(Reading time: 17 - 33 minutes)

தாலாட்டும் பூங்காற்று நீயல்லவா! – புவனேஸ்வரி கலைசெல்வி

ணவன்மார்கள் ஐவரும்

தலைக்குனிந்திருக்க,

துகிலுரியப்பட்டபாஞ்சாலியின்

மானத்தைகாப்பற்றியவன்

கண்ணன்எனும்நண்பனே !  - கலியுககுருஷேத்ரம் (மேக்னாசுரேஷ் )

ஹாய்  ப்ரண்ட்ஸ் ... ரொம்பநாட்களுக்குபிறகுஒருசிறுகதைதரணும்னுதோணிச்சு ... இதுஒருநாவலைபடித்தபிறகுஎனக்குதோன்றியசிந்தனைதான் .. ! மேலேகுறிப்பிட்டகவிதைதான்எனக்குள்இந்தகதையைசிந்திக்கவைத்தது! கணவன்என்றஸ்தானத்தில்இருந்தபாண்டவர்கள்தலைகுனிந்துநின்றபோதுநண்பனாகிருஷ்ணன்திரௌபதிக்குதுணைநின்றான் ..ஒருவேளைதிரௌபதிக்குபாண்டவர்கள்நண்பர்களாய்இருந்தால்எப்படிஇருக்கும்னுஒருகற்பனைதோன்றியது .. அந்தகற்பனையில்தோன்றியகதைதான்இது ... இந்தகதையில்வரும்கதாபாத்திரங்களின்பெயரைமட்டும்மகாபாராதத்தில்இருந்துதேர்ந்தெடுத்தேன் .. அதைதவிர்த்துநமதுஇதிகாசத்திற்கும் , இந்தகதைக்கும்எந்தஒற்றுமையும்இல்லை .. கதைக்குப்பின்இதைப்பற்றிமேலும்சொல்கிறேன் ..நன்றி ..

" டேய் யுதீ ..எழுந்திரு  டா ... சீக்கிரம் " அவன் முதுகில் பலமாய் அடித்து நண்பனை எழுப்பினான் பல்லவன்.. யுதீஷ்  மற்றும் பல்லவன் சிறு பிராயத்தில் இருந்தே இணைபிரியா நண்பர்கள் ..குணத்தில் இருவருமே எதிரெதிர் துருவங்கள் என்றாலும் கூட , வேற்றுமைகளை மதித்து,  விட்டு கொடுக்கும் குணம் கொண்டதால் இவர்களின் நட்பு இத்தனை வருடங்களில்  மாறாமல் இருந்தது ..

" டேய் மச்சான் ... இன்னும் விடியல ..அதுக்குள்ள எழுப்பறியே ..உருப்படுவியா நீ ? " என்று முனகினான் யுதீஷ். ..

" டேய் அசிங்கமா திட்டிருவேன் ... மணி என்ன தெரியுமா 11 ஆக போகுது .. இன்னைக்கு ஊட்டி போகணும்னு ப்ளான்  போட்டோம் ..மறந்துட்டியா ? " இறுகிய குரலில் பல்லவன் கேட்ட மறுநொடி எழுந்து அமர்ந்தான் யுதீஷ் .. முகத்தில் கோபமும் சோகமும் கொப்பளிக்க அப்படியே அமர்ந்துவிட்டான் அவன் ..

friend" சாரி மச்சான் .. நேத்து ஆபிஸ்ல வேலை முடிச்சு லேட்டா தூங்கினேன்ல ? அதான் .. ஆனா நான் எதையும் மறக்கல  மச்சான் ..." பற்களை கடித்து கொண்டு முகம் சிவக்க சொன்னான் யுதீஷ் ..

" யுதீ  ..."

" ..."

" மச்சான் , இன்னும் ரெண்டு நாள் தான் ... அதுக்கு பிறகு எல்லாம் சரி ஆகிரும் ... கெளம்பு டா .. நகுல் நமக்காக  ஏர்போர்ட் ல வைட் பண்ணுறான் .. "

நகுலன் .... இவர்களின் இன்னொரு நண்பன் .. தெளிவாய் திட்டமிடுவதில்  திறமையானவன் .. ஆனால் சிரிப்பதற்கும் பேசுவதற்கும் மட்டும் பணம் கேட்பான் .. அந்த அளவிற்கு கறார் பேர்வழி .. பல்லவன் , நகுலன் இருவருமே செய்யும் ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியாய் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் .. யுதீ அவர்களுக்கு எதிர்மறையாய் அனைத்தையும் இயல்பாய் அதன் போக்கில் விட்டுவிடுவான் ..

இதோ அவர்களின் படுக்கையை பார்த்தால் கூட , பல்லவனின் படுக்கை மிக நேர்த்தியாய் இருந்தது ... யுதீஷின்  மெத்தையிலோ , புத்தகம், ஐபெட் , நேற்று கொண்டு வந்த டிப்பன்  பாக்ஸ் என அனைத்தும் இருந்தது ..

அதை கவனித்த பல்லவன் வழக்கம் போல

" கருமம் டா ... நேத்து சாப்பிட்ட டிப்பன்  பாக்ஸ் கூடவா படுக்கையில வைப்ப நீ ? எவ உன்னை கட்டிகிட்டு கஷ்டப்பட போறா தெரில ...சரி சரி நகுல் மறுபடி போன் பண்ணுறதுக்கு முன்னாடி நீ குளி .. நான் இதை எடுத்து வைக்கிறேன் " என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு அறையை சுத்தம் செய்தான் ..

