(Reading time: 10 - 20 minutes)

ப்படி இருந்த என்னை புலம்ப விட்டது யாருன்னு என் கவிதையை படிச்சிட்டு நீங்க கேட்கறதுக்கு முன்னாலயே எனக்கு புரிஞ்சிடுச்சிங்க. இப்போ அந்த அமைதியின் திருவுருவத்தை உங்க கிட்ட நான் அறிமுகப் படுத்திக்கிறேன். வழக்கமான மீட்டிங்க்ல தான் அவரை அறிமுகப் படுத்தி வச்சாங்க... புதுசா வர்ற பிராஜக்ட பெங்களூர்ல இருந்து வரப் போற மேனேஜர் லீட் செய்வார்னு ஏற்கெனவே அறிமுகப் படுத்தி சொல்லியிருந்தாங்க, அறிமுகப் படுத்தவும் "ஓ அவர் தான் இவரா?"ன்னு நான் கூட வாய் விட்டுச் சொன்னேன். அந்த பிரனீத் என்கிற பிரதினிதி......ச்சே வர வர ரொம்ப உளற ஆரம்பிச்சிட்டேன் அந்த பிரகிருதி அமைதியா எல்லாரையும் பார்த்து லேசா தலையை அசைச்சு வச்சார். எனக்கே நாம ரொம்ப வாயாடியோன்னு? ஒரு நிமிஷம் தோணிட்டு ........அதெல்லாம் இல்லைன்னு என்னை நானே பிறகு தேத்திக் கிட்டேன்.

 அவர் அப்படியொன்றும் அழகில்லைன்னு சொல்ல முடியாது, பார்க்க நல்லாதான் இருக்காரு. ஆனால், நான் இது வரை சந்திச்ச வாட்ச் மேன்ல இருந்து WWF ல கும்மாங்க் குத்து கொடுக்க அல்லது வாங்குறதுக்கு முன்னாடி மைக்க பிடிச்சு சவுண்ட் உடுவாங்களே அவங்க வரை எல்லா ஆம்பிளங்களையும் சவடால் விடற மாதிரி, தொண்டல மைக் இருக்கிற மாதிரி அலறி அலறி பேசி தான் பார்த்திருக்கேன்.ஏன் அமைதியா டயலாக் பேசி நடிச்சிட்டிருந்த சூர்யா கூட "ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா" ன்னு சவுண்ட் விட்ட பிறகு தானே ஹிட்டானாரு.

 ஆனா, பிரனீத் பயபுள்ள எங்க இருக்குன்னே தெரியாது அவ்வளவு அமைதி. பல நேரம் நான் உக்காந்த இடத்தில இருந்துட்டே என் டீம் மெம்பெர்ஸ்க்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துட்டு இருப்பேன். என்னை மாதிரியே என் டீமும் கொஞ்சம் கலகலப்பா தான் இருக்கும். திடீர்னு ஏதோ இலை அசைஞ்சா மாதிரி கொஞ்சம் சத்தம் கேட்குதே என்னன்னு பார்த்தா பிரனீத் டீம்ல ஏதோ முக்கியமான டிஸ்கஷன் நடந்திட்டு இருக்கும். அவர் வாயை திறக்கிறதும் ,மூடுறதும் மட்டும் தான் இங்கிருந்து பார்த்தா தெரியும் அவ்வளவு அமைதியான குரல்ல சொல்றதை அதுக்கு மேல அமைதியா டீம் கேட்டுட்டு இருக்கும்.ஏண்டா எப்படிடா இப்படில்லாம்.....என் மண்டைய பிச்சுக்கலான்னு எனக்கு தோணும்.

