(Reading time: 28 - 56 minutes)

ண்ணும் கவலப் படாதிங்க...எல்லாம் சரியாயிடும்...உட்காருங்க மிஸ் வள்ளியம்மா.பக்கத்தில் 

போடப் பட்டிருந்த ஸ்டூலைக் காட்டினான் சத்யமூர்த்தி.

மிகநெருக்கத்தில் அமர்ந்திருந்த வள்ளியம்மாவின் அழகு சத்யமூர்த்தியை கிறங்க அடித்தது.

ஒரு மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளியின் அங்க அமைப்புகளைப்பற்றி

சிறிதும் சிந்திக்கலாகாது என்பது சத்யமூர்த்தி அறிந்த ஒன்றுதான் என்றாலும் அவனையறியாமல் அவன் மனம் அவள்பால் சென்றுவிட்டதால் அவளின் அருகாமை அவனைத் திக்குமுக்காட

வைத்தது.அன்று பணிக்கு வராமல் லீவு போட்ட லேடி டாக்டருக்கு மானசீகமாய் நன்றி சொன்னான்.

அன்று அவர் வந்திருந்தால் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காதே என்றும் தோன்றியது.

வள்ளியம்மாவைப் பரிசோதித்து மருந்து எழுதிக்கொடுத்து அனுப்பிய பிறகு வேறு யாரையும் பார்க்க முடியாமல் மனம் அலைபாய்ந்தது.

இரெண்டு நாட்கள் அப்படியும் இப்படியுமாய் வள்ளியம்மாவைப் பற்றிய நினைப்போடே கழிந்தது.

எப்படியாவது அவளின் வீடு எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பியது சத்யமூர்த்தியின் மனது.அல்லிக்குளம் மிகச் சிறிய ஊர் என்பதால் வள்ளியம்மாவின் வீட்டைக்

கண்டுபிடிப்பது அப்படியொன்றும் கடினமில்லை என்றே தோன்றியது சத்யமூர்த்திக்கு.

மருத்துவமனைப் பணிகளை முடித்துவிட்டு வெளியே வந்த சத்யமூர்த்திக்கு தான் தங்கியிருக்கும் இடத்திற்குச் செல்ல விருப்பமில்லை.இன்று எப்படியாவது வள்ளியம்மாவின் வீடு இருக்குமிடத்தை

கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற ஆசையில் ஓர் இலக்கின்றி ஊருக்குள் நடக்கத்துவங்கினான்.

இயற்கையால் சுவீகரிக்கப்பட்ட அல்லிகுளம் அவனை வெகுவாகவே கவர்ந்தது.ஊரின் அழகை

ரசித்தபடியே.நடந்துகொண்டிருந்தான் சத்யமூர்த்தி.

ஊரின் நடுவே அமைந்திருந்தது அந்தக் குளம்.குளத்தைச்சுற்றிலும் படிக்கட்டுகள்.குளக்கரையில் ஒரு அரசமரம்.மரத்தின் அடியில் வானமே கூரையாய் அமர்ந்திருக்கும் ஒரு பிள்ளையார்.சிலு சிலு 

வென காற்று...தன்னையறியாமல் நின்றன அவன் கால்கள்.அப்போது அவன் கண்களில் பட்ட அந்தக்

காட்சி..கண்களை அழுத்தமாய் இரண்டு மூன்று முறை மூடிமூடித் திறந்து பார்த்தான் சத்யமூர்த்தி

காண்பது நிஜமா பொய்யா என்று. கண்ட காட்சி மறையாததால் அது பொய்யல்ல நிஜம்தான் என்று

அறிந்தபோது மனசு பரபரத்தது.

அருகே இருந்த வாளியிலிருந்து ஒவ்வொரு துணியாய் எடுத்து சோப்புப்போட்டு துவைத்துக் கொண்டிருந்தாள் வள்ளியம்மா.குளத்தில் வேறு யாரும் இல்லை.அவள் துணிக்கு சோப்புப் போடும் அழகையும் துவைத்த துணிகளைப் பிரித்து தண்ணீரில் முக்கிமுக்கியெடுத்துப் பிழிந்து கரையில் வைப்பதையும் ரசித்துப்பார்த்தான் சத்யமூர்த்தி.

