(Reading time: 19 - 37 minutes)

ன்றுமில்லையே” என்று கூறிய இனியா “இவனை பார்த்ததில் இருந்து இது ஒரு தொல்லை வாயில் வார்த்தைகளே வராமல் மனதில் குமைந்துக் கொண்டிருக்கும்” என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.

இளவரசனோ நேற்று நடந்த நிகழ்ச்சியே நினைவில்லாத பாவனையில் “ஹாய் கார்த்திக், எப்படி இருக்கிறாய். நேற்று உன்னை பார்க்க வர முடியல” என்றான்.

“இருக்கட்டும் மாமா. உங்களுக்கு வேலை இருந்திருக்கும். அதான் என் கிட்ட டெய்லி மொபைல்ல பேசறீங்களே”

இனியா இதுவேறவா என்று எண்ணிக் கொண்டாள்.

“ம்ம் என்றவாறே என்ன இனியா நீ எப்படி இருக்கிறாய்” என்றான்.

இனியாவிற்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. இவனால் எப்படி இப்படி பேச முடிகிறது. நேற்று நடந்ததை பற்றி சிறு வருத்தமாவது தெரிவித்தானா. அதை அப்படியே விட்டு விட்டு எப்படி இவனால் பேச இயலுகிறது. முதல் நாளே என்னை அவமான படுத்தியவன் தானே. அதை பற்றி உண்மை தெரிந்தும் இவன் பெரிதாக ஒன்றும் வருத்தம் தெரிவிக்கவில்லையே. அதை எல்லாம் மறந்து இவன் நல்லவன் என்று எண்ணி அவனுக்கு உதவ எண்ணியது என் தவறு தான் என்று எண்ணினாள் இனியா.

“நேற்றைக்கு இருந்ததை போல் தான் இருக்கிறேன். ஏதும் பெரிய வித்தியாசம் தெரிகிறதா என்ன” என்று கேட்டு விட்டு “தெரிந்தாலும் தெரியும். நேற்று நல்லவர்கள் என்று எண்ணியவர்களை பற்றி இன்று அவர்களின் உண்மையான குணம் தெரிகிறதே” என்றாள்.

இளவரசனும் விட்டு கொடுக்காமல் “ம்ம். ஒருவரை பற்றி நேற்று ஒரு அபிப்பிராயம் இன்று ஒரு அபிப்பிராயம் வைத்திருப்பது சரி இல்லை இனியா. நீ ஒரு சைக்காடிஸ்டாக இருந்துக் கொண்டு இப்படி இருந்தால் எப்படி” என்றான்.

“நான் சைக்காடிஸ்ட் தான். ஆனால் எனக்கு மாஜிக் ஒன்றும் தெரியாதே. மற்றவர்கள் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் என்ன பேசுகிறார்கள் என்று தெரிவதற்கு. அப்படி தெரிந்தால் நான் ஏன் அப்படி பட்டவர்களிடம் நான் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள போகிறேன்.”

இளவரசன் இதுவரையில் விளையாட்டுக்காக தான் பேசிக் கொண்டிருந்தான். அவள் ஏதோ பேசுகிறாள். அதற்கு ஏற்ற மாதிரி தானும் பேசுகிறோம் என்று எண்ணி. ஆனால் இப்போது அவள் பேசுவது அவனுக்கு கோபத்தை உண்டாக்கியது.

“ஆமாம் அப்படி மற்றவர்கள் மனதில் என்ன எண்ணிக் கொண்டு பேசுகிறார்கள் என்று தெரிந்து விட்டாலும். அப்படி தெரிந்தால் தான் மேலாயிற்றே. ஒன்றும் தெரியாமல் மற்றவர்களை வதைக்க மட்டும் தான் தெரியும். நீ எல்லாம் எப்படி தான் சைக்காடிஸ்டாக ஆனாய் என்று தான் தெரியவில்லை.” என்று கோபமாக பேசி விட்டு கார்த்திக் நான் உன்னை அப்புறம் வந்து சந்திக்கிறேன். உனக்கு இரவு போன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக அந்த அறையை விட்டு சென்றான்.

அவன் செல்வதை பார்த்துக்கொண்டிருந்த இனியா அப்படியே அமர்ந்து விட்டாள்.

அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் தான் அதிர்ந்து இருந்தான். அவனுக்கு தெரிந்த வகையில் இருவருமே நல்லவர்கள். அவர்கள் இருவரும் எதற்காக சண்டையிடுகிறார்கள் என்று அவன் அறிந்திருக்கவில்லை.

இளவரசன் கூறியதற்கு அவனால் மறுமொழி கூட சொல்ல இயலவில்லை.

இனியாவை பார்த்த கார்த்திக்கிற்கு தான் ஒரு மாதிரி ஆகிற்று. அவன் பார்த்த வரையில் இனியாவை இவ்வாறு அவன் கண்டதே இல்லை.

“அக்கா இப்ப ஏன் இப்படி இருக்கீங்க. மாமா ஏதோ கோபத்துல பேசிட்டு போய்ட்டாரு. நீங்க அதுக்காக வறுத்த படாதீங்க அக்கா.” என்றான்.

இனியாவிற்கு இந்த சிறுவன் ஆறுதல் சொல்லும் அளவுக்கு இடிந்து போய் உட்கார்ந்திருக்கிரோமா என்று தோணியது.

அவளை சமாளித்தவாறே “இல்லை கார்த்திக் எனக்கு ஒன்றும் இல்லை. நீ எதுவும் பீல் பண்ணாதே.” என்று அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு அவள் அறைக்கு சென்றாள்.

றைக்கு வந்த இனியாவிற்கோ மனம் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தில் இருந்தது. நான் என்ன செய்தேன். தவறு செய்தது அவன். நேற்று அவனே அழைத்து விட்டு வீட்டிற்குள் கூட விடாமல் அவமான படுத்தியது அவன். ஸ்வேதா மேலே ஏதும் தவறு என்றாலும் பிரச்சனை என்ன என்பதையே சொல்லாமல் வீட்டை விட்டு துரத்தியதும் அல்லாமல் அதற்கு மன்னிப்பும் கேட்கவில்லை.

இனியா அவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூட எண்ணவில்லை. ஆனால் அதற்கு அவன் சமாதானமும் தெரிவிக்காமல் இன்றும் இப்படி சண்டை வளர்த்தது தான் கோபமாக வந்தது.

அங்கே இளவரசனின் மனமோ அதற்கு நேர் மாறாக இனியாவை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது. என்னவெல்லாம் சொல்லிவிட்டாள். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்று பேசுபவனாம் நான். அவள் எப்படி அப்படி சொல்லலாம்.

நேற்று நான் பேசியதிலிருந்தே ஸ்வேதா யார் என்பதை அவள் ஊகித்திருப்பாள். அந்த அளவுக்கு கூட அவள் அறிவு யோசிக்காமல் இருக்காது. அந்த பெண் அவள் உறவுக்காரி என்று தெரிவதற்கு முன்னாலே நான் எவ்வளவு சொன்னேன். அந்த பெண் எவ்வளவு கேட்டவள் என்று. அவளால் தான் என் தம்பி சாக பார்த்தான் என்றெல்லாம். அவளுக்கு அது கூடவா நியாபகம் இருக்காது.

 என் தம்பி ஏற்கனவே டிப்ரசனில் இருக்கிறான் என்று தானே இவளை நேற்று அழைத்தேன். ஒரு சைகாடிஸ்டாக கூட ஒரு நபரை அழைத்து வந்ததே தவறு. என் வீட்டு விஷயம் எப்படி மற்றவர்களுக்கு தெரியலாம். அதுவும் அழைத்து வந்தது தான் வந்தாள். அதுவும் அந்த பிசாசையா அழைத்து வர வேண்டும்.

அதிலும் அவள் இல்லாவிட்டால் நானும் போய் விடுவேன் என்று மிரட்டல் வேறு. மருத்துவ துறையில் இருந்துக்கொண்டு எந்த மாதிரி சூழ்நிலையில் எப்படி மிரட்டல் விடுத்தாள். அதை எல்லாம் மறந்து அவள் போய் சேர்ந்தாளா இல்லையா என்று என்று பதைத்து போய் போன் செய்து விசாரித்தால் அப்பவும் குத்தல் பேச்சு. இப்பவும் அப்படி தான். எல்லாம் எனக்கு தேவை தான் என்று எண்ணிக் கொண்டான்.

இவ்வாறு இருவரும் மற்றவரை திட்டியவாறே அன்றைய நாளை கடத்தினார்கள். ஆனால் அன்றைய இரவில் இருவருக்குமே மற்றவரின் மேல் கோபம் போய் தன் மேலேயே வருத்தம் கொண்டார்கள் இன்னும் தணிவாக பேசாததற்கு.

