(Reading time: 23 - 46 minutes)

சௌபர்ணிகா அறைக்குள் நுழையும் போது கார்த்திக்கின் போனில் சந்தியா அழைக்க, “மம்மி ஒரு இம்பார்ட்டன்ட் கால். 10 மினிட்ஸல வர்றேன் என்று சொல்லிவிட்டு தன்  அறைக்கு ஓடினான்.

அழைப்பை எடுத்தவன் நைட்  எல்லாம கண்முழிச்சு பாஸ்க்காக வேல பாக்கிறியா  சந்தியா?” என கேட்க

ம்....ஆசை தோசை என சந்தியா சொல்ல

திட்டுறதுல கூட சாப்பாட்ட விட மாட்டேன்ற என் சாப்பாட்டு ராமி”  என கார்த்திக் கிண்டலடிக்க

இதை சொல்ல தான் விடாம கால் பண்ணீங்களா கார்த்திக்?” என அவள் கேட்டபொழுது

சித்தி கீழ போலாம். எனக்கு பயமா இருக்குஎன மொட்டை மாடி இருட்டை யாழினி சிணுங்க,”அதான் நான் இருக்கேன்ல. வா தூக்குறேன்என அவளை தூக்கி இடுப்பில் வைத்தவள் போனில் கவனத்தை திருப்பினாள்.

கூடிய சீக்கிரம் உங்க அக்கா பொண்ணு உட்கார்ந்திருக்கிற சீட் எனக்கு சொந்தமாகிடும். அதுக்கு பிறகு யாரையும் விட மாட்டேன். அவகிட்ட சொல்லி வைஎன்றான் கார்த்திக்.

ஷ்...அப்பா  தாங்க முடியல பாஸ். உங்கள பாத்தா பாவமா இருக்கு. நீங்க வேணா வேற பொண்ண ட்ரை பண்ணுங்களேன் நானே ஹெல்ப் பண்றேன்.என்றவளை ,

நீ தான எனக்கு பொண்ணே கிடைக்காதுன்னு சாபம் போட்ட. வேற வழியே இல்ல. என்னை லவ் பண்ற வரைக்கும் உன்னை விடமாட்டேன்.....  சரி.. சொல்ல வந்ததை சொல்லிடுறேன்.  உன்னோட செல்லில் 3G  டேட்டா ப்ளான் போட்டு இருக்கேன் என்னோட பர்த் டே கிப்ட்.  எப்போ வேணாலும் இன்டர்நெட் போன் வழியா அக்ஸஸ் பண்ணிக்கலாம். இனி பேஸ் புக் வேஸ்ட் ஆப் டைம் ன்னு சொல்ல மாட்ட தானஎன கேட்டவனிடம்

 “ஓசி  வேண்டாம்னு சொல்லி நாம திருந்திட்டா  தேர்தல் வாக்குறுதி கொடுக்க முடியாம  நம்ம ஊரு அரசியல்வாதிங்க திணறிடுவாங்க பாஸ். சந்தியா இனி கண்டிப்பா 24/7 பேஸ் புக்ல சுறுசுறுப்பா இருப்பா.  ஒரு நிமிஷம்... உங்களுக்கு ப்ராமிஸ் பண்ண ரிவார்ட்டை கொடுத்துடுறேன் என, “அப்படியா இரு இரு நானும் ரெடியாகிக்கிறேன்என்றான். காமெடி பண்ணாதீங்க பாஸ். ஈமெயில்ல செக் பண்ணுங்க என்றாள்.

அவன் போனில்  மின்னஞ்சலை  பார்த்தவன், காலையில் அவன் எடுத்த புகைப்படத்தை அவள் அனுப்பியிருப்பதை பார்த்து இன்ப அதிர்ச்சியில் யாஹூ...மை பிக்ச்சர் ...இச் இச்”  என அதற்கு முத்தமிட்டான்.

அந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியாய் என்ன பண்ணீங்க?” சந்தியா கேட்க கிஸ் பண்ணேன்.. என்றவன் சிறிது இடைவேளை விட்டு உனக்கில்ல ..என்  போட்டோக்குஎன்றான்.

அது என் போட்டோ என்றாள் சந்தியா கடுப்புடன் .

நம்ம  போட்டோன்னு வேணா வச்சுக்கலாம். இது பெயிண்ட்டிங்கா எப்போ வரப் போகுது?” என பேச்சை திசை திருப்பினான்.

