(Reading time: 15 - 30 minutes)

ந்த காட்சியை பார்க்கும் போதெல்லாம் இனியாவிற்கு ஏதோ நெகிழ்ந்து விடும். அவனை அந்த சீரியல் முழுவதிலும் திமிர் பிடித்தவன் போல் தான் காண்பித்திருப்பார்கள். ஆனால் கடைசியில் அவன் இறங்கி வருவது அவளுக்கு மிகவும் பிடித்தமானது. அவ்வாறு தான் ஈகோ எல்லாவற்றையும் விட்டுவிட்டு சேர்வது தான் உண்மையான அன்பு என்று எண்ணினாள்.

என்றாவது ஒரு நாள் இளவரசன் அவன் நிலையில் இருந்து முழுவதுமாக இறங்கி வருவானா என்று ஏங்கினாள் இனியா.

அன்று எப்படி நடந்துக் கொண்டான். ஒரு பெண்ணிடம் எனக்கு பணமில்லையா, அழகில்லையா என்று கேட்பது எவ்வளவு அசிங்கம். ஒரு பெண் ஒரு ஆணை இதை எல்லாம் வைத்தா விரும்ப வேண்டும். அது அந்த ஆணிற்கு தானே அசிங்கம். இந்த பணம், அழகை வைத்து தான் ஒரு பெண் ஆணை ஏற்கிறாள் என்றால் அது அவர்களின் தன்மானத்திற்கு பெரிய அடி இல்லையா.

அதை எல்லாம் விட அவர்களின் குணம் எவ்வளவு முக்கியம். எல்லோரையும் போல் அவனும் என்னிடம் என்ன குறை என்று கேட்கிறான். ஒரு பெண்ணின் நிலை அவனுக்கு தெரியவில்லை. தான் சொன்னால் பெண் கேட்க வேண்டும் என்ற இந்த ஆண் சமுதாயத்தின் எண்ணம் அவனுக்கும் இருக்கிறது என்று வருத்தத்துடன் எண்ணினாள். என்றாவது இந்த நிலை மாறுமா. இப்போது இந்த சீரியலை பார்க்கும் எண்ணமும் அவளுக்கு போய் விட்டது.

அந்த ஹீரோ அவளுக்கு இளவரசனை தான் நினைவு படுத்தினான். வருத்தத்துடன் லேப்டாப்பை ஆப் செய்து விட்டு எழுந்து கீழே வந்தாள் சந்துரு வந்திருந்தான். அப்புறம் எல்லோரும் அவனிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ளவரசனுக்கு அன்று அந்த பாரீன் கிளைன்ட்சுடன் மீட்டிங் இருந்தது. எப்படியோ எல்லா நினைவுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு எப்படியோ அதை ஒழுங்காக செய்து விட்டான். அந்த காண்ட்ராக்ட் சைன் ஆகி விட்டது. அவன் அந்த காண்ட்ராக்ட் எப்படியாவது சைன் ஆகி விட வேண்டும் என்று முழு மனதுடன் ஈடுபட்டான். ஏனெனில் இனியா திரும்ப பேசிய பிறகு இந்த காண்ட்ராக்ட்டை பற்றி கேட்பாள் என்பதால் தான் அதற்கு அவ்வளவு சிரமப்பட்டு அதை வெற்றிகரமாக முடித்தும் விட்டான்.

ஆனால் அந்த சந்தோசத்திற்கு பதிலாக அவனுக்கு ஏனோ சோர்வாகவே இருந்தது. மனதிற்கு சந்தோசம் என்பது துளி அளவும் கிடையாது. வழக்கமாக இப்படி எதாவது காண்ட்ராக்ட் சைன் ஆனால் அவன் வீட்டில் அம்மாவையும் சந்துருவையும் கூட்டிக் கொண்டு வெளியே எதாவது ரெஸ்டாரன்ட்டிற்கு போய் அதை என்ஜாய் செய்து விட்டு வருவான். ஆனால் இன்று அது முடியாது போல தோன்றியது.

அவன் மனம் இப்படி சோர்கையில் மொபைலை எடுத்து பார்த்தால் சந்துருவிடம் இருந்து நிறைய முறை கால் வந்திருந்தது. என்னவாக இருக்கும் என்று என்னுகையிலே அவன் இன்று இனியா வீட்டிற்கு சென்றிருப்பான் என்பது அவனுக்கு நினைவு வந்து மனம் குதூகளித்தது.

அந்த சந்தோசத்துடனே அவனுக்கு கால் செய்தான். அவனிடம் எடுத்த வுடனே இனியாவை பற்றி கேட்க வேண்டாம் என்று எண்ணியவாறே உற்சாகமாக இன்று காண்ட்ராக்ட் சைன் ஆனதை பற்றி கூறினான்.

ஆனால் சந்துரு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் “அண்ணா அதை விட பெரிய விஷயம் உனக்கு இருக்கிறது. நீ இப்போது எங்கிருக்கிறாய்” என்றான்.

“ஏன்டா நான் வள்ளுவர் கோட்டம் பக்கத்தில் இருக்கிறேன். என்ன விஷயம்” என்றான்.

“ஓகே. நான் இங்க PVR பக்கத்துல தான் இருக்கேன். நாங்க எல்லாம் மூவி போக போறோம். நீயும் வரியா” என்றான்.

“இல்லடா. நான் வரல. ஐ யம்      டையர்ட். அது சரி நாங்க எல்லாம்னா யாரெல்லாம் போறீங்க. அம்மா வரங்களா” என்றான்.

“ம்ம். அம்மா வராங்க. இன்னும் நிறைய பேரு வராங்க. உனக்கு நிறைய சர்ப்ரைஸ் எல்லாம் இருக்கு. நீ கண்டிப்பா வரணும்.”

“என்னடா சர்ப்ரைஸ்னு எல்லாம் சொல்லிட்டு என்னன்னு சொல்லுடா.”

“இல்லன்னா. அது உனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸா தான் இருக்கும். அதனால நீ வா அண்ணா. அம்மாவும் உன்ன கண்டிப்பா வர சொல்றாங்க”

“சரி ஓகே. இங்க டிராபிக்கா இருக்கு. நான் வர கொஞ்சம் லடே ஆனாலும் ஆகலாம்” என்றான்.

“ஓகே. அண்ணா. நீ வந்தா போதும்.”

“ஓகே.”

டிராபிக்கில் மாட்டி இளவரசன் PVRக்குள் செல்லும் போது படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு பிறகு தான் சென்றான். அவனுக்காக சந்துரு வெளியிலேயே காத்திருந்தான்.

இளவரசன் வந்து சேர்ந்து அவர்கள் உள்ளே போன பிறகு அவனுக்கு சீட் காண்பித்து அமர்ந்த இளவரசன் அதிர்ந்தான். ஏனெனில் அவன் அங்கே அவன் அம்மாவிற்கு பக்கத்தில் இருந்தது இனியா.

அவன் கண்களை கசக்கி கசக்கி பார்த்தாலும் அவள் அங்கே தான் இருந்தாள்.

இளவரசனுக்கு படத்தில் கருத்து பதியவே இல்லை. அவன் எண்ணிக் கொண்டிருந்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான் “இது கனவா நினைவா”.

“இது கனவா நினைவா” 

தொடரும்

En Iniyavale - 09

En Iniyavale - 11

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.