குனிந்தபடி தன் வேலையில் மும்முரமாக இருந்த வள்ளியம்மாவுக்கு யாரோ தன்னை குறுகுறு

வெனப் பார்பது போல் உள்ளுணர்வு கூறவே நிமிர்ந்து பார்த்தாள்.

வைத்தகண் வாங்காமல் தன்னையே பார்த்தபடி நிற்கும் சத்யமூர்த்தியைப் பார்த்தவுடன் தூக்கிவாரிப் போட்டது வள்ளியம்மாவுக்கு.ஐயோ.. இதென்ன..இவரு டாக்டர் ஐயா இல்ல..இவரு

இங்கெ எதுக்கு வந்தாரு..?என்ன இப்பிடி பாக்கராரு..?சட்டென உதறல் எடுத்தது வள்ளியம்மாக்கு.

திகைப்பு வெட்கம் குழப்பம் எல்லாமாய்ச் சேர்ந்து வள்ளியம்மாவை மேற்கொண்டு வேலை செய்ய விடவில்லை.அவசர அவசரமாய்த் துணிகளை வாளியில் அள்ளிப் போட்டு அவ்விடத்தை விட்டு அகல நினைத்து வாளியைத் தூக்கிக்கொண்டு கிடு கிடுவென படிகளில் ஏறத்துவங்கினாள்.

அவள் படும் அவஸ்தயைப் பார்த்ததும் லேசாகச் சிரிப்பு வந்தது சத்யமூர்த்திக்கு.

வள்ளியம்மா இரண்டு படிகள் ஏறும்போது சத்யமூர்த்தி இரண்டு படிகள் கீழே இறங்கினான்.இரு

வரும் ஒரே படியில் கால் வைத்தபோது....மிஸ் வள்ளியம்மா எல்லாத் துணிங்களையும் துவைக்கலயா...நான் வந்தது ஒங்களுக்குத் தொந்தரவா இருக்கா..?நான்னா போயிடவா..?அவளிடம் 

அவன் கேட்டபோது கொஞ்சனஞ்ச தைரியத்தையும் இழந்திருந்தாள் வள்ளியம்மா.சட்டென கால்கள்

தடுமாற கையில் பிடித்திருந்த வாளி நழுவ உடல் மல்லாந்து கீழே விழவிருந்தாள் வள்ளி(இனி வள்ளி என்றே அழைப்போம் வள்ளியம்மாவை)சட்டென ஒரே தாவாகத்தாவி அவளைத் தாங்கிப்

பிடித்தான் சத்யமூர்த்தி.இந்த ஒரு கணம் இது பாரதிராஜாவின் படமாக இருந்தால் அங்கே நின்றிருந்த அரசமரத்தின் இலைகள் அசையாமலும் பறக்கும் ஒரிரு பறவைகள் பறக்காமலும்

சிறுசிறு அலையாய் ஆடிக்கொண்டிருக்கும் குளத்துத் தண்ணீர் ஆடாமல் அசையாமலும் அப்படியே

ஃப்ரீஸ் ஆகியிருக்கும்.வெள்ளை உடையில் நிறைய பெண்கள் தந்தன தந்தன என்று ராகமிழுத்தபடி

பிண்னணி இசையோடு ஓடி வருவார்கள்.இது படமல்ல நிஜமென்பதால் அப்படியெல்லாம் ஏதும்

நடக்கவில்லை.அனால் நான்கு கண்கள் சந்தித்துக்கொண்டன இதயங்கள் இடம் மாறின என்பது

என்னவோ உண்மை.

காதல்.. ஜாதி மதம் இனம் அழகு படிப்பு அந்தஸ்த்து எதையும் பார்த்துவருவதில்லை அது மனம்

சார்ந்தது இதயத்தோடு சம்பந்தப்பட்டது..காதலுக்குக் கண்ணில்லை என்கிறார்கள்..அனால் அது

கண்களில் தொடங்கி இதயத்தில் நுழைகிறது என்கிறார்கள்..ஒன்றும் புரியவில்லை.எது எப்படியோ

இங்கேயும் ஒரு காதல் கதை அரங்கேறத் தொடங்கிவிட்டது.