இப்பல்லாம் பெயின்ட்டிங் அவ்வளவா பண்றதே இல்ல கார்த்திக்.  பூவும் நானும் போட்டி போட்டு டிராயிங், பெயிண்ட்டிங்ன்னு  கலக்குவோம். அவ மாரேஜ் ஆகி போன பிறகு, பெயிண்ட்டிங் பண்ணறப்போ அவள ரெம்ப மிஸ் பண்ணுவேன். அதுனால முந்தி அளவுக்கு அக்ரசிவ்வா பண்றது கிடையாது.என்றாள் சந்தியா சோர்ந்த குரலில்.  ம்ம் .....”  என்று கேட்டு கொண்டவன் சில நொடி அமைதிக்கு பின் என்னோட ரிவார்டை பாத்தியா?”

ஏடாகூடமா ஏதாவது இருக்கும்ன்னு திறந்தே பாக்கல.  பாக்கவும் மாட்டேன். என்றாள் சந்தியா.  எடாகூடாமான்னா?...என்னன்னு கெஸ் பண்ண?”  என குறும்பாக கார்த்திக் கேட்க, “ப்ச்...அதை வச்சே சும்மா கடலை போடாதீங்க பாஸ். நான் பாக்கவே போறது இல்ல. யாழிக்கு தூக்கம் வருது. நாளைக்கு ஆபிஸ்ல பாக்கலாமா? ” என்றாள். அவள் தோழிகள் அவன் கொடுத்த பெட்டி மோதிர பெட்டி போல இருப்பதாகவும், அதில் காதலை வெளிப்படுத்தும் அடையாளமாய் மோதிரத்தை பரிசளித்துருப்பான் எனவும் யூகித்ததை ஓரளவு நம்பினாள். இப்போது அவன் பேசியது அதை உறதிபடுத்துவது போல இருக்க அதை பார்க்கவே வேண்டாம் என முடிவே செய்துவிட்டாள். தட்ஸ் ஓகே. ஆனா எப்போ அதை பாத்தாலும் எனக்கு மறக்காம கால் பண்ணு.  என்றவாறு இணைப்பை துண்டித்தான்.

சௌபர்ணிகாவை பார்க்க சென்றவனிடம் கல்யாண பேச்சை ஆரம்பிக்க வெடுக்கென சினந்தவன் மதுவோட கல்யாண விஷயத்தை  தவிர வேற எதுவும் நான் பேச தயாராயில்லை.என்றான் ஒரே வார்த்தையில். அவளும் சொன்ன பேச்சை கேட்டா தான. பழைய சௌபர்ணிகாவா இருந்தா இப்படி ஆளாளுக்கு உங்க இஷ்டத்திற்கு ஆட மாட்டீங்கஎன்றார்  ஒருவித இயலாமையுடன். தாயின் கவலையை உணர்ந்தவனாய், “ப்ச்...என்ன மம்மி இதுக்கு போய் இப்படி பீல் பண்றீங்க. மது சந்தோஷம் தான் நமக்கு முக்கியம். அவ மனச மாத்தி அவளுக்கு கல்யாணத்தை பண்ணி, அப்புறம் என் ட்ரீம் ப்ராடக்ட் லான்ச் பண்ண  பிறகு நீங்க யாரை கைகாட்டினாலும் கண்ணை மூடிட்டு தாலி கட்டுவேன்....என சொன்னான் கார்த்திக்.

சௌபர்ணிகா அதற்கு மது இந்த வீட்டை விட்டு வேற எங்கேயும் போக மாட்டேன்னு  மூணு வருஷமா அடம்பிடிக்கிறா.  மீரா சொல்லியே கேக்கலை. உன்னால எப்படி அவ மனச மாத்த முடியும்?”

கார்த்திக், “ஒரு ப்ளான் இருக்கு மம்மி. மூணு வாரத்தில சென்னைல  அட்டென்ட் பண்ண போற கான்பரன்ஸ்க்கு  நிரஞ்சனும்  மலேசியால இருந்து வர்றான். ஒன் லாஸ்ட் ட்ரை. மது நிருவை மீட் பண்ண வைக்கலாம்னு பாக்கிறேன். அவ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியல. ஜஸ்ட் ஹோப் பார் தி பெஸ்ட். என்றான்.

