(Reading time: 14 - 28 minutes)

" ன்ன விஜய் இந்த நேரத்துல, எனக்கு இது எல்லாம் பிடிக்காது பா , கிளம்புங்க ..." என்றாள்

அவனோ கோவத்தின் எல்லையில் எதுவும் பேசாமல் நின்றிருந்தான்.

அவனின் ஊடுருவும் பார்வையை தவறாக புரிந்து கொண்ட கீதா " ஒரு பொண்ணு இருக்கற ரூம்ல இப்படி தனியா வரலாமா விஜய், அதுவும் பூட்டி இருக்குற வீட்டுல.. என்ன தான் உங்க மனைவியா ஆக போற பொண்ணா இருந்தாலும் நீங்க ஒழுக்கம் தவறி நடக்கலாமா." என்று உத்தமியை போல் சிணுங்கி கொண்டே கூற

 மீண்டும் மௌனம் ஆனால் கோவம் கரையை உடைத்தது, அவன் பேச வாயை திறக்க ,

அவள் முந்தி கொண்டு "எந்த விதமான சமாதானமும் வேண்டாம் விஜய், கிளம்புங்க என் அம்மா, அப்பா பார்த்தா என்ன தான் தப்பா நினைப்பாங்க. இப்படி உங்க தங்கையை பார்க்க ஒருவன் இப்படி வந்தால் ....." வார்த்தையை முடிக்க வில்லை அவள் கட்டிலில் இருந்து அந்த அறையின் மூலையில் விழுந்திருந்தாள். மென்மையான அவளின் கன்னம் நெருப்பில் காச்சிய இரும்பை கொண்டிருந்தது.

"என் தங்கச்சிய பத்தி பேச உனக்கு என்னடி தகுதி இருக்கு, உன் வாயில ஒழுக்கம்னு வார்த்த வந்தா கூட நாக்க வெட்டிருவேன் பாத்துக்க." என்று உறுமினான்

அவளுக்கு மனதில் "இதுவரைக்கும் நல்லா தான போயிட்டு இருந்துச்சு? இப்ப என்ன ஆச்சு? ஒருவேளை என்னை இன்னைக்கு பார்த்திருப்பானோ ?” என்று கேள்வி கேக்க “ச்சே ச்சே வாய்ப்பே இல்லையே , இவனுக்கு அந்த மாதிரி இடம் எல்லாம் பிடிக்காதே " என்று விநாடி வினா நடக்க...

“உன்னோட டிராமா பாத்து பாத்து போர் அடிச்சுடுச்சு நான் எடுத்த குறும்படத்தை பாரு..நல்ல பொழுது போக்கான படம்” என்று சொல்லி தான் எடுத்த வீடியோவை காட்டினான்.

அதை பார்த்தவள் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது ,நிலைமை கைக்குள் இல்லை என்பதை உணர்ந்த கீதா தன் இயல்பான பாவத்திற்க்கு வந்திருந்தாள்.. "நானும் நவீனும் மூணு வருஷமா லவ் பண்றோம், அவனுக்கு நிலையான வேலை இல்ல, அதுனால எங்க கல்யாணத்துக்கு வீட்டுல ஒத்துக்கல.. அந்த சமயம் தான் உன் ஜாதகம் தரகர் கொடுத்தார், நானும் கல்யாணத்த நிறுத்த, உன் கிட்ட பேசலாம்னு இருந்தப்ப தான் நீ வேல செய்யுற கம்பெனி பத்தியும், இன்னும் 6 மாசத்துல நீ போற ஆன்சைட் பத்தியும் தெரிய வந்துச்சு..... நவீன் கிட்ட இத பத்தி சொன்னப்போ 'நீ அவனையே கல்யாணம் பண்ணு... அவன் எப்படியும் ஆன்சைட் போய்ட்டு வர 2 வருஷம் ஆகும், அதுவரைக்கும் நாம சந்தோஷமா இருப்போம். அவன் வந்தப்புறம் அவன் குடும்பம் நடத்த லாயக்கி இல்லாதவன்னு சொல்லி விவாகரத்து வாங்கிடு... செட்டில்மென்டு னு பெரிய தொகை கிடைக்கும், அத வச்சு பிசினஸ் பண்ணி நாம ரெண்டு பேரும் செட்டில் ஆகிடலாம் ன்னு சொன்னான்"

இதை சொல்லும் போது குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல் தன் திட்டம்  வெற்றி பெறாத வெறி மட்டுமே அவளிடம் தெரிந்தது.

