(Reading time: 9 - 18 minutes)

வித்ராவின் படிப்பு முடிந்ததும் அவளுக்கும், கல்யாணுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். தன் மகளின் எண்ண ஓட்டங்களை சரியாகப் புரிந்துகொள்ளும் பவித்ராவின் தந்தை அவள் கல்யாணுடன் நட்பாய் பழகியதை ஏனோ தவறாகப் புரிந்துகொண்டு இந்த திருமணத்தை முடிவு செய்தார்.

ராகவ்-வைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் பவித்ராவின் மனம் அவளது நெருங்கிய தோழியான வித்யாவிற்கு நன்கு புரியத்துவங்கியது. அவள் பவித்ராவிடம் தன்காதலை வெளிப்படுத்தச்சொல்லி பலமுறை கேட்டாள்.

“சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது ..”

ரு நாள் பவித்ரா சார்பாக வித்யாவே ராகவ்-விடம் பவி-யின் காதலைப்பற்றியும், அவன் மீது அவள் கொண்டுள்ள பேரன்பைப்பற்றியும் சொல்ல முடிவெடுத்தாள். அன்று வகுப்பு முடிந்து அவன் வழக்கம் போல் நூலகம் சென்றான். பவியிடம் ஏதேதோ பொய்களைச்சொல்லிவிட்டு நூலகம் சென்று ராகவ்-வைச்சந்தித்து அனைத்தையும் கூறினாள் வித்யா.

அதைக் கேட்ட ராகவ் தன்னை இவ்வளவு தூரம் ஒரு பெண்ணால் நேசிக்க முடியுமா என்று வியந்தான். அவளை விட தனக்குப் பொருத்தமான பெண்ணை இனி தானே நினைத்தாலும் தேடிக்கொள்ள முடியாது என்று நினைத்தான். ஆனால் தற்போது அவனுக்கு இருக்கும் பொறுப்புக்களை அவன் நினைவில் வைத்துக்கொண்டு தன் விருப்பத்தை அவன் வித்யாவிடம் தெரிவிக்கவில்லை. மாறாக, ”அப்படி ஒரு எண்ணம் எனக்கும் தோன்றினால் நானே பவித்ராவிடம் பேசிக்கொள்கிறேன்” என்று கூறவே, வித்யா பவியிடம் இதைப்பற்றி எதையும் அவளிடம் சொல்லக்கூடாது, சொல்லி அவளை காயப்படுத்தக்கூடாது என முடிவெடுத்தாள்.

நாட்கள் நகர்ந்தன. இறுதி செமஸ்டர் நெருங்கியது. ராகவ் ஒரு பெரிய நிறுவனத்தில் நேர்காணலில் தேர்வானதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். தன் வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு பவியிடம் தன் அன்பை வெளிப்படுத்த முடிவு செய்தான். பவி தன் மீது உண்மையான காதல் கொண்டிருந்தால் அவள் நிச்சயம் அவனுக்காக காத்திருப்பாள் என்று அவன் நினைத்தான். அவனைப் பிரியும் தருணத்தில் தன்னையும் அறியாமல் தன் அன்பை ராகவிடம் சொல்லியேவிட்டிருந்தாள் அவள்.

அவனிடம் இனம்புரியாத மகிழ்ச்சி. தன்னவள் தன்னிடம் தஞ்சம் அடைந்துவிட்டாள்.அவளை ஒருபோதும் கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனிடத்தில். ஆனால் தன் அன்பை வெளிப்படுத்தாமல் அவன் முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டிக்கொள்ளாமல் அந்த இடம் விட்டு அகன்றான் அவன்.

மனதில் குழப்பங்களுடனும், அவனை எப்படியும் தன் வசம் ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடனும் வீடு வந்தடைந்தாள் பவி. ஒரு ஆண்டு காலம் கழிந்தது. இருவரும் அவரவர் வழியில் சென்றனர். ராகவ் இப்பொழுது அந்த நிறுவனத்தில் ஒரு பெரிய பதவியில் இருக்கிறான்.