சௌபர்ணிகா அவனிடம் சந்தியா என ஆரம்பிக்க, “மம்மி, நான் உங்க பையன். யாரை எங்க வைக்கணுமோ  அங்க தான் வைப்பேன்.  சந்தியா நல்ல புத்திசாலி பொண்ணு. என்னோட எம்ப்ளாயி. அவ்வளவு தான். அவகிட்ட பேசாம ஒதுங்கி இருந்தா நம்ம தலைல முளகா அரைச்சிடுவா. அதான்  சரிக்கு சரி பேச வேண்டியதாயிருக்கு. நீங்க யோசிக்கிற மாதிரி  எங்களுக்குள்ள வேற எதுவும் இல்ல.என்று அவர் அவளை பற்றி மேலே பேச விடாமல் அவர் வாயை அடைத்தான்.

ந்தியா வீடு நெருக்கமான குடியிருப்புகள் கொண்ட நடுத்தர வர்க்கம் வாழும் பகுதி. கோடை விடுமுறைக்கு கணவன்மார்களை பிரம்மச்சாரிகளாக்கி  விட்டு வரும் சந்தியாவின் சகோதரிகள், அவர்கள் வீட்டு மாடியில் உள்ள ஹாலில் படுக்கையை விரித்து பிள்ளைகளுடன் ஒன்றாக படுப்பது வழக்கம். இவர்களுடன் லக்ஷ்மியும் சேர்ந்து கொள்வார்கள். பிள்ளைகளை தூங்க வைத்து விட்டு, சகோதரிகள் விடிய விடிய கதை  பேசி விட்டு தூங்குவர். அன்றும் வழக்கம் போல அவர்கள் கதையடித்துக் கொண்டிருந்தனர். பேச்செல்லாம் சந்தியாவுக்கு அந்த உணவகத்தில் நடந்த திடீர்  பிறந்த நாள் விழாவை பற்றி இருந்தது. சந்தியா, அந்த ஹாலின் அருகில் இருக்கும் அவளது அறையில் உட்கார்ந்து கார்த்திக் அனுப்பிய சிக்மா ப்ராஜெக்ட் பற்றிய மின்னஞ்சலை பார்த்து அடுத்த நாளுக்கு தேவையான விவரங்களை தயார் செய்து கொண்டிருந்தாள். கார்த்திக் அவள் வேலையை எளிதாக்கும் விதமாக தெளிவான விவரங்களை அழகாக தொகுத்து அனுப்பி இருந்தான். ஹர்ட்வர்ட் சரக்கு சோடை போகல டோய்......இதெல்லாம் எப்போ எப்படி ரெடி பண்ணான்னே தெரியலஎன்று மனதிற்குள் அவனை மெச்சிக்கொண்டாள். மறுபுறம் ஹாலில் நடந்த பேச்சையும் காதை தீட்டிக் கொண்டு கேட்டுகொண்டிருந்தாள்.

விந்தியா இன்னக்கு பாத்தியாடி...எத்தனை பேரு கழுத்துல தாலி இருந்ததுன்னு விரல் விட்டு எண்ணிடலாம். தாலிய கழட்டி வைச்சிட்டு வர்றது தான் இப்போ பேஷன் போல இருக்கு. என சொல்ல, ஸ்ரீ அதற்கு நீயே டெய்லி தாலி குத்துது குடையுதுன்னு கழட்டி வைச்சு தூங்கிற ஆளு தான. அந்த கூட்டத்தில அடுக்கடுக்கா நகை போடாட்டினாலும், பளிச்ன்னு வைர கம்மல்,  சிம்ப்ளா ரூபி நெக்லஸ் ன்னு... போட்டு வந்த ஒவ்வொருத்தரரையும் கொள்ளையடிச்சா லட்ச கணக்குல தேறும்...என்றாள்.

சதாசிவம் சாரும், டாக்டரும் நேரில் வந்து கூப்பிட்டதால தான் மறுப்பு சொல்ல முடியல. ஆனா அவங்க நம்ம சந்தியாவுக்கு பிறந்த நாள் கொண்டாடுராங்கன்னா எவ்வளவு பெரிய விஷயம்.  பரவாயில்லை பந்தா பண்ணாம நல்லா பழகுறாங்க. சந்தியாவோட பாஸ் கார்த்திக்  என்று விந்தியா சொல்ல ஆரம்பித்தது  தான் தாமதம்  சந்தியா ஓடி வந்து அவள் தலைமாட்டில் சாய்ந்து படுத்து கொண்டாள்.