" டேய் மச்சான் டவல் " என்று குரல் கொடுத்தான் யுதீ ... தலையில் வேகமாய் அடித்து கொண்டான்  பல்லவன் ..

" நாயே , நான் என்ன உன் பொண்டாட்டியா டா ? இதை கூடவா எடுத்துட்டு போக மாட்ட ?"

" மச்சி , இவ்வளவு அக்கறை உள்ளவன் நயன்தாரா மாதிரி ஒரு சூப்பர்  பொண்ணா  பார்த்து எனக்கு கட்டி வை ..அதுக்கு அப்பறம் நான் என் பொண்டாட்டி கிட்ட  கேட்டுப்பேன்  " என்றான் யுதீ  கூலாய் ..

" மகள்  வாழுற வாழ்க்கைக்கு மாசம் முப்பது கட்டு துடைப்பக்கட்டையாம்  ன்னு எங்கம்மா சொல்லுவாங்க ..அந்த மாதிரி நீ இருக்குற நிலைமைக்கு இப்போ  நயன்தாரா மாதிரி ஒரு பொண்டாட்டி ரொம்ப அவசியம் டா நாயே ... முதல்ல  நேரத்துக்கு கெளம்புறதுக்கு  கத்துக்க ..இல்லன்னா உன் கல்யாணத்துக்கே நீ ரெண்டு நாள் முன்னாடியே ரெடி ஆகணும் போல "

" போடா ..உனக்கு பொறாமை "

" த்து .... உன்னைய " என்று பல்லவன் அடுத்த வார்த்தை பேசும் முன்னே நகுல்  போன் பண்ணிருந்தான் ..

" நகுல் "

" ம்ம்ம்ம் ப்ளைட்  டிலேய் ..சீக்கிரம் வாங்க டா "

" இதோ கெளம்பிட்டோம் "

" பொய் சொல்லாத .. யுதீ  இப்போதான் குளிச்சிட்டு இருப்பான் "

" ச்ச .. சான்ஸ் ஏ  இல்ல டா செம்ம ஸ்மார்ட் நீ "

" போதும் புகழ்ந்தது ... சீக்கிரம் வந்து சேருங்க ... பை " பட்டென போனை வைத்தான்  நகுல் ..

" அதானே 10 செகண்ட் மேல பேசிட்டா இவனுக்கு  வாயில இருந்து முத்து கொட்டிரும் " என்று முனகினான்  பல்லவன் ..

ஒருவழியாய் யுதீஷை இழுத்து கொண்டு  ஊட்டியை அடைந்தனர் நண்பர்கள் மூவரும் .. என்னத்தான் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு  இருந்தாலும் , மனதில் அவர்களின்  திட்டத்தை பற்றித்தான் ஆலோசித்து கொண்டே இருந்தனர் ..

தே நேரம், தனது சுழற்நாற்காலியில் சுற்றிகொண்டே கண்ணாடி ஜன்னல் வழியாய் அங்கு அமர்ந்திருந்த பெண்களை பார்வையால்  வருடி கொண்டிருந்தான் துஷன்  ..

" ராம் க்ரூப் ஆப் கம்பனியின் " ஒரே வாரிசு .. ஒரே மகன் ..அதனாலேயே பெற்றோரால் அதிக செல்லம் கொடுக்கபட்டு வளர்ந்தவன் .. பணமும் அதீத சுதந்திரமும் , கூடா நட்பும் வாரி தரும் அத்தனை கெட்ட  பழக்கமும் அவனிடம் உண்டு .. எனினும் தனது நிர்வாகத்தில் அவன் பொறுப்பானவனாக  இருந்தான் ... தனது மகனை பற்றி  பல அவதூறுகள் செவியில் விழுந்தாலும் அதை அவனது பெற்றோர்கள் பெரிது படுத்தாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ..!

" மே  ஐ கம் இன் சார் ?" ... அந்த கணீர்  குரல் துஷனை  தூக்கி வாரி போட வைத்தது ..

" ச்ச..அவன்தான் .... என்ன குரல் இவனுக்கு ? எனக்கு கீழே வேலை செய்பவன் தான் .. ஆனால் , அவன் கண்களை பார்த்தால் நான் ஏன்  பயப்படுறேன் ? " எப்போதும்போல தன்னை கேட்டு கொண்டான் துஷன்  .. எனினும் வெளியில்  கெத்தாய் 

" எஸ் " என்றான் .. துஷனின்  விழிகளில் இருந்த திமிரை விட பன்மடங்கு அதிக மிடுக்கு இருந்தது இன்னொருவனின் விழிகளில் .. துஷன்  நினைத்திருந்தால் , எப்போது இவனை வேலையை விட்டு அனுப்பலாம் ..ஆனால் அதற்கு என்ன காரணத்தை தேடுவது ? பூதக்கண்ணாடி  வைத்து பார்த்தாலும் கிடைக்காத அளவிற்கு  நேர்த்தியாய்  வேலை பார்ப்பவன் அவன் .. மேலும் அவன் பேச்சு திறமையும் அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு காரணம் .. அதனாலேயே அவனை அனுப்ப முடியாமல் இருந்தான்  துஷன்  ..

" சொல்லுங்க  தேவ் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.