(Reading time: 17 - 33 minutes)

" வெற்றிசிறகுகள் " ..! இது அவர்களே  அவர்களுக்காக வைத்து கொண்ட குழுப்பெயர் .. படிப்பு மட்டும் இல்லாமல் , மற்ற ஓய்வு நேரங்களிலும், முதியோருக்கு உதவுதல் , சுற்றுபுறம் தூய்மை செய்வது , சிறுவர்களுக்கு இலவசமாய் பாடம் கற்பிப்பது என்று பொறுப்பாய் இருந்தனர் .. இதோ இப்போதும் கூட பள்ளி விடுமுறையில் , ஊட்டியில் சஹாதேவனுக்கு தெரிந்த ஒரு முதியோர் இல்லத்திற்கு உதவி செய்வதற்காகத்தான் அனைவரும் கிளம்பி சென்றனர் .. 17 வயது நிரம்பிய மகளை தனியாய் அனுப்ப கொஞ்சம் கலவரமாய் இருந்தாலும் , அவளது நண்பர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் அனுப்பி வைத்தார் யுவனியின் தாயார் ..

ஊட்டியில்,

" அம்மாடி ... ஒருநாள் இந்த வேலையை முடிக்கவே இவ்வளவு அலுப்பா இருக்கு .. எப்படித்தான் பெரியவங்க டைலி  இப்படி வேலை செய்றாங்களோ  " - பல்லவன் ..

" பசிக்கிதுன்னா பசிக்கிதுன்னு சொல்லு டா தீனி மூட்டை ..அதை விட்டுட்டு டயர்ட் அது இதுன்னு கதை சொல்லாத " என்றாள்  யுவனி ..

" அடியே , போடி ..நான் கலாய்கிற நிலையில் இல்ல ரொம்ப பசிக்கிது ..  " என்றான் அவன் சோகமாய் .. யுதீஷும்  அவனோடு இணைந்து

" ஆமா மச்சி செம்ம பசி " என்றான் ..

" பார்த்தியா தேவ் .. எப்போ பார்த்தாலும் சண்டைய போடுறானுங்க ..ஆனா சாப்பாடு விஷயம்னு வந்துட்டா  மட்டும்  கட்டி பிடிச்சு உருளுறானுங்க  "

" ஹா ஹா .. சரி டா .. சாப்பிடலாம் .. இந்த குப்பை எல்லாம் மணியம் தாத்தா ரெண்டு தெரு தள்ளி இருக்குற இடத்துல போட சொன்னாரு .. அவரு அப்பறமா கிளீன் பண்ணுவாராம் .. நான் போய்  போட்டுட்டு வரேன் ..வந்ததும் சாப்பிடலாம் "

" டேய் , நான் போய்ட்டு வரேன் "

" வேணாம் நிது "

" ஏன் தேவ் ? எனக்கு சைக்கிள் ஓட்ட  தெரியும் ..நானே போறேன் "

" இல்ல இருட்டிடுச்சு .. நீ பொண்ணு ... சோ வேணாம் "

" அட போங்கடா .. எப்போ பார்த்தாலும் பொண்ணு பொண்ணுன்னு ... அதெல்லாம் நான் பேசியே எதிராளியை கொன்னுடுவேன் " என்றபடி அவன் பதிலுக்கு காத்திருக்காமல் சைக்கிளில்  ஏறி கொண்டாள்  நிதயுவனி ..

" ஓகே டீ .. சீக்கிரமா வா " - பல்லவன்

" தீனி பண்டாரம் ..வரேன் வரேன் " என்று கையசைத்துவிட்டு  அவர்களின் கண்களில் இருந்து மறைந்தாள்  நிதயுவனி .. நிமிடங்கள்  மணி நேரங்களாய்  கரைய , அவளை காணவில்லை ... அதற்குமேலும் பொறுக்காமல் நண்பர்கள் அங்கு சென்று பார்க்க கசங்கிய மலராய் மயங்கி கிடந்தாள்  யுவனி .. அவள் இருந்த கோலத்தை பார்த்து கதறியே இருந்தனர்  அவர்கள் ..

" நிது ... யுவனி " என்று அவளை உலுக்கவும்

" வலிக்கிறது " என்று அவளது முனகல் சத்தம் தான்  கேட்டது .. அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்  நண்பர்கள் அனைவரும் .. மயக்கத்தில் இருந்து விழித்த யுவனியின் எதிரில் நண்பர்கள் அனைவரும் கோபம் , பயம் , கண்ணீர் , என கலவை உணர்வில் இருந்தனர் .. கண்களை மூடி கொண்டவளுக்கு நடந்த காட்சி அனைத்தும் கண்முன் வந்து நின்றது .. அவளுக்கு பிடித்த கிருஷ்ணரை  நினைத்து கொண்டாள்  அவள் ..

" அவ்வளவுதானாகிருஷ்ணா ? ஒருபெண்ணின்கற்புநிலைஎன்பதுசிலநிமிடஇன்பத்திலோஅல்லதுகாமபசிக்கோஇறையாகிவிடுமா ? என்விருப்பமேஇல்லாமல்என்னைகாயபடுத்திஎன்னைகட்டாயபடுத்திஎன்னைதொட்டானே ? அப்போஇனிநான்கற்பைஇழந்தவளா ? ச்சீ ... அவனெல்லாம்ஓர்ஆணா  ? அல்லதுதவறேஇல்லாமல்என்முன்னால்தலைகுனிந்துநிற்கும்என்நண்பர்கள்ஆண்களா ? இத்தனைவருடநட்பில்என்னைபார்வையால்கூடதப்பாய்தீண்டாதஎன்நண்பர்கள்தானேஉன்னதமானஆண்கள் ? என்தந்தையின்நிழலில்நான்வாழ்ந்ததுஇல்லை .. ஆனாஎன்நண்பர்கள்எல்லாம்எனக்குதந்தைமாதிரிஇருந்தாங்களே .. இன்றுஅழிந்ததுஎன்கற்புமட்டும்இல்லையே .. என்நண்பர்களின்தைரியமும்தானே ? குற்றஉணர்ச்சியில்அவர்களதுமனம்என்னபாடுபடும் .. இவர்களைஎப்படிநான்சரிபடுத்துவேன் ???

