(Reading time: 15 - 30 minutes)

நான் தான் சொன்னேனே. நேத்து திடிர்னு அம்மா எனக்கு அண்ணன் இருந்திருந்தா நல்லா இருக்கும்லன்னு சொன்னா. ஏன்டா திடிர்னு னு கேட்டா, இல்ல எனக்கு ஏதும் ஒண்ணுன்னா அண்ணன் போய் கேட்பார்ல அப்படிங்கறா” என்று சொன்னார்.

ஜோதி “என்ன இனியா. உன்ன அப்படி யாரும் ஏதும் சொன்னாங்களா. சொல்லு. நான் போய் மாமாவை கேட்க சொல்றேன். என்னாச்சின்னு சொல்லு” என்றாள்.

இனியா பொறுமை இழந்தவளாக “ஏன்க்கா. நான் அப்படி ஏதும் சொன்னேனா. ஒரு உடம்பு சரி இல்லாம போனது என் தப்பா. என்ன ஏன் இப்படி பண்றீங்க. நீங்க பண்ணதுல எனக்கு திரும்ப தலை வலிக்குது” என்றாள்.

அதற்குள் அவள் தாய் லக்ஷ்மி “சாரி டா. ஏதோ பேசிட்டோம். அதை விடு. நீ போ. நீ உன் ரூம்க்கு போய் ரெஸ்ட் எடு. நாங்க யாரும் ஏதும் சொல்லல” என்றார்.

இனியாவிற்கு அது தானே தேவை. “சரி என்று கூறிவிட்டு, ஓகே. ஆன்ட்டி நான் ரூம்க்கு போறேன். சாரி கொஞ்சம் முடியல என்று அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டு, திரும்பினாள்.

அதற்குள் இளவரசன் “உடம்பை பார்த்துக்கோங்க இனியா” என்றான்.

இனியா அவனை உற்றுப் பார்த்துவிட்டு “ஓகே. மிஸ்டர் இளவரசன்” என்றாள்.

பின்பு இளவரசனும் அவன் அம்மாவும் கிளம்பி வீட்டிற்கு சென்றார்கள்.

ளவரசனால் அந்த “மிஸ்டர் இளவரசனை” தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவளின் இளா என்ற அழைப்பே நினைவில் வந்தது. எப்படி அவள் தன்னை அழகாக அழைப்பாள் என்று எண்ணி பார்த்தான். இதை எல்லாம் நீ தானே வரவைத்துக் கொண்டாய் என்று அவன் மனதே அவனை திட்டி தீர்த்தது. ஆனால் இப்போது என்ன செய்து அதை மாற்றுவது என்று தான் அவனுக்கு தெரியவில்லை.

இளவரசன் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும் போதே சந்துரு அங்கு வந்து “அண்ணா இனியாவிற்கு எப்படி இருக்கு. ஏன் என் கிட்ட சொல்லாம நீங்களும் அம்மாவும் மட்டும் போய் பாத்துட்டு வந்தீங்க. சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன் இல்ல” என்றான்.

“இல்லடா நான் வீட்டிற்கு வரும் போது நீ வீட்டுல இல்லை. எனக்கும் வேலை சீக்கிரம் முடிஞ்சி நான் வந்துட்டேன். அதான் நாங்க மட்டும் போயிட்டு வந்தோம்”

“நீங்க என்ன சொன்னாலும் என்னால ஒத்துக்கவே முடியல அண்ணா. இனியா எனக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்காங்க தெரியுமா. நான் இப்ப இந்த அளவுக்கு கொஞ்சம் மைன்ட் ப்ரீயா இருக்கேன்னா அதுக்கு அவங்க தான் ரீசன். உங்களுக்கு இனியாக்கு உடம்பு சரி இல்லைன்னே நான் தானே சொன்னேன். எனக்கு ஒரு போன் பண்ணி இருந்தா நான் வந்திருப்பேன் இல்ல. நீங்க ஏன் அப்படி பன்னால”

“சரி விடு சந்துரு. எனக்கு ஏதோ தோணாம போயிடுச்சி. ஜஸ்ட் லீவ் இட்.”

