(Reading time: 14 - 27 minutes)

ன்னல் வழியே கோர மழையை ரசித்துக்கொண்டிருந்த ஜெஸிகாவின் பின்னால் வந்து நின்றான் ஜான். காற்றில் தவழ்ந்தாடிய அவள் கூந்தல் ஜானின் முகத்தில் காதல் வண்ணம் தீட்டியது. மிக அருகில் ஜெஸிகாவுடன் இருப்பது முதல் முறையென்பதால் ஜானிடம் சொல்ல முடியாத இன்பமான கிளர்ச்சி உருவானது.

"அமைதியா இருந்தா நீ ரொம்ப அழகா இருக்க"

திடுக்கிட்டு திரும்பி பார்த்த ஜெஸிகா, ஜானை கண்டதும் முகத்தில் லேசான அதிர்ச்சியை வெளிப்படுத்தினாள்.

"என்கிட்டே எதுக்கு தேவையில்லாம பேசுற?"

ஜான் சிரித்தான். "ஒருத்தர் இன்னொருத்தர் கிட்ட தேவையோடு தான் பேசணும்னா வாழுற வாழ்க்கைல பத்து நாள் தான் பேச முடியும். யாரும் தேவையோடு வாழுறது இல்லை, தேவையில்லாம தான் வாழ்ந்துட்டு இருக்காங்க"

"உன்னை நீயே சொல்லிக்கிறியா"

"உனக்கு விருப்பம்னா அப்படியே கூட நினைச்சுக்க"

"இப்போ உனக்கு என்ன தான் பிரச்சனை?"

"உன்கிட்ட தனியா பேசணும்"

"எதுக்கு?"

"காரணம் தெரியல பேசணும் போல இருக்கு"

"மறுபடியும் லவ் அது இதுன்னு ஆரம்பிக்க போறியா"

"என்னை லவ் பண்ணாதன்னு சொல்ல போறேன்"

ஜெஸிகா சிரித்தாள். "உன்னை நான் எப்போ லவ் பண்ணேன்? வித்தியாசமா ஏதோ முயற்சி செய்றன்னு நினைக்குறேன்". ஜெஸிகா மழையை ரசித்தபடி கேட்டாள்.

"இந்த உலகத்துல வித்தியாசம்னு எதுவும் இல்லை ஜெஸ்ஸி. உனக்கு மழைனா ரொம்ப பிடிக்குமா?"

"உனக்கு எப்படி தெரியும்?"

"பழைய ஜெஸிகாவா இருந்தா இந்நேரம் காச்சுமூச்சுனு கத்தியிருப்பாளே"

ஜெஸிகா இதழில் புன்னகை இழைந்தோடியது.

"புதுசா இருக்கு"

"என்ன?"

"உன் புன்னகை. இதுவரைக்கும் நீ சிரிச்சி நான் பாத்ததே இல்லை"

"திடீர்னு வானிலை மாறுறது போல தான் என் சிரிப்பும்"

"கடவுள் கிட்ட வேண்டிக்குறேன்"

"எதுக்கு?"

"தினமும் வானிலை மாறி மழை வரணும்னு"

"ஜான்"

"சொல்லு ஜெஸ்ஸி"

"உனக்கு நல்ல வேலையிருக்கு. நல்ல எதிர்காலம் இருக்கு சீக்கிரமாவே கல்யாணம் செஞ்சிக்க"

"எனக்கு சம்மதம் தான். சம்மந்தப்பட்டவங்க சம்மதம் சொல்ல மாட்டுறாங்களே"

"நான் உனக்கு செட்டாக மாட்டேன்" ஜான் அமைதியாக ஜெஸிகாவையே பார்த்துக்கொண்டிருந்தான். "நிஜமா தான் சொல்லுறேன்"

"டிரைவிங் கத்துகிட்டியா?"

"ஏன் பேச்சை மாத்துற?"

"நான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கணும்னு விரும்புறேன்"

"டிரைவிங் இன்னும் கத்துக்கல"

"இப்போ நீ ஏன் பேச்சை மாத்துற?"

"எனக்கு பிடிக்காத விஷயத்தை பத்தி நான் பேசமாட்டேன்"

"உனக்கு டிரைவிங் சொல்லி கொடுக்கட்டுமா?"

"தேவையில்லை"

"நீ பணம் கொடு கத்து கொடுக்குறேன். எனக்கு கொஞ்சம் பண பிரச்சனை"

"பாக்கலாம்"

"எப்போ தான் நீ திருந்துவ?"

ஜெஸிகா ஜானின் கண்களை கூர்ந்து நோக்கி சிறிது நேரம் அமைதி காத்தாள். "நான் தப்பு செஞ்சா தான திருந்துறதுக்கு"

"நீ தப்பே செஞ்சதில்லையா ஜெஸ்ஸி"

ஜெஸிகா அமைதியாக கருமேகங்களை நோக்கினாள். அவளிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை.

"நான் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும் ஜான்"

அவள் கூறியது ஜானிற்கு ஆச்சரியமளித்தது.

"எதுக்கு?"

"எல்லாத்தையும் மறக்குறதுக்கு தான். நீ இந்த வீட்டை வாங்கி தனியா இருக்கணும்னு ஆசைப்பட்ட. ஆனா நான் இங்கயும் வந்து தொல்லை கொடுக்குறேன்"

ஜான் சிரித்தான். "கொஞ்சம் என் கூட வா ஜெஸ்ஸி"

"எங்கே?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.