ந்த ஞாயிறு காலை விடிந்ததில் இருந்தே இனியாவிற்கு ஒன்றும் பிடிக்கவில்லை. பொதுவாக இனியா ஞாயிற்றுக் கிழமையை ரொம்ப விரும்புவாள். அன்று தான் எல்லா விசயத்தையும் ரசித்து செய்ய முடிகிறது என்று நினைப்பாள். ஆனால் இன்றோ எல்லா விசயமும் அவளுக்கு சோர்வையே அளித்தன.

அவள் சோர்வான முகத்தை பார்த்து வீட்டில் இருந்த அனைவரும் என்ன என்று விசாரித்து விட்டனர். இனியாவும் ஒன்றும் இல்லை. ஒரு மாதிரி இருக்கிறது என்று சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தாள்.

கடைசியில் மாலை நான்கு மணிக்கு ஹாலில் எல்லோரும் அமர்ந்துக் கொண்டிருக்கும் போது அவள் சகோதரி ஜோதி “என்ன இனியா உனக்கு என்ன தான் ஆயிற்று” என்று விசாரித்தாள்.

“ஒன்னும் இல்லைக்கா. ஒரு மாதிரி இருக்கு.”

ஜோதி சிரித்து விட்டு, “ஒரு சைகாடிஸ்ட் மேடம் இப்படி சொல்லக் கூடாதே” என்றாள்.

“என்ன ஒரு சைகாடிஸ்ட்டா பாக்காம இந்த வீட்டு பொண்ணா பாருங்க. பர்சனல் விசயத்துல ஏன் என் ப்ரோபஸனை நடுவுல இழுக்கறீங்க” என்று சிறிது கோபமாக வினவினாள்.

இனியாவிற்கு நேற்று இளவரசன் இதே வார்த்தையை குறிப்பிட்டது நினைவு வந்து அவனுக்கு பதில் கூறுவது போல் சொல்லி விட்டாள்.

அவள் பேசி விட்டு அவள் அக்காவின் முகத்தை பார்த்தல் ஜோதியின் முகம் வாடி போய் இருந்தது.

என்ன செய்து விட்டேன் என்று இனியா தன்னை மனதில் திட்டிக் கொண்டே சகோதரியிடம் மன்னிப்பு கேட்டாள்.

“சாரிக்கா. ஏதோ யோசனைல தெரியாம பேசிட்டேன்.”

“பரவல்ல” என்று சொன்னாலும் ஜோதியின் முகம் வாடி தான் இருந்தது.

மற்ற அனைவரும் வேடிக்கை தான் பார்த்தார்களே ஒழிய சகோதரிகளின் சண்டையின் நடுவில் வரவில்லை.

“அக்கா. நிஜமாகவே சாரிக்கா. ஏதோ தெரியாமல் பேசிட்டேன். என்ன மன்னிச்சிடுக்கா.” என்று வருந்தினாள்.

தங்கையின் வறுத்த குரல் கேட்டு ஜோதியும் இறங்கி வந்து “பரவால்லடீ நமக்குள்ள என்ன சாரி எல்லாம். அத விடு” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே இடை புகுந்தாள் அபி.

“சித்தி நீ எப்படி எங்க அம்மாவை திட்டலாம். எங்க அம்மாவை திட்டனா உன்ன யாரும் கேட்க மாட்டங்கன்னு நினைச்சியா. கண்டிப்பா உனக்கு பணிஸ்மென்ட் இருக்கு” என்றாள்.

இனியாவும் “சரிங்க அபி மேடம். பனிஷ்மெண்ட் என்ன சொல்லுங்க” என்றாள்.

“லீவ் முடிஞ்சு ஸ்கூல் ஆரம்பிச்ச உடனே ஒரு வாரம் நீ தான் என் ஹோம் வொர்க் செஞ்சி தரனும்” என்று ஆர்டர் போட்டாள் அபி.

இனியா அபியை துரத்த அபி ஓட என்று அனைவரும் சிரித்தனர்.

அபி வெளியே தோட்டத்திற்கு ஓட அவளை துரத்திக் கொண்டு சென்ற இனியா சிலை போல் நின்றாள். 

தொடரும்

En Iniyavale - 05

En Iniyavale - 07

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.