“ஓகே. விடுங்க. நான் நாளைக்கு போய் அவங்கள பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு சந்துரு அங்கிருந்து கிளம்பினான்.

இளவரசனுக்கு உடனே ஒரே சந்தோசம். நாளைக்கு சந்துரு இனியா வீட்டுக்கு போனா நாமளும் கூட போகணும் என்று எண்ணினான்.

டுத்த நாள் காலையில் இனியாவிற்கு உடல் நிலை சரி ஆகி விட்டாலும் அவள் தாயும் தந்தையும் அவளை வேலைக்கு செல்லக் கூடாது என்று தடுத்து விட்டனர். அவளுக்குமே உடல் சோர்வு மட்டும் போகததால் சரி என்று விட்டு வீட்டிலேயே இருந்தாள்.

காலையில் டைனிங் ஹாலில் வந்து அமர்ந்த இளவரசன் சந்துருவை தேடினான். அவன் எங்கே. இன்னும் அவன் இனியா வீட்டிற்கு போவதை பற்றி ஆரம்பிக்கவில்லையே என்று எண்ணினான்.

“அம்மா சந்துரு எங்கம்மா”

“இப்ப தான் சாப்பிட கூப்டேன். இதோ வரேன்னு சொன்னான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சந்துரு வந்தமர்ந்தான்.

“இன்னைக்கு என்னம்மா டிபன்”

“இட்லி, தோசை ரெண்டுமே இருக்கு. உனக்கு எது வேணுமோ அதை சாப்பிடு”

“ம்ம்ம். என்றவரே தோசையை எடுத்தவன் அம்மா. சொல்ல மறந்துட்டேனே, நான் இப்ப இனியா வீடு வரைக்கும் போக போறேன்.”

“ஏன் டா”

“என்னம்மா இப்படி கேட்கறீங்க. அவங்களுக்கு உடம்பு சரி இல்லை. நீங்க ரெண்டு பெரும் போய் அவங்கள பார்த்து இருக்கீங்க. நான் பார்க்க வேண்டாமா” என்றான்.

“இல்ல சந்துரு. அவங்க ஒன்னும் நமக்கு சொந்தக்காரங்க கிடையாது. நினச்ச நேரத்துக்கு எல்லாம் போயிட்டு இருக்க முடியாது. நாங்க நேத்து தான் போனோம். அப்பவே நீயும் வந்திருந்தா ஒன்னும் தெரிஞ்சிக்காது. நேத்து நாங்க போனோம். இன்னைக்கு நீ போணினா ஒரு மாதிரி இருக்கும். அந்த அளவுக்கு இனியாவுக்கு ஒன்னும் இல்லை.”

“என்னம்மா நீங்களா இப்படி பேசறீங்க. சொந்தக்காரங்களா இல்லாட்டி ஒருத்தவங்க வீட்டுக்கு போய் பார்க்க கூடாதா. அதுவும் உடம்பு சரி இல்லைன்னு தானே”

“இல்ல சந்துரு நான் நீ சொல்ற அர்த்தத்துல சொல்லல. அவங்க வீட்டுல இருக்கறவங்க ஏதும் நினைக்க போறங்கனு தான் சொன்னேன். ஓகே. நீ இந்த அளவுக்கு போகணும்னு நினைச்சினா போய் பார்த்துட்டு வா.”

இளவரசன் இதை அனைத்தையும் பார்த்தவாறே அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தன் அம்மா பேசியதை பார்த்தால் நானும் சந்துரு கூட போகிறேன் என்று சொன்னால் அது நடக்க போவதில்லை. அதை விடவும் அவர்கள் சொன்னதில் இருந்த நியாயம் அவனுக்கு புரிந்தது. அதனால் ஏதும் சொல்ல இயலாமல் அமைதியாக சாப்பிட்டான். ஆனால் அவனால் இனியாவை பார்க்க இயலாது என்பதை தான் தாங்கி கொள்ளவே இயலவில்லை.

