(Reading time: 11 - 22 minutes)

2017 போட்டி சிறுகதை 07 - என் கணவன் என் தோழன் - ஸ்ரீ

This is entry #07 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - என் கணவன் என் தோழன்

எழுத்தாளர் - ஸ்ரீ

My husband is my best friend 

தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்ன நான் புரிஞ்சிக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா

நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூல் எடுத்து
பூமியை கட்டி நீ நிருத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா

காதல் ஒன்னும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறியப்பின் சொல்லிய உண்மை…”

பாடியபடியே கௌதம் தன்னவளை பார்த்து சிரித்தான்..ஏன் மஹா காலங்காத்தால இப்படி உக்காந்து கச்சேரி பண்ணிட்டு இருந்தா நா எப்போ ஆபீஸ் போறது??

அட போ கௌதம் எப்போ பாரு ஆபீஸ் மீட்டிங் வொர்க்நு சொல்லிட்டேயிரு..நீ சரியான போர்டா..-மஹா..

அது சரி அப்பறம் யாரு மேடம் நீங்க கேக்குறதெல்லாம் வாங்கி கொடுக்குறது..மஹா குட்டி சமத்துல நா ஆபீஸ் போய்ட்டு சீக்கிரம் வந்துருவேனாம்..ஈவ்னிங் உனக்கு பிடிச்ச ஜுஸ் ஷாப் கூட்டிட்டு போவேனாம் ஓ.கே வா??

ம்ம்ம் இப்படியே எதையாவது சொல்லி ஐஸ் வச்சுரு..சரி நானும் காலேஜ் கிளம்புறேன் என்ன ட்ராப் பண்ணிடு டூ மினிட்ஸ்..என்றவாறு துள்ளி குதித்து சென்றவளை பார்க்க பார்க்க தெவிட்டாது அவனுக்கு..

மஹா அவனின் உலகம்..அவனின் உயிர்..பதினைந்து வருட நட்பு எங்கே எப்போது காதலாய் மாறியது என்று இன்றும் அவனுக்கு தெரியாது..

அழகிய இயற்கை நகரமாய் ஒளிரும் திருநெல்வேலியில் அமைந்திருந்த அந்த காலனியின் சிறப்பே எப்போதுமே கேட்கும் சிறு குழந்தைகளின் கூச்சல்கள்தான்..விடுமுறை தினமென்றால் தெருவே அல்லகோலப்படும்..அந்த குழந்தைகளால் பெரீயவர்களும் நட்பு என்பதை தாண்டி உறவினர்கள் போலவே பழகிவந்தனர்..இன்றைய வாழ்க்கை சூழலில் நாம் இழந்துள்ள முக்கியமான ஒன்று இது..தாயாய் பிள்ளையாய் பழகும் பக்கத்துவீட்டு நட்பும் சோகத்தையும் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ளும்  நண்பர்களும் நமக்கு உறவினர்களை விட உயர்த்தியாய் தெரிவர்..வாடகை வீட்டிலிருப்பவர்கள் வீடு மாறும்போது அங்கிருக்கும் குழந்தைகள் அந்த வீட்டை தன் நண்பர்களை பக்கத்துவீட்டு அத்தை மாமாவை விட்டு செல்லும்போது படும்பாடு..பின் தொண்ணூறுகள் வரை  பிறந்தவர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்..இன்றைய அவசர வாழ்க்கையும்,அடுக்குமாடி குடியிருப்புகளும் பணத்தை தேடிஓடும் ஓட்டமும்,விஞ்ஞான முன்னேற்றத்தால் செல்போன்களிலும்,மடிகணிணியிலுமே தொலைந்து போகும் குழந்தை பருவமும் அந்த அருமையான வாழ்க்கைக்கு ஈடேயாகாது...

மாமா பாருங்க மாமா கௌதம் என்கிட்ட வம்பு பண்ணிட்டேயிருக்கான்..

டேய் கௌதம் மஹா குட்டிட்ட வம்பு பண்ணிண பின்னிடுவேன்..நா பாத்துக்கிறேன் செல்லம் நீ போய் விளையாடு..

ஏய் ஏண்டி அப்பாட்ட மாட்டிவிட்ட??

அப்படிதான் பண்ணுவேன் என்னை விளையாட்டுல சேத்துக்க மாட்டேன்னு சொன்னல..

இரு இரு திருட்டுதனமா ஐஸ்கீர்ம் சாப்ட்டல அத்தைட்ட உன்ன மாட்டிவிடுறேன்..

ஹே ஹே ப்ளீஸ்டா சொல்லாத சொல்லாத இனி மாமாட்ட உன்னபத்தி சொல்லமாட்டேன்..ப்ளீஸ்டா..

சரி சரி பொழச்சுப்போ..

இதுதான் 8 வயது மஹா கௌதமின் பெரும்பாலான நேர உரையாடலாக இருக்கும்..ஆனால் அதே நேரம் அவர்களின் அன்புக்கு என்றுமே குறைவிருந்ததில்லை அதை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக காட்டிக் கொள்வதில்லை..

டேய் கௌதம் கௌதம்..

ஏண்டி இப்படி கத்திட்டே வர்ற நா இங்கதான இருக்கேன்..

இங்க வாடா ஒரு நிமிஷம்..உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்..வெளியே இழுத்துவந்து அடிக்குரலில் அவள் கூற..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.