காதலர்களுக்கென்று ஒரு தனி சாமர்த்தியம் உண்டு போலும்.உற்றார் உறவினர் ஊர்மக்கள் அறிந்தவர் தெரிந்தவர் பெற்றோர் யார் கண்ணிலும் படாமல் தனியாய் சந்திக்க ஏகாந்தமாய் ஒரிடத்தை எப்படித்தான் கண்டுபிடிப்பார்களோ..இவர்களும் அப்படி ஒரிடத்தைக்கண்டுபிடித்தார்கள்.

அவர்கள் காதல் நான்கடி இடைவெளியில் வளரஆரம்பித்து காற்றும் புகா நெருக்கத்தில் முடிந்தது.

சொல்லப்போனால் அவளை அணைக்காமல் அவனாலும் அவன் அணைப்பின்றி அவளாலும்

இருக்கமுடியாது என்ற நிலைமை ஏற்பட.. விளைவு..? ஆணும் பெண்ணும் சேர்ந்தே தப்பு செய்தாலும் தண்டனை என்னவோ பெண்ணுக்கென்றுதானே ஆண்டவன் வைத்திருக்கிறான்.

முகத்தை இரு கைகளாலும் மூடி குலுங்கி அழும் வள்ளியை அதிர்ச்சியோடும் பயத்தோடும்

பார்த்தபடி சமாதானம் கூட செய்யத் தோணாமல் உட்கார்ந்திருந்தான் சத்யமூர்த்தி.

அழுதுகொண்டிருந்த வள்ளி முகத்திலிருந்து கைகளை விலக்கி நிமிந்து சத்யமூர்த்தியின் முகத்தைப் பார்த்தாள்.திகிலடித்துப்போய் அமர்ந்திருந்த அவனின் தோளைத்தொட இயல்புக்கு வந்தான் சத்யமூர்த்தி.

என்ன சொல்ர வள்ளி...

மீண்டும் கட்டுப் படுத்த முடியாமல் அழ ஆரம்பித்தாள் வள்ளி...

ஆமாம்..சத்யா..நான் மூணு மாசம் முழுகாம இருக்கேன்...கழுத்துல தாலியில்ல..ஆனா வயத்துல

மூணுமாசம்..இது என் அப்பாவுக்கோ ஊருக்கோ தெரிஞ்சா என் நெலம என்னாரது..? ஊர் ஜனங்க

காறிதுப்பமாட்டாங்க?என் அப்பா நிலெம என்னாகும்..?அவர் எவ்வளவு அவமானப் படனும்?

சத்யா..இப்ப என்ன செய்யரது......இனியேலும் தாமதிக்க முடியாது சத்யா..இதோ இந்த முனியாண்டிய சாட்சியா வெச்சு மஞ்சக் கயத்த என் கழுத்துல கட்டி என்ன ஒங்க மனைவியாக்கிக்க

ங்க சத்யா..கெஞ்சி அழ ஆரம்பித்தாள் வள்ளி.பயம் அவள் மனதை ஆக்ரமித்திருந்தது எங்கே சத்யா

தன்னை மறுத்து விடுவானோ என்று.பாவம் பெண்கள்.எத்தனை பெண்களின் வாழ்க்கை இப்படி

பாழ்பட்டிருக்கிறது..சிந்திக்காமல் செய்யும் இளமைத் தவறினால்?

சத்யமூர்த்தி ஒன்றும் அப்படியான அயோக்கியன் அல்ல.ஆனாலும் அந்த நேரத்தில் மிகக் கண்டிப்பான தந்தையின் முகமும் தாய்ப் பாசத்தைக் காட்டியே தன்னைக் கட்டிப்போடும் தாயின்

முகமும் வந்து போயின.சட்டென எந்த முடிவுக்கும் அவனால் வரமுடியவில்லை.தவித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.