னியாவிற்கு வீட்டில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மருத்துவமனைக்கு போயிருந்தாலாவது தனது மூட் மாறியிருக்கும். ஆனால் இங்கு அமர்ந்து என்ன செய்வது. மனம் எதிலும் செல்லாமல் இளவரசனையே நினைத்துக் கொண்டிருக்கிறது. திட்டிக் கொண்டேனும் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறதெனில் அதுவே அவனுக்கு வெற்றி தானே என்று தோன்றியது.

அவளுக்கு ஆயாசமாக இருந்தது. அம்மாவும் அக்காவும் சொல்ற மாதிரி நான் சைக்கலாஜி படிச்சி எப்பவுமே எல்லா சின்ன சின்ன விசயத்துல கூட பார்க்கிறேன் போல என்று நினைத்துக் கொண்டாள்.

எதாவது வேலை செய்தாலாவது இந்த எண்ணங்களில் இருந்து விடுபட முடியும். ஆனால் அம்மாவோ கிட்செனுக்குள் இருந்து கிட்டத்தட்ட விரட்டியே விட்டார்கள்.

ஏதாவது படத்தையாவது பார்க்கலாம் என்று எண்ணி தந்து லேப்டாப்பை எடுத்தாள். என்ன படம் பார்க்கலாம் என்று தேடுகையில் அவளின் பேவரைட் கொரியன் டிராமா “யூ ஆர் பியுட்டிபுல்” தென்பட்டது.

இனியாவிற்கு மிகவும் பிடித்தமான சீரியல் அது. அவளின் தோழி ஒருத்தி யூ டூபில் பார்த்துக் கொண்டிருந்த போது இவளும் சேர்ந்து பார்த்து அது பிடித்திடவே அதன் எல்லா எபிசொடயும் டவுன்லோட் செய்து அதை தொடர்ந்து பார்த்தாள். அதுவும் சாயந்திர நேரம் ஆரம்பித்து இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய பார்த்தாள். கிட்டத்தட்ட அடுத்த நாள் மதியம் தான் முடிந்தது. இரவு முழுவதும் தூங்காததால் அன்று பீவர் வந்து அவள் அம்மாவிடம் வாங்கிய திட்டுக்கள் என்று அவளால் எதையுமே மறக்க முடியாது.

அந்த சீரியலை பார்த்த உடன் கூடவே வரும் இந்த நினைவுகளோடு சிரித்துக்கொண்டே அதை ஓபன் செய்தாள். எப்பவும் போல் தனக்கு மிகவும் பிடித்த அந்த ஹீரோயின் பாடும் பாடல் 7வது எபிசோடில் கடைசி பார்டை போட்டு பார்த்தாள். (இதை வச்சி நம்ம ஹீரோயின்க்கு கொரியன் தெரியும்னு நினைச்சிடாதீங்க. சப்டைட்டில் வச்சி தான் பாப்பாங்க.)

அடுத்து இனியா கிளைமாக்ஸ் சீன் போட்டாள். அந்த சீரியலில் ஹீரோ ஒரு சிங்கர். அந்த ஹீரோவை கொஞ்சம் திமிர் பிடிச்சவன் போல காண்பிப்பார்கள். ஆனால் கிளைமாக்ஸில் அவன் ஒரு மேடையில் நின்றுக் கொண்டிருப்பான். கீழே அவனின் ரசிகர்கள் ஏராளமானோர் நின்று கொண்டிருப்பார்கள். ஏதோ பிரச்சினையில் ஹீரோயின் பிரிந்திருப்பாள். ஹீரோவிற்கு அவள் அங்கு வந்திருப்பாள் என்று தெரியும். ஆனால் அவன் கண்ணிற்கு அவள் தெரியவில்லை. ஹீரோ மேடையில் இருந்து அவனின் ஈகோ எல்லாவற்றையும் விட்டுவிட்டு “உன்னை பார்க்க எனக்கு அனுமதி தா” என்று கேட்பான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.