" ஒரு பொண்ணா உன்னால எப்படி இதுக்கு ஒத்துக்க முடிஞ்சுது... பணத்துக்குக்காக உன்னை இன்னொரு ஆணை கல்யாணம் பண்ணிக்க சொல்லுறவனை நம்பி எவ்ளோ பெரிய விசயம் செய்ய துணிஞ்சு இருக்க.. உங்க தெய்வீக (இதை சொல்லும் போது அவன் முகம் முழுவதும் அருவெறுப்பு) காதலுக்காக என் வாழ்க்கைய பணயம் வைக்க நீங்க யாருடி?"

"இப்பவே இத வெட்ட வெளிச்சமாக்குறேன் " என்று சொல்லி விஜய் கிளம்ப

பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து " தேவை இல்லாம சீன் போடாம கிளம்பி போய்டு, இல்ல நீ என்ன கெடுக்க வந்த அதுனால உன்ன கொலை பண்ணிட்டேன்னு சொல்லிட்டு போய்டே இருப்பேன் " என்று சாதரணமாக கீதா சொல்ல

ஏற்கனவே தன்னிலையில் இல்லாதிருந்த விஜய் அவளின் கையை மடக்கி கத்தியை பறித்து, " நீ என்னடி என்ன கொல்லுறது? , நான் செய்யுறேன் அத, நீயெல்லாம் ஒரு பெண் ஜென்மம். த்தூ!!!! " என்று ஆவேசத்துடன் கூறியவாறு கத்தியை இறக்கினான்.....

ஆஆஆஅ.....................

காவல் நிலையத்தில் அவனை பல விதங்களில் விசாரித்தும் எந்த பதிலும் தரவில்லை. மௌனம் மட்டுமே அவனிடம். விஷயம் அறிந்த அவன் நண்பர்கள் அவனிடம் பேச காவல் நிலையம் வந்தும் எந்த வார்த்தையும் உதிர்க்கவில்லை விஜய்,

“என்னடா விஜய் நடந்துச்சு, நீ போய் கீதாவை கொலை பண்ணிட்டன்னு சொல்லுறாங்க.. அவங்க அம்மாவும் இறந்துட்டாங்க டா.... எல்லாமே மர்மமா இருக்கு... என்ன நடந்துச்சுன்னு சொல்லுடா?......

அதிர்ந்தாலும் அவன் எதுவும் சொல்லவில்லை....

முயற்சிகள் அனைத்தும் தோற்றவர்களாக அவர்கள் திரும்பும் போது, புயலை போல் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்....இப்போது விஜயின் கண்களில் ஒரு ஆறுதல்...

நுழைந்த கொஞ்ச நேரத்தில் விஜயை வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தாள், வக்கீல் மதுரிமா....

(மதுரிமா விஜயின் பள்ளி தோழி, அவர்களின் லட்சியங்கள் அவர்களை கல்லூரி படிப்பில் பிரித்தலும் மனத்தால் என்றும் இணைந்தவர்கள். எங்கே! தன் காதலை சொன்னால் விஜய்யின் நட்பை இழந்து விடுவோமோ என்று அஞ்சி தன் காதலை விஜியிடம் இருந்து மறைத்தவள். சுக்கலாக உடைவோம் என்று தெரிந்தும் நட்பிற்க்காக (காதலுக்காக) விஜயின் நிட்சயதார்த்தத்திர்க்கு வந்தவள்).

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.