 இப்படி தான் நான் அவரை கவனிக்க ஆரம்பிச்சது, அவரோட அஃபிஷியலா தேவையான எதுவும் விஷயம் இருந்தா மட்டும் தான் இதுவரை பேசியிருப்பேன். தனியா இருக்கிறதால யார் கூடவும் ஆஃபீஸ் ஃபிரண்ட்ஸா இருந்தாலும் கொஞ்சம் லிமிட்டா தான் பழகுவேன், நிறைய கசப்பான அனுபவங்கள் தந்த பாடம் அது. இப்போ கூட மனசில இப்படில்லாம் தோணுது ஆனால் அவர் மேல காதல்னு சொல்ல மாட்டேன். கட்டாயம் இது நடக்கணும்னு எண்ணமும் கிடையாது. ஒரு வகையான ஈர்ப்புதான் கொஞ்ச நாள்ல அவர் இங்கிருந்து திரும்பி போன பின்னே மறந்திடுவேன்...மறந்திடணும்...ம்ம்.

 சரி வேலையைப் பார்ப்போம், 8 மணி நேரம் செய்ற வேலையை ரெண்டு மணி நேரம் உக்காந்து என்ன செஞ்சோம் எப்படி செஞ்சோம்னு புளி போடாம விளக்கனும், எல்லாத்தையும் தொகுத்து வித விதமா மெயில் அனுப்பனும்.உள்ள வேலையை செய்யவே நேரம் சரியா இருக்கும்.அதில எனக்கு ஒரு அசிஸ்டெண்ட் வேற , ஒரு மாசமா அவளுக்கு வேலைச் சொல்லிக் கொடுக்கிறதுக்கு எக்ஸ்ட்ரா 1 மணி நேரமாகுது. எனக்கெதுக்கு இப்போ பேக் அப்? காய்ச்சல் அடிச்சாலும் நான் ஆஃபீஸ் வரம இருந்ததில்ல, இவங்க என்னதான் நினைக்கிறாங்களோ தெரியலப்பா.....

 ன்றைக்கு சாயங்காலம் டீம் மெம்பெர்ஸ் எல்லாம் போயிட்டாங்க, என் பேக் அப்பும் தான். எக்ஸல் பைலுக்குள்ள தலையை விட்டு ரொம்ப தீவிரமா யோசிச்சிட்டு இருந்தப்போ எதிர்த்தால ஏதோ நிழலாடின உணர்வு. தலையை ரொம்ப கஷ்டப் பட்டு நிமிர்த்திப் பார்த்தா அட நம்ம பிரனீத்.

உங்களுக்கு என்னோட மெயில் கிடைக்கலயா?

எந்த மெயில்? கேள்வியோடு நான்...

நாளைக்கு பெங்களூர் புறப்படறேன், அதான் ஒரு கெட் டுகெதெர் மாதிரி........

ஓ.......இது வழக்கமாக நடக்கும் விஷயம் தானே எண்ணும் போதே ..........

அப்போ நாளைக்கே போயிடுவான் போல.? மூளை ஒரு புறம் பதிய வைத்துக் கொண்டது.

இல்லையே மெயில் வரலை......

என் புன்முறுவலை ஏற்றுக் கொண்டவனாக.......

அதுக்கென்ன இப்போ வரலாமே.......

சரி இதோ இந்த ரெண்டு மெயில் மட்டும் அனுப்பிட்டு வரேன், வீட்டுக்கு புறப்பட வேண்டியது தான்.நீங்க வேணா காஃபேடேரியால வெயிட் செய்றீங்களா?

பரவாயில்ல இங்கியே நிக்கிறேன்...

சரி ...பத்து நிமிடங்கள் செலவழியும் வரை காற்றசையாத மௌனம் அங்கே....

கஃபேடேரியாவில் ட்ரீட் இருக்கும் போல என பின் தொடர்ந்தவள் அவன் ஆஃபீஸை விட்டு கீழிறங்கி கார்டனுக்குள்ளாக நுழையும் வரை ஒன்றும் புரியவில்லை.

 ஓஹோ கார்டனோடு சேர்ந்து இருக்கும் ரெஸ்டாரெண்டாக இருக்கும், மற்றவங்க எல்லோரும் அங்க காத்திருக்காங்க போல, ஆனா எனக்காக காத்திருந்து ஏன் கூப்பிட்டு வரணும், ஒரு வேளை எல்லாரும் வந்திருப்பாங்க, என்னை கூப்பிடலன்னா நான் தப்பா நினைச்சுக்குவேன்னு இருக்கலாம் என்றெண்ணியவளாக பின்தொடர்ந்தாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.