்ன உட்டுட்டுப் போயிடாத..

ஒன்ன ஏமாத்திட்டுப்போன அந்த டாக்டர் பாவி நல்லா இருக்கமாட்டன்..அவன் ஒன்னப் பாக்க ஒரு நாளு வருவான் வருவான்னு நம்பிக்கிட்டு இருந்தயே..இதுவர அந்த பாவி வரலயே..அவன் குடுத்த 

புள்ள கூட அல்பாயிசுல போயிடுச்சே...வள்ளியம்மா...பூசாரியின் ஒவ்வொரு வார்த்தையும்

சத்யமூர்த்தியின் நெஞ்சில் இடியாய் இறங்கின.

சட்டென சத்யமூர்த்தியின் பார்வை சுவற்றில் அடித்திருந்த ஸ்டாண்டிலும் அதில் வைக்கப்பட்டி

ருந்த காளியம்மனின் படமும் படத்தின் கீழே இருந்த தாம்பாளத்தில் இருந்த குங்குமமும் கண்களில்

பட சட்டென எழுந்தார் சத்யமூர்த்தி.இரண்டு விரல்களால் குங்குமத்தை எடுத்த்க் கொண்டு விழுந்து

கிடந்த வள்ளியம்மாவின் அருகில் அமர்ந்தார்.அவள் தலையை மடிமீது தூக்கி வைத்துக் கொண்ட

போது ஐயா ஐயா என்ன செய்ரீங்க..பூசாரி பதறிப்போய் கேட்க...

ஐயா..பூசாரி ஐயா..ஒங்க மக வள்ளியம்மாவ நம்ப வைத்து ஏமாத்திட்டுப் போன டாக்டர் நாந்தான்

இந்த குங்குமத்த வச்சு ஒங்க மகள எம் மனைவியாக்கிக்கப்போறேன்..என்ன மன்னிசுடுங்க ஐயா..

சொல்லிக்கொண்டே குங்குமத்தை வள்ளியம்மாவின் நெற்றியிலும் வகிட்டின் மீதும் வைத்த

சத்யமூர்த்தி வள்ளியம்மாவின் காதருகே குனிந்து வள்ளி..வள்ளிக்கண்ணு வள்ளியம்மா..இதோ..

இதோ ஒன்னோட சத்யா வந்திருக்கேன் வள்ளி..ஒனக்கு குங்குமம் வச்சு ஒன்ன என் மனைவியா

ஏத்துக்கிட்டேன் வள்ளி...இந்த நிமிடத்துலேந்து நீ என் மனைவி வள்ளி..அவளின்நெற்றியில்

முத்தமிட்டார் சத்யமூர்த்தி.ஒரு சின்னத் துடிப்போடு வள்ளியம்மாவின் உயிர் பிரிந்ததை சத்ய

மூர்த்தியால் புரிந்து கொள்ள முடிந்தது.

மகளின் உயிர் பிரிந்த அதே வினாடி மகளுக்காகவே வாழ்ந்த அந்த பாசமான தந்தையின் உயிரும் பிரிந்தது.தன் மகளுக்கு அவள் விரும்பிய அவள் தன் கணவனாகக் கருதியவனாலேயே மனைவி

என்ற அந்தஸ்து கிடைத்துவிட்ட சந்தோஷத்தோடே பூசாரியின் உயிர் பிரிந்திருக்கும்.

எல்லா முடிந்து மூன்று மாதம் ஆகியிருக்கும்.வீட்டில் ஓய்வாய் அமர்ந்திருந்தார் சத்யமூர்த்தி.

என்னங்க..சம்மந்தி ஃபோன் பண்றாரு ..பேசுங்க..

எதிமுனையிலிருந்து..வணக்கம் சம்மந்தி..

வணக்க வணக்கம்..என்ன திடீர்ன்னு...

ஒரு சந்தோஷமான சேதி...நாம தாத்தா ஆகப்போறோம்...ஒங்க பொண்ணு சாதனா முழுகாம இருக்கா..இதோ பாருங்க எம் பொண்டாட்டிய..ஃபோன புடுங்கறா..அவ சொல்லணுமாம்...

வீடே சந்தோஷத்தால் அமளிதுமளிப் பட்டது.

அடுத்து மூத்த மகனுக்கும் பெண்வீட்டார் தேடி வர கல்யாணம் களைகட்டியது.மரகதத்திர்க்கு

தாங்கமுடியாத சந்தோஷம்.எல்லாம்.நீங்க அந்த காளியம்மன் கோயிலுக்குப் போயிட்டு வந்த

நேரங்க..எல்லாம் நல்லதவே நடக்குது..அவ ரொம்ப சக்தியானவதான்...நம்ம கார்த்திக்கும் இனிமே

சரியாயிடுவான்.. எனக்கு நம்பிக்க இருக்குங்க...அசைக்கமுடியாத நம்பிக்கையோடு சொல்லும் மரகத்தைப் பார்த்தார் சத்யமூர்த்தி.அவர் மனம் தனக்குள் சொல்லிக்கொண்டது....

காளியம்மன் தெய்வம்தான்..ஆனா அதற்கும் மேலே நம்ம குடும்பத்தக் காக்க இன்னொரு பெண்

தெய்வம் இருக்கு மரகதம் அவபேரு வள்ளியம்மா....வள்ளியம்மா...அவர் நாவு அந்தப் பெயரை

உச்சரிக்க நெஞ்சமெல்லாம் இனித்தது சத்யமூர்த்திக்கு.

எந்தத் துரோகத்திற்கும் பிராயச்சித்தம் உண்டு.ஆனால் ஒரு பெண்ணுக்குச் செய்யும் துரோகத்

திற்கு பிராயச்சித்தமே கிடையாது..அவளாய் மன்னிக்கும் வரை..இறைவனாலும் இதில்

ஒன்றும் செய்ய முடியாது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.