இல்லை .. நான்கற்புஇழந்தவள்இல்லை ... என்கற்பின்சின்னம்என்நண்பன்தான் .. அவன்வடிக்கும்கண்ணீர்துளிதான்என்  கற்பு .. அதைதான்நான்காக்கவேண்டும் " தனக்குள்ளேயே மன்றாடினாள் அவள் .. எங்கிருந்தோ குழலோசை கேட்பது போல அவளுக்குள் ஓர் அசரீரி ... மெல்ல கண் விழித்தாள்   நிதயுவனி ..

" யுவி " - யுதீ 

" ஷ்ஷ்ஷ்ஷ் டேய் ஏன்டா இப்படி அழுது மானத்தை வாங்குறிங்க ?"

".."

" பெரியவங்க யாருக்காவது இப்போ நடந்தது தெரியுமா ? " இறுகிய குரலில் கேட்டாள்  யுவனி .. இல்லை என தலை அசைத்தனர் அவர்கள் ..

" வேணாம் சொல்ல வேணாம் "

" நிது "

"வேணாம் தேவ்... சொன்னா என்ன நடக்கும் தெரியுமா ? "

" ..."

" அம்மா தாங்கிக்க மாட்டாங்க .. அவங்களும் அப்பாவோடு போயிடுவாங்க "

" ஐயோ " என்று அழுதபடி முதல் முறை அவளை தோளில்  சாய்த்து கொண்டான் நகுல் ..

" ப்ச்ச்ச் ... சொல்றதை கேளுங்க டா .. இப்போ எதுக்கு அழறிங்க ? உங்க தோழி களங்கம் ஆகிட்டான்னு நினைகிறிங்களா  ? என் உடலும் அதுக்கு நடந்த அநியாயம் மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரியுதா? என் மனம் உங்க  கண்ணுக்கு தெரியலையா ?

 மனதளவில் நான் ஆயிரம் முறை தைரியம் அடைஞ்சிருக்கேன் .. ஒரு பொருக்கி என்னை வீழ்திட்டான் ..ஒரு பெண்ணாய் நான் இன்னும் எப்படி இருந்திருக்கணும் இப்போ யோசிக்கிறேன் .. எப்படி தன்னை தற்காத்து இருக்கணும்னு இப்போ யோசிக்கிறேன் ..இந்த வலி எனக்கு நிறைய கத்து கொடுக்குது ... உங்களுக்கு அது புரியலையா டா ?  என் மனசு உங்களுக்கு முக்கியம் இல்லையா டா ?"

" என்ன டீ இப்படி சொல்லுற " என்று கேட்டான் பல்லவன் ..

" வேணாம் டா,... இது வெளில தெரிஞ்ச இனிமே உங்களை நம்பி என்னை என் அம்மா வெளில விடுவாங்களா ? நமக்கு தெரிஞ்சவங்க எல்லாம் தப்பா பேசுவாங்க .. என்னை பரிதாபமாய் பேசுவாங்க .. எப்போதுமே பசங்க கூட சுத்துறவ தானேன்னு நம்ம நட்பை தப்பா பேசுவாங்க .. நாம சாதிக்கணும் டா ... வெற்றி சிறகுகள்  இன்னும் நிறைய தோல்வியை கடந்து வெற்றி அடையனும் ... இப்படி கண்ணீர் விட்டா என்னை நீங்க எல்லாரும் கலங்கமானவளாய்  நினைக்கிறிங்கன்னு நான் நினைப்பேன் ...இனிமே உங்க ஆதரவே எனக்கு வேணாம் .. நான் தனியா என் வாழ்க்கையை பார்த்துப்பேன் " என்று அவள் முடிக்கும் முன் அவர்களின் கரம் அவளது கரங்களுக்குள்  இருந்தது ..

ஒரு மாதம் சஹாதேவனின் வீட்டில் இருந்து அவளை கண்ணுக்குள் வைத்து கொண்டு பார்த்து கொண்டனர் ஆண்கள் அனைவரும் .. அதே நேரம் மனதிற்குள் அந்த அயோக்கினை பழிவாங்க வேண்டும் என்ற குரோதம் மட்டும் தீயாய்  உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது .. இந்த ஒரு மாதத்தில் ஒருமுறை தற்செயலாய்  துஷனை  யுவனி பார்த்ததும் லேசாய் நடுங்கவும் அவளது முகத்தை வைத்தே  அவனை கண்டுக்கொண்டனர்  அவர்கள் .. அதன்பின் காலத்தோடு சேர்த்து அவர்களின் வாழ்க்கையும் பயணிக்க துஷனை  வீழ்த்தும் நாளுக்காக காத்திருந்தனர் நண்பர்கள் அனைவரும் ..

மொத்தமாய் துவண்டு துஷன்  விழுந்த நேரம் வீட்டில் வெளிச்சம் பரவியது .. அனைவரும் கோபமாய் வாசலை நோக்கி  திரும்ப  போலிஸ் உடையில் உள்ளே நுழைந்தான் அர்ஜுன் .. ஆக்ரோஷத்தோடு உள்ளே வந்தான் அர்ஜுன் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.