(Reading time: 17 - 33 minutes)

" மிஸ்டர் துஷன்  ??" என்று அவன் அதிர்ச்சியாய்  கேட்கவும்

" ஏ  சி பி சார் .. ப்ளீஸ் ஹெல்ப் மீ.... இவங்க என்னை கொல்ல  பாக்குறாங்க " என்றான் .. அவசரமாய் ஓடி வந்து   கீழே விழுந்திருந்த  துஷனை தூக்கி நிறுத்தினான் அர்ஜுன் ..

" ஏன்டா .. இன்னுமா இவனை கொல்லாம  அடிச்சுகிட்டு இருக்கீங்க ? " என்றவன் தனது சார்பாய் முகத்தில்  இரண்டு குத்து விட்டான்  ..

" அதை எடுடா " என்று அர்ஜுன் கை நீட்ட மது பாட்டிலை நீட்டினான் பல்லவன் .. மதுவை கட்டாயபடுத்தி  துஷனின்  வாயில் ஊற்றினான் அர்ஜுன் ..

" சூப்பர் ..மொத்தமாய் குடிச்சிட்டான் .. டேய் தூக்குங்க டா " என்றவன் நால்வரோடு சேர்ந்து அவனை அலேக்காய்  தூக்கி  டிரைவர் சீட்டில் அமர வைத்தான் ..காரை ஸ்டார்ட் செய்துவிட்டு ஐவரும் சேர்ந்து காரை தள்ள , மதுவின் மயக்கத்திலும் அவர்கள் ஏற்படுத்திய காயத்திலும் காரோட்ட முடியாமல் தடுமாறி பள்ளத்தில் விழுந்தான்  துஷன்.

" பிரபல தொழில் அதிபரின் இளம் வாரிசு  துஷன்  மது அருந்திவிட்டு காரோட்டி அகால மரணம் அடைந்தார் " !

ஏதோ  அலைவரிசையில் அந்த செய்தி கேட்கவும், கையில் இருந்த கோப்பையை கீழே தவறவிட்டாள்  நிதயுவனி ... செய்தியை கேட்டதும் அதர்ச்சியில் உறைந்துவிட்டாள்  அவள் .. எத்தனை தடுக்க முயன்றாலும் அவளுக்குள் எழுந்த மகிழ்ச்சியை அவளால்  மறைக்கவே முடியவில்லை .. இறைவனடி சேர்ந்துவிட்ட அன்னை தந்தை இருவரின் புகைப்படத்தின் முன்பு நின்று அழுதாள் .. ஆம் , இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் அவள் தனது அன்னையையும் இழந்திருந்தாள் ...

" ஏன் " என்று சொல்லாமலே கதறி  அழுதாள்  அவள் .. அந்த சம்பவத்தின் பின்பு இன்றுதான் அவள் அதை நினைத்து மனம் விட்டு  அழுகிறாள்.. சரியாய் அவள் வீட்டு கதவை திறந்து கொண்டு ஓடி வந்தனர் ஐவரும் ... ஐவரின் விழிகளிலும் வென்றுவிட்ட  களிப்பு தெரிந்தது .. பெருமிதம் , நன்றி , ஆச்சர்யம் , இன்னும் சொல்லவே முடியாத ஆயிரம் உணர்வுகளை விழிகளால்  பிரதிபலித்தாள்  நிதயுவனி ..

அவளுக்குஅன்னைதந்தையாய்  ஒரேவீட்டில்  துணையாய்இருந்தான்நகுல் ...!

 நண்பனாய்ஆசானாய்அவளதுகனவுகளுக்குவழிகாட்டினான்பல்லவன் ..!

 அவளைசிரிக்கவைப்பதற்குதனதுசொம்பலையேஆயுதமாய்பயன்படுத்தினான்  யுதீஷ் ..  !

அவளுக்காக  துஷனின்கம்பனியில்வேலைக்குசேர்ந்தான்சஹாதேவன் .. !

அவனைதண்டிப்பதற்காகவே   மருத்துவன்ஆகவேண்டும்என்றஆசையைகைவிட்டுபோலிஸ்அதிகாரியானான்அர்ஜுன் .. !

ஐவரின் தியாகத்தையும் புரிந்து கொண்டவளுக்கு உலகத்தையே வென்றது போல ஓர் உணர்வு .

" ஹே போதும் டீ படம் காட்டினது .. பசிக்கிது .. " என்று மௌனத்தை கலைத்தான்  பல்லவன் ..

" ஆமாடி எனக்கும் " என்றான் யுதீஷ் ..

" குப்பையை கொட்டுற வேலை இல்லை டீ எனக்கு .. இருந்த ஒரு குப்பையையும் மொத்தமாய் கொட்டிட்டோம் " என்றான் சஹாதேவன் இருபோருளில் ..

" சரி வா சமைக்கலாம் " என்று அர்ஜுன் அவள் கையை பிடித்து கொண்டு நடக்க மற்ற நால்வரும் அவர்களை பின்தொண்டர்ந்தனர் .. களங்கத்தை போக்கிய களங்கமில்லா நட்பு காலம் கடந்தும் நிலைக்கட்டும் ..

மூங்கிலாய்இறுகிநிற்கும்வாழ்க்கையில்

பூங்காற்றாய்நுழைந்திடும்நண்பன்

இசையாகி, தாலாட்டாய்மாறிவிடுகிறான் !

ஆண் பெண் நட்பானது தாய்க்கும் சேய்க்கும் இருக்கும் உறவைப்போலவே புனிதமானது .. ! வார்த்தையில் நட்பையும் மனதில் கள்ளத்தையும் சுமந்திருக்கும் கள்வர்களின் மத்தியில் உண்மையான நட்பினை தயங்காமல் வழங்கும் நண்பர்களை நிஜ வாழ்க்கையில் சந்தித்த பிரமிப்பிலும் நன்றியுணர்விலும் இக்கதையினை எழுதுகிறேன் .. ஆண் பெண் என்ற பேதமின்றி நட்பெனும் தாயின் மடியில் தவழும் நண்பர்கள் அனைவருக்கும் இக்கதையை சமர்பிக்கிறேன் .. நன்றி ..!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.