(Reading time: 9 - 17 minutes)

ம்,அவனது தங்கை அஷிதா, அவனது முன் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அப்படியே நின்றிருந்தாள். அவளையே பார்த்திருந்த அண்ணனின் கையை இறுக்கமாக பிடித்தவள், அங்கு இருந்தவர்களை நோக்கி

“சாரி, அண்ணா நானு நினைச்சிட்டான்..” என்றுக்கூறி அவனை அங்கிருந்து வேகமாக வெளியே  அழைத்து சென்றாள்.

அங்கிருந்த ஒரு மரத்துக்கு அடியில் அவனை அழைத்துச் சென்றாள். அவனையே பார்த்துக்கொண்டிருந்தவன்

“குட்டிம்மா..,உனக்கு ஒன்னும் ஆகலியே,அப்பறம் எதுக்கு வீணா அப்படி சொன்னா..,அவள..”

“நான், தான் சொல்ல சொன்னேன்..”

“ஏன்டா செல்லம் அப்படி பண்ண,உனக்கு தெரியாத என்னோட உயிரே நிதானு..,நான் எப்படி துடிதுடிச்சி போய்டேன்...”

“உன்னோட, தங்கைனா துடிக்கும், அடுத்தவங்கான....”

“என்னடா,சொல்லுற...”

“ இந்தா இத பாரு..” என்று அவள் தந்த கவரை பிரித்துபார்த்தவன், அதில் இருந்த புகைப்படத்தை பார்த்தவனின் எண்ண அலைகள்  ஒரு வருடத்திற்கு முன் சென்றது.

ருண் டீம்லீடர்  ஆக பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது, அவனது டீமிற்கு புதிதாக வந்த காயத்திரியிடம் அவனது மனம் அவனையும் அறியாமல் சென்றுவிட்டது. அவளை அவன் மிகவும் விரும்பினான். அவளை எப்படியாவது தன்னவளாக்க வேண்டும் என்று நினைத்தான்.

ஒரு ஏழு மாதங்களுக்கு முன்பு அவன் தன் காதலை தெரிவிக்க,அதை மறுத்துவிட்டாள் காயத்திரி. அவள் மறுத்ததில் மனம் உடைந்தவனது நடவடிக்கையை கவனிக்க ஆளில்லாமல் அஷிதாவும் கேம்ப் சென்றிருந்ததால், சில தீய நண்பர்களின் வழிகாட்டுதலால், அந்த முடிவிற்கு சென்றான்.

அவள் மீது ஆசிட் வீசுவது என்று, அதுவும் அவனே நேரடியாக செய்யாமல் வேறு ஒருவருன் மூலம் அதை நிறைவேற்றினான்.

காயத்திரியின் மீது ஆசிட் வீசும்பொழுது அதை பார்த்தவர்களுள் அஷிமாவும் ஒருவள்.

அந்த ஆசிட் வீசியவனின் முகம் அவள்  மனதில்  அப்படியே பதிந்து விட்டது.

அந்த நிகழ்வு நடந்து ஆறு மாதங்களை கடந்த நிலையில்,ஒரு வாரம் முன்பு அவளது வீட்டுதோட்டத்தில் ஆசிட் வீசியவனை ,அவனை அதுவும் அவளது அண்ணனோடு பார்த்தவள் அப்படியே உறைந்துவிட்டாள்.

ஏனெனில் அந்த கொடூர நிகழ்வை அவன் மூலம் நிறைவற்றி இருத்தது தன் அண்ணன் என்ற உண்மை அவளுக்கு அப்பொழுது தான் தெரிந்துக்கொண்டாள்.

இத்தனை நாள் எந்த அயோக்கியனை அவள் மனதில்  திட்டிக் கொண்டிருந்தாலோ,அவன் அவளது அண்ணன்.

அவளது ஹீரோ இப்படி ஒரு வில்லனாய் எப்படி மாறினான்.அவளால் அதை நம்ப முடியவில்லை,அதுவும் ஒரு தங்கையுடன் பிறந்தவன் செய்யும் செயலா.

அன்றிருந்து அவள் பட்ட வேதனைக்கு அளவே  இல்லை.அவனது அறையை அவன் இல்லாதபொழுது சோதித்தவள்.

காயத்திரியின் புகைப்படத்தை அவனது அறையில் கண்டுபிடித்தாள்.

தன் அண்ணனை இந்த செயலுக்காக கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு ,இன்று அவளது கல்லூரியில் நடந்த நிகழ்வு அவளது எண்ணத்திற்கு அடிகோலியது.

தனது கல்லூரியில் வேறொரு பெண்ணிற்கு நடந்த நிகழ்வை தன் தோழி மூலமாக தனக்கு நடந்ததாக கூற சொன்னாள்.

அதுபோலவே அவள் கூறவும், அவனது அண்ணனும் இப்பொழுது அந்த வேதனையை, அவன் குடும்பத்தில் ஒருவனுக்கு நடந்தால் ஏற்படும் வேதனையை உணர்ந்துவிட்டான்.

தையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வருண் உயிரற்றவன் போல அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

அவனை ஒரு உணர்ச்சியற்ற பார்வை பார்த்த அஷிதா,அவனின் முன்பு சென்று

“நீங்க..,உங்க தப்ப உணர்ந்திங்களானு எனக்கு தெரியாது,ஆனா என்னோட ஹீரோ வருண் எப்போவ செத்துட்டான்..” என்றுக் கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

அதன்பின் அவன் எவ்வளவோ  முயன்றும் அவனது தங்கையை அவனால் சமாதான படுத்த முயன்றும் அவன் ஒவ்வொரு முயற்சியிலும் தோற்றுதான் போனான். அன்று அவள் மரியாதை கொடுத்து பேசியவிதமே,அவனுக்கு அவளது தங்கையின் மனதை உணர்த்திவிட்டது.

அவனுக்கு தெரியும் அவள் அவளுக்கு பிடிக்காதவர்களை மட்டுமே மரியாதையாக அழைப்பாள்.

இன்னும் ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில்,அவளது படிப்பும் நிறைவடைந்த நிலையில் ஒரு மிகவும் தகவல்தொடர்பற்ற கிராமத்திற்கு சேவை செய்ய கிளம்ப போகிறேன் என்று அவனிடம் ஒரு அறிவிப்பு மட்டும் கொடுத்தாள்.

முழுவதும் உடைந்துபோனான் அவளது அண்ணன்.இந்த இடைபட்ட காலத்தில் காயத்திரியை கண்டுபிடித்தவன்,அவளிடம் மன்னிப்பு கோரி அவளை அவனே திருமணம் செய்துக்கொள்வதாக கூறினான்.

முதலில் மறுத்த காயத்திரியும் பிறகு ஒத்துக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.