(Reading time: 10 - 20 minutes)

ரவின் இருள் முழுமையாக கவ்வாத நேரம், போய்க் கொண்டிருக்கும் போதே பிரனீத்தின் மொபைல் ஒலித்தது. வீடியோ காலிங்க் எடுத்து தாய் மொழியில் பேசத் துவங்கினான்.நமக்கு கன்னடம் புரியாது இருந்தாலும் பர்சனலாக பேசும் போது நாம் எதுக்கு இடைஞ்சலாக என்றெண்ணியவளாக சற்றுத் தள்ளிச் செல்ல துவங்க, இரண்டெட்டு எடுத்து வைக்கும் முன் என் விரல்களை மென்மையாகப் பற்றி பின் இழுத்தான் அவன். 

மீட் மை மாம்...என்றுச் சொல்லியவனாக என்னை மொபைல் பக்கம் என்னைப் பார்க்க தூண்டினான்.

நான் "ஹலோ ஆண்டி" என்று மரியாதைக்காக பேச,

"நல்லாயிருக்கியா ஆலிஸ் பொண்ணே" என்று அவனின் அம்மா என்னிடம் தமிழில் பேச,

ஆச்சரியமாக அவனைத் திரும்பிப் பார்த்தேன்.

"எங்க அம்மா தமிழ்" என்றான் அட்சர சுத்தமாக, இவனுக்கும் தமிழ் தெரியும் போல என்ற என் சிந்தனையை, தாய் பின்னே தலையை நுழைத்தவளாக ஸ்கிரீனுக்குள் நுழைந்து ஹாய் சொன்ன அழகான யுவதியின் குரல் கலைத்தது.

"மை சிஸ்டர்" என்று புன்னகைத்தான்.

தாயும் மகளும் விலகி நின்று பிரனீத் தலையில் ஒரு டப்பா பவுடரைக் கொட்டினால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவர் ஸ்க்ரீனில் வந்து புன்னகைத்தார். சொல்லவே வேண்டாம் இவர் அவன் அப்பா என்றெண்ணி புன்னகைத்தாள். பதிலுக்கு அவர் புன்னகைத்ததில் இந்த அமைதியான புன்முறுவல் எங்கிருந்து வந்தது என்னும் ரகசியம் அவளுக்கு புரிந்தது.

"அடுத்து என்ன மீட் மை வைஃப்" என்றுச் சொல்லப் போகிறான் என்று எண்ணும் போதே அவன் பெர்ஃப்யூம் வாசனை என்னருகே உணர்ந்தேன்.

தோளணைப்பு மாத்திரம் தான் மீதி கிட்டே வந்தவன்..போனில் இருப்பவரிடம்.ஏதோ ஒன்றைக் கேட்கும் தொனியில் 

மம்மி...........என்று கையில் பிடித்திருந்த போனில் நங்கள் இருவரும் வரும் வகையில் பிடித்துக் கேட்டான்.

அனைவர் பார்வையிலும் அளவில்லாத ஆர்வம்.

ஒரு வகையான உணர்வில் இருந்தேன் நான். பொருள் விளங்கா உணர்வு. அதெல்லாம் ஒன்றுமில்லை இதெல்லாம் சும்மாதான் வீண் கற்பனை வேண்டாம் மனமே.....என்று என்னை தேற்றிக் கொண்டேன்.

போனில் பேசி முடித்தவன், ரெஸ்டாரெண்ட் செல்லும் எண்ணமே இல்லாதவன் போல ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.

"இங்க சென்னை மாதிரியே பெங்களூர்லயும் ஸ்டாப் எல்லாம் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க....உனக்கு அவ்வளவு வித்தியாசமா தெரியாது"

 நான் ஏன் பெங்களூர் ஸ்டாப் பத்தி கவலைப் படணும், அவங்க எப்படி இருந்தா என்ன? எனக்கு ஏன் வித்தியாசமா தெரியணும்? என்னோட மைண்ட் வாய்ஸ்.

இங்க உன் மேனேஜர் பேக் அப் ரெடியானதுனால எதுவும் பிரச்சினை செய்ய வாய்ப்பில்ல......

பேக் அப்??

நான் ஏற்கெனவே உங்க டிபார்ட்மெண்ட் லீட் கிட்ட கேட்டுட்டேன் , இங்க இருந்தா என்ன? இல்ல வேற பிராஞ்ச்ல இருந்தா என்ன? எங்களுக்கு ஒண்ணும் பிரச்சினையில்லன்னு சொன்னாங்க.

###@@.....................

 நீ பெங்களூர் வர்றதைப் பத்தி நிறைய பேருக்கு ரொம்ப சந்தோஷம்.......உன்னோட டீம் ஹேண்ட்லிங்க் ஸ்கில்ஸ் அவ்வளவு பிரசித்தம்..........

???.............

அம்மா கூட ஏண்டா என் மருமவ வேலைக்கு போகணும் ? வேண்டாண்டான்னு சொன்னாங்க...........

-----------------------

நாந்தான் சொன்னேன் அவளுக்கு வேலைப் பார்க்கிறதுல அவ்வளவு ஆர்வம் அம்மா, அவளை தடைச் செய்ய கூடாதுன்னு...

------------

இப்படி ஒன் வேல வேகமா டிராவல் செஞ்சிகிட்டு இருக்கிற பிரனீத்தை எப்படி ஸ்டாப் செய்யிறதுன்னு புரியாம திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்.

சட்டுன்னு கையைப் பிடிச்சு இழுத்ததில திரும்பி நடந்த வாக்கிலயே அவன் மேல இடிச்சு நின்னேன்.

 காதோரமா குனிஞ்சி ...

மேரி மீ...........ன்னதும் எனக்கு என்னச் சொல்றதுன்னே புரியலை. கோபத்தில,

அது, "வில் யூ மேரி மீ?" ன்னு கேட்பாங்க "மேரி மீ"ன்னு ஆர்டர் போட மாட்டாங்க...............என்று நொடித்துக் கொண்டேன். இன்னும் அவன் கை வளைவுக்குள் இருப்பது வேறு பதட்டமாக இருந்தது.

அது தான் எனக்கு தெரியுமே...... 

வாட்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.