(Reading time: 23 - 46 minutes)

மீண்டும் அழைத்தாள் சந்தியா. கார்த்திக், டக்குன்னு வைச்சுடீங்க. எனக்கு ஒரு விஷயம் தெரியாட்டி மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு...என சந்தியா சொல்ல

அடுத்த ஸ்டெப் சொல்லணுமா?” என அவன்  கேட்க,

ப்ச்....அது இல்ல. மது பேரண்ட்ஸ் டைவோர்ஸ்ட்டா ?” என சந்தியா கேட்கவுடன்  திடுக்கிட்ட கார்த்திக் ஒரு நொடி அமைதிக்கு பின் ம்...உனக்கு எப்படி தெரியும்?” என்றான்.

ஊருக்கே தெரியும்...எங்கம்மா இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்க பாமிலி நெட்வொர்க்ல டெலிகாஸ்ட் பண்ணாங்க என்றாள் சந்தியா.

அதை பத்தி நாளைக்கு பேசுறேன். இப்போ விட்ட ஸ்டெப்பல இருந்து என ஆரம்பித்த கார்த்திக்கிடம் அடங்குங்க பாஸ். குட் நைட்என்று சொல்லி இப்போது இவள் இணைப்பை துண்டித்து விட்டு, அவள் அறையிலேயே தூங்கி போனாள்.

தண்ணீர் முகத்தில் பட விழித்த சந்தியாவிடம், “எந்திரிடி... அலாரத்தை என் பக்கத்தில வச்சு தருணை எழுப்பி விட்டு, நீ மட்டும் சுகமா குப்பற படுத்து தூங்கிகிட்டு இருக்க.சந்தியாவை எழுப்பி விட்டு கொண்டிருந்தாள் ஸ்ரீமா.

மணி என்ன ஸ்ரீ ? இன்னும் ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ்..என்றாள் சந்தியா சிணுங்கிய படி.

“6:20 அப்பா நீ யோகா கிளாஸ் என்னைக்கு போறன்னு கேட்டுகிட்டு இருந்தாங்கஎன்றவுடன் விருட்டென எழுந்த சந்தியா  இன்னக்கு ஆறு மணிக்கு கிளாஸ்டி...அச்சச்சோ..சக்கு என்னை கொன்னேபுடுவா  நான் ஓடுறேன்என்று மட மடவென கிளம்பினாள். அவளின் ஸ்கூட்டி உணவகத்தில் மாட்டி கொண்டதால், விந்தியாவின் ஸ்கூட்டியில் அசுர வேகத்தில் பறந்தாள்.

ஒரு வழியாக 6:45 க்கு யோகா வகுப்புக்கு  வந்து சேர்ந்தாள். அந்த நேரம் தான் உடற் பயிற்சிகள் முடிந்து தியான  பயிற்சி அளித்து கொண்டிருந்தார். மனதை தளர்த்தும் தியானம். அந்த இடத்தில் அப்படி ஒரு நிசப்தம். யோகா ஆசிரியர் இமேஜெரிஎனப்படும் கற்பனையை கண்மூடி தியானிப்பவர்கள் மனதில் விதைத்து கொண்டிருந்தார்.  அதிரடியாக வந்த சந்தியா எக்ஸ்க்யூஸ் மீ என முழங்கி  அங்கு  இருந்த இதய நோயாளிகளுக்கு  திடீர் அதிர்ச்சியை கொடுத்தாள்.

அந்த யோகா ஆசிரியர் எரிச்சலுடன் உள்ள வரச்சொல்லி, மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தார். நீங்க இப்போ கடற்கரைல  நின்னுக்கிட்டு இருக்கிறீங்க.ஓயாம சத்தமிட்டு ஓடி வந்து மோதுற அலைகள் உங்கள் பாதங்களை வருடுது. அப்பொழுது தூரத்தில் ஒரு சத்தம்என்ற போது மறுபடியும் எக்ஸ்க்யூஸ் மீ”  இப்போது முழங்கியது சக்தியின் குரல்.

அவளை பார்த்த சந்தியா கடுப்பானாள் மக்கு சக்கு...நான் தான் லேட்ன்னு நினைச்சா...நீ என்னை விட லேட்டா...வா உனக்கு இன்னைக்கு சங்குடிமனதுக்குள் வசைபாடிக்கொண்டே அவளை முறைத்தாள். சக்தி சந்தியாவை கடக்கும் போது கெஞ்சவது போல பாவனை காட்டி மன்னிப்பு கோரினாள்.

