(Reading time: 10 - 20 minutes)

"தேட் யூ வில் மேரி மீ?"

இறுகிக் கொண்டே போன அவன் அணைப்பினின்று விடு பட எண்ணியவள் முன்பு அதை நீட்டினான்.

அந்த பழுப்புக் காகிதம்.........அதில் என் கவிதை, அடக் கடவுளே இதைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தேனே.........

எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியும் ......அவன் எப்படி புன்னகைத்துக் கொண்டிருப்பான் என்று அவன் முகம் பாராமலேயே எனக்கு புரிந்தது. அவன் முகத்தை திரும்பி பார்க்க துணிவில்லாத போதும் குனிந்து வெட்கத்தை மறைத்துச் சிரித்துக் கொண்டேன்.

நான் எழுதியது தான் இருந்தாலும், அந்த தாளை திறந்துப் படித்தேன்.ஏற்கெனவே பல முறை படிக்கப் பட்டிருந்தது அதன் நிலைப் பார்த்துப் புரிந்தது.

என் செய்வேன்...

வெகு நாளாய்

எவர் முகமும் காண,

எனக்குள்

இத்தனை

ஆர்வம் துளிர்த்ததில்லை.

வெகு சில நாளாய்

உன் முகம் கண்டிடவே

முகமும்

அகமும்

மலர்கின்றது.

ஆண் என்றாலே அதட்டல் தான்

காரணமில்லா அரட்டல் தான்

என்று பதிவிட்டிருந்த என் மனதோடு

உந்தன் கருத்துக்கள் தவறென்று

சொல்லிச் சென்றது உன் வருகை.

அரங்கம் நடுவில் நீ நின்று

உந்தன் கருத்தைப் பகிர்கையிலே,

அவை அதிராத மென்மையில்

உன் பேச்சும்,

அதனினும் மெலிதாய்

புன்னகையும் கொண்டே

என் உள்ளத்தில்

பிரளயம் வர வழைத்தாய்.

நீ இங்கே வந்தது சில நாட்கள் தங்க

நீ சென்ற பின் எவ்வாறு

நான் உனை காண்க?

மீண்டும் சந்திப்பது

வாழ்வில் உண்டோ இல்லையோ?

என்றொரு புறம்

மனம் அங்கலாய்க்க

நாளை வருவதை நாளைப் பார்ப்போம்.

இன்று இருப்பதில்

நிறைவுக் கொள்வோம்.

என்னும் வெட்கம் கெட்ட எந்தன் மனது

உன் முகம் காணவே மலர்ந்திடுதே

உனை நோக்கியே மயங்கிடுதே

என் செய்வேன்.

நான் என் செய்வேன்?.....

என்னும் வரிகளுக்கு கீழாக , இடக்கையால் எழுதினால் எப்படி அலங்கோலமாக கையெழுத்து வருமோ அப்படி ஒரு எழுத்தில் தமிழில் ஒரு வரி எழுதியிருந்தான்.

"என்னை கல்யாணம் செஞ்சுக்கோ problem solved....... என்று,

எனக்கு தமிழ் வாசிக்க வரும் அவ்வளவு அழகா எழுத வராது என்றவன் , குனிந்து என் முகம் திருப்பி என் நெற்றியில் முத்தமிட்டான்.

"வில் யூ மேரி மீ?"

நான் திரும்பி அவன் மார்பில் சாய்ந்து அவன் முகம் நோக்கி புன்னகைத்தேன்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.