 “இருட்டில இங்க என்னடி பண்ற ?” என ஸ்ரீ கேட்க,

 “இப்படி இண்டரெஸ்டிங்கா புரணி பேசுறப்போ என்னால எப்படி வேல பாக்க முடியும்? சொல்லு சொல்லு என்ன புரணி ? எங்க பாஸ் கார்த்திக் ன்னு  ஏதோ சொல்ல வந்தியே  ஆர்வமாய் கேட்டாள் சந்தியா.

அதுக்கு எதுக்கு என் காதுக்குள்ள  வந்து  கத்துற..உனக்கு அம்மா அங்க தலைகாணி போட்டு வச்சிருக்காங்க. அங்க போய் படு.என்றாள் விந்தியா.

இல்ல இன்னும் வேலை இருக்கு. நான் கொஞ்ச நேரம் இருந்திட்டு என் ரூம்க்கு போயிடுவேன்.என்றாள் சந்தியா.

அவர்கள் பேசுவதை  கவனித்த லக்ஷ்மி சதாசிவத்தோட தங்கச்சி ஒருத்தி ட்ரக் அடிக்ட்டா இருந்ததா ஊருக்குள்ள ஒரு பேச்சிருக்கு. ஆனா ஐந்தாறு வருஷத்திற்கு முன்னாடியே இறந்திருச்சு.என்றவரிடம்

அடப்பாவமே.....பணம் அதிகமா இருந்தாலும் பிரச்சினை தான். அவங்களுக்கு   குழந்தைங்க  இருக்குதாம்மா ?” என கேட்டாள் ஸ்ரீ.

அது வீட்டுக்காரனோட வாழலை. கல்யாணமாகி   ஒரு ஏழட்டு வருஷத்தில  டைவோர்ஸ் ஆயிடிச்சாம். ஒரேயொரு பொண்ணு  இருக்கான்னு நினைக்கிறேன்.  என லக்ஷ்மி சொன்னவுடன் அந்த பொண்ணு மதுவா இருக்குமோ? கார்த்திக் கிட்ட கேக்கணும்என  சந்தியா மனதில் குறித்து வைத்துக் கொண்டாள்.  

தன் பின், தனது அறைக்கு வந்து துரிதமாக வேலையை முடித்து, அந்த சிக்மா ப்ராஜெக்ட்டில் தனக்கு இருந்த சந்தேகங்களை கார்த்திக்கிற்கு அனுப்பி வைத்த பிறகு மணி பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருந்தது.  கிப்ட்ன்னு சொன்னான்...யு ட்யுப் ல பாட்டு போடுவோம்.  என, “அடிக்கிற கை தான் அணைக்கும்...பாட்டை போட்டாள். அது திக்கி திணறி  நின்று நின்று வந்து கொண்டிருந்தது. உடனே கார்த்திக்கிற்கு அழைத்தாள். நல்ல தூக்கத்தில் இருந்த கார்த்திக்,  “பேய் ...பார்ம்க்கு வந்துட்டியா..சீக்கிரம் சொல்லி  தொலை

கண்களை திறக்க முடியாமல் தூக்கத்திலே பேசினான்.

இத்துப்போன  பர்த்டே கிப்ட்ட கொடுத்துருக்கீங்க பாஸ்.  என்ன 3G பிளானோ? ஒரு பாட்டு கூட சரியா ப்ளே ஆக மாட்டேங்குதுஎன அவள் குறை கூற என்ன பாட்டு?” அவன் கேட்க, “அதெல்லாம் சொல்ல முடியாதுஎன சந்தியா சொல்ல,

உன் பக்கத்தில பில்லோ இருக்கா..”  கார்த்திக் கேட்க,

ம்..இருக்குஎன அவள் சொல்ல,

கார்த்திக், “அதை எடுத்து கட்டி பிடிச்சுக்கோ

 “எதுக்கு?“ சந்தியா கேட்க,

கார்த்திக், “கட்டிபிடி அப்புறம் சொல்றேன்”...

டன் .என சந்தியா சொல்ல,

இந்த ஸ்டெப்பை நீ இன்னும் செய்யல..ஏமாத்தாத”  கார்த்திக் சொல்ல,

அதெல்லாம் காரணம் தெரியாம செய்ய  முடியாது.சந்தியா சொல்ல

அப்போ...குட் நைட்என்று சொல்லி இணைப்பை துண்டித்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.