பவிக்கு அன்று துவங்கியது நரகம். அவளுக்கும் கல்யாணுக்கும் அடுத்த இரு தினங்களில் திருமணம் என்ற அதிர்ச்சித்தகவல். பல கனவுகளுடன் ஊர் திரும்ப ஆயத்தமானான் கல்யாண். அவனுக்கு பவியின் காதலைப்பற்றியும், அவளுக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை என்பது பற்றியும் எள்ளளவும் தெரியாது. கல்யாண் தன் திருமணத்திற்கு இரு நாட்களே இருக்கின்ற நிலையில் தனக்கும் பவிக்கும் பொதுவாக இருக்கும் நண்பர்களை அழைக்க திருமண அழைப்புச் செய்தியை மின்னஞ்சல் மற்றும் முகநூல் மூலமாகப் பகிர்ந்தான். இதைப்பார்த்த வித்யாவிற்கு பேரதிர்ச்சி.

இந்த செய்தியைப் பார்த்த நேரத்தில் ராகவ்-விற்கு ஒரு நொடி இதயம் நின்று துடித்தது. அவனிடம் எழுந்த வலியைச்சொல்ல வார்த்தைகள் இல்லை. எப்படியும் இந்தத் திருமணத்தில் தன்னவளுக்கு கொஞ்சம் கூட நாட்டம் இருந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது என்பது அவனது ஆணித்தரமான நம்பிக்கை. ஏதோ குழப்பம் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. உடனே புறப்பட்டான். திருமணம் நடைபெறும் இடத்தை அடைந்தான்.

தன்னவள் மணமேடையில் கண்ணீருடன் அமர்ந்திருப்பதை அவன் கண்டு துடித்தான். ஏதோ ஒரு வகையில் அவளின் இந்த நிலைக்குத் தான்தான் காரணம் என்று வருந்தினான். தன்னவள் வேறொருவரின் அருகில் மணப்பெண்ணாய் அமர்ந்திருப்பதைக்கண்ட அவன் மனம் நொறுங்கியது. இனியும் தாமதித்தால் அவளை, அந்தப் பொக்கிசத்தை இழக்க வேண்டியது வரும் என்ற பயத்தில் நடந்த அனைத்தையும் கல்யணிடத்தில் தெளிவு படுத்தியே ஆக வேண்டும் என்ற முடிவில் தக்க சந்தர்ப்பம் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான். கல்யாண் உடுப்பை மாற்றிக்கொண்டு பட்டாடை அணிய தனி அறையில் நுழைய, அதே சமயத்தில் ராகவ்-வும் அந்த அறைக்குள் நுழைந்து அனைத்தையும் கூறினான்.

தான் பவியிடம் அவ்வளவு நெருக்கமாகப் பழகியும் அவளின் விருப்பத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என்று நினைக்கையில் தன்னைத்தானே வெறுத்தான். அவளுக்காக எதையும் அதுவரை விட்டுக்கொடுத்த அவன் இன்று தன் காதலையே விட்டுக்கொடுக்க முடிவெடுத்தான். தன் காதல் நிறைவேறவில்லை என்றால் அந்தப் பெண்ணின் மீது அமிலம் வீசுதல், அந்தப் பெண்ணை கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள் இருக்கும் இந்த உலகில் இப்படியும் ஒரு ஆண்மகன்!!!

உடைமாற்றிக்கொண்டு மணமேடையில் வந்து அமர்ந்தவனின் கண்கள், கலங்கி இருக்கும் பவியின் கண்களை ஆராய்ந்தபோது அவன் மனம் நொறுங்கியது. விறுட்டென மேலே எழுந்தவனை அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, அவன் உரைத்த வார்த்தைகள் அவளைக் குளிர்வித்தது. கல்யாணின் அருகில் நின்றிருந்த ராகவ்-வைப் பார்த்த அவளது விழிகளில் ஆச்சர்யம். கல்யாண் மணமாலையை எடுத்து ராகவ்-வின் கழுத்தில் அணிவித்த பின் பவியை நோக்கி, “எல்லாமே முட்டிஞ்சு போச்சு” என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி...!

 

This is entry #24 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - தொடக்கத்தில் இருந்து தொடர்க / முடிவுக்கேற்ற கதை

எழுத்தாளர் - எஸ்.ஐஸ்வர்யா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.