சக்தியிடம் லேட்டா வந்தா எக்ஸ்க்யூஸ் கேக்காம கொயட்டா வாங்கஎன அதட்டி விட்டு யோகா ஆசிரியர் மீண்டும் ஆரம்பித்தார்  நீங்க இப்போ கடற்கரைல  நின்னுக்கிட்டு இருக்கிறீங்க.ஓயாம சத்தமிட்டு ஓடி வந்து மோதுற அலைகள் உங்கள் பாதங்களை வருடுது. அப்பொழுது தூரத்தில் ஒரு சத்தம்என மீண்டும் எக்ஸ்க்யூஸ் மீ இது கார்த்திக்கின் குரல். கெட்ட கடுப்புடன் அவனை முறைத்தவரிடம்., “சோ சாரி. பட்  எமர்ஜென்சி. இங்க வந்த சந்தியாவோட ப்ரதர் அர்ஜுன்க்கு என சொல்லி முடிக்கும் முன் சந்தியா அவன் அருகில் நின்றாள். அஜுக்கு என்ன ஆச்சு கார்த்திக்படபடப்புடன் அவள் கேட்க, “சொல்றேன். சீக்கிரம்  ஸ்கூட்டி சாவிய கொடு என அவன் கையை நீட்ட, என்னமோ ஏதோன்னு அவள் சாவியை கொடுக்க, அதை வாங்கிய பின், “அர்ஜுன் என இழுத்தான் கார்த்திக். அஜுக்கு என்ன?” என மேலும் படபடப்புடன் சந்தியா கேட்க,

அர்ஜுன் அம்மா யாருஎன விளம்பர பாணியில் கேட்டு வைத்தான் கார்த்திக். என்ன கார்த்திக்? அஜு விஷயத்தில விளையாடுறீங்கஎன்று அவள் சொல்வதை காதில் வாங்காமல் வண்டிகள் நிறுத்தும் இடத்தை அடைந்த  அவன் ஓ...உங்க அக்கா ஸ்கூட்டில வந்தியா? சரி உன் ஸ்கூட்டி சாவியையும்  கொடு. அதை வொர்க் ஷாப்புக்கு அனுப்பிவிடுறேன்.என்றான். அவள் பின்னாடியே சக்தியும் வந்து சேர, சந்தியா சாவிய குடுங்க கார்த்திக்என்றாள் சந்தியா.

அவள் வண்டியில் ஏறி அமர்ந்தவன் அப்போ என்னை வீட்டில டிராப் பண்ணுவியாஎன சொல்லவதை கேட்டு அதிர்ந்த சந்தியா வண்டிய விட்டு இருங்குங்க பாஸ். விந்தியா இன்னக்கு ஆபிஸ்க்கு போறா. சீக்கிரம் போய் வண்டிய அவகிட்ட கொடுக்கணும்.என்றாள்.

எங்க வீட்டுக்கு போக ஜஸ்ட் 10 மினிட்ஸ் தான் ஆகும். என்னை வீட்டில விட்டுட்டு நீ எங்க வேணாலும் போ”, கார்த்திக் அடம்பிடித்தான். இது சரி வராது. நான் சக்கு கூடபோறேன். விந்தியாவை ஆட்டோல போக சொல்லி சமாளிச்சுக்கிறேன்.என சக்தியுடன் கிளம்ப சந்தியா எத்தனிக்க,

இவன் கூட வண்டில போய் லவ்வு ரொமான்ஸ்ன்னு ஆகிடுமோன்னு பயந்துகிட்டு தான ஓடுற?”  என நக்கலடித்தான் கார்த்திக்.

கார்த்திக் இது ரெசிடென்சியல் ஏரியா. பாக்கிறவங்க என்ன பேசுவாங்க?.அர்ஜுன் விஷயம் ஒரு எமர்ஜென்சி சிட்டுவேசன்...இட் இஸ் அன் எக்ஸ்செப்ஷன். அன்னைக்கு நடந்ததையே யாராவது அப்பாகிட்ட போட்டு கொடுத்திடுவாங்களோன்னு பயமா இருக்கு. பயபரீட்சை எல்லாம் இந்த விஷயத்தில் வேண்டாம்என்றாள் சந்தியா.

அவ்வளவு தான... பாக்கிறவங்க உன்னை தப்பாவே நினைக்காத மாதிரி பிளான் பண்றேன். ஆனா நீ  தான் என்னை நாளைக்கு என்னை வீட்டில டிராப்  பண்ணனும் சரியா?” என்றான் கார்த்திக். நீங்க பிளான் பண்ணுங்க...ட்ரை பண்றேன்என்று சொல்லி அவனிடம் சாவியை வாங்கியவளிடம்,

சந்தியா நீ நிஜமாவே தம்மடிப்ப?”  என கேட்டான் கார்த்திக்.

ஆமா...இதுல என்ன சந்தேகம்தோளை குழுககிய படி கேட்டாள்.

உன் லிப்ஸ்ஸ பாத்த அப்படி தெரியலயே...என அவள் உதடுகளை  நோட்டம் விட்டபடியே கார்த்திக் கேட்க,

ஒரு ஸ்பெஷல் லிப்ஸ்டிக் இருக்கு கார்த்திக். அதை போட்டு  தம்மடிச்சா மார்க்கே இருக்காது...இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம். உங்களுக்கு புரியாது.”  என்ற படியே ஸ்கூட்டியை ஓட்ட தயாராகியவள், “உங்களுக்கு எப்படி நான் இங்க வர்றது தெரியும் ?” என வினவ,

ம்...அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம்.  நாளைக்கு என்னை டிராப் பண்றப்ப புரியும்..தென், நீ ஈமெயில்ல கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் அனுப்பிருக்கேன். ரெம்ப நல்லா அனலைஸ்  பண்ணியிருக்க. நீ ரிக் கை ஹான்டில் பண்றத  பாக்கணும்னே அதே டைம் இருந்த என்னோட மலேசியா கால்ல போஸ்ட்போன் பண்ணிட்டேன். ஐ அம் சோ பாசிடிவ் அபௌட் யுவர் வொர்க். ஆல் தி பெஸ்ட்என அவளை உற்சாகபடுத்தி விட்டு விடைபெற்றான்.

இதையெல்லாம் பார்வையாளராய் பார்த்துக் கொண்டிருந்த சக்தி ஜந்து,  இன்னும்  அவன்  ப்ரண்ட்ன்னு சொல்லி என் காதுல பூ  சுத்தாத. என்று சொல்ல ம்....அவன் ப்ரன்ட் தாண்டி. அவன் அலைபாயுற மனசை திருத்தி நல்லவனாக்க தான், அவன் இவளோ பேசின பிறகும் பழகுறேன்”  என்றாள் சந்தியா. அவள் சொல்லவதை கேட்டு நக்கலாக சிரித்து கொண்டே நம்பிட்...டேன் ...ஆனா, இதுக்கு நீ சொன்ன லிப்ஸ்டிக் பொய் பெட்டரா இருந்ததுஎன்றாள் சக்தி.

கலாயிக்கிறீங்களாக்கும்?...ஏன்டி லேட்...பர்ஸ்ட் டேவே லேட்டா? கொஞ்சம் கூட   பொறுப்பே இல்லாம இருக்கஎன்றாள் சந்தியா சளித்து கொள்வது போல. சக்தி சாரிடி ஜந்துஎன சொல்ல சாரியும் வேண்டாம்...பூரியும் வேண்டாம்...உனக்கு  சோறும் வேண்டாம். இன்னைக்கு கொள்ளு கஞ்சி தான்  லஞ்ச். நான் மாமிட்ட சொல்லிடுவேன்.  அப்ப தான் நாளைக்கு டைத்துக்கு வருவ. கொஞ்சமாவது அக்ரசிவ்வா இருந்தா தான்டி  மூணு மாசத்தில உன் தொப்பைய குறைக்க முடியும்... ”  என்றாள். பின், தோழிகள் தத்தம் இல்லங்களை நோக்கி விரைந்தனர்.

வீட்டிற்கு வந்த சந்தியாவிடம்  தன்ராஜ் புது வேலையை பற்றி கேட்டார். அப்படியே அவரிடமும் லக்ஷ்மியிடமும் ஆசீர்வாதம் வாங்கி விட்டு, தமக்கையரிடமும் , குழந்தைகளிடமும்  விடைபெற்று 8:30 மணி அளவில் வீட்டை விட்டு கிளம்பினாள்.

கணினியில் பார்வை பதித்திருந்த கார்த்திக்கிடம் மது,. “நான் சொன்னப்ப நீ கேக்கலை. பர்ஸ்ட் டே ஆபிஸ்க்கு டேக்கா குடுத்திட்டா அந்த சந்தியா. எப்போ வர போறாளோ....போன் பண்ணா எடுக்க மாட்டேன்கிறா..நல்ல வேளைக்கு மஹா இருக்கிறதால ரிக் கால்லுக்கு பிழைத்தோம்...வா கான்பரன்ஸ் ரூம்க்கு போகலாம்..அடுத்த 10 நிமிஷத்தில கால்என்றாள்.  கார்த்திக் பதிலுக்கு  விடு விடு. அடுத்த ஸ்டேடஸ்  கால்ல சந்தியாவை பேச வைக்கலாம் என்றபடி அவனது மடி கணினியை கையில் எடுத்த படி கிளம்பினான்.  மது இப்படியே கண்ணை மூடிட்டு அவளை நம்பிட்டே இரு. உனக்கு நாமம் சாத்தி உன் கழுத்தில  ஏமாந்த பூனை ன்னு நேம் டேக் மாட்டிடுவா  என்றாள் மது. நான் ஏமாந்த பூனை இல்ல மது...ஏமாத்துற பூனைஎன்ற அவனின் இருகிய முகத்தை பார்த்து மது  மறு பேச்சின்றி நின்ற போது, கார்த்திக்கின் போனில் அழைத்தாள் சந்தியா. அவள் ஹல்லோ கார்த்திக்என்ற போது எப்போதும் இருக்கும் உற்சாகம் அவள் குரலில் இல்லாததை உணர்ந்தான் கார்த்திக்.

ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 10   

